கதைக்கு கடைசியில் ஒரு பரிசுக் கேள்வியும் கேட்டுள்ளோம். அதையும் கண்டு சரியான பதிலைக் கண்டுபிடித்து கருத்துரையாக பதியவும்.
வேலை முடிந்து குடிசைக்குள் நுழைந்த சாமிக்கண்ணு திகைத்துப் போனான். அவன் மனைவி கண்ணாத்தா தன் வாயில் ஒரு விரலை வைத்து, அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள்.
"ஹோம்வொர்க்கை முடிச்சுட்டு மதியத்திலிருந்து இந்த வேலைதான் பார்த்தான் குமாரு... எப்படியிருக்கு? நெசம் போலவே இருக்கு இல்லே?"
மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் அவன் மகன் நன்றாய் ஓவியம் வரைவான் என்பது அவனுக்குத் தெரியும். அவனே பெருமையாக மகன் பேப்பரில் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களை தெரிந்தவர்களிடம் காட்டுவான்.
குமார், அந்தக் குடிசையின் மூலையில் இப்படி தத்ரூபமாக மெத்தை போலவும், தலையணை போலவும் வரைந்து, அதன் மீதே போர்வை போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்ததைக் கண்டதும் கண் கலங்கித்தான் போனான் சாமிக்கண்ணு.
பா. ஸ்ரீராம்
= = = = =
( இந்தக் கதைப் பக்கத்தில், மொத்தம் எவ்வளவு கண்கள் இருக்கின்றன என்று யாராவது சரியாகக் கண்டுபிடித்து சொன்னால் அவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது! ::: கௌதமன் )
= = = =
எனக்குத் தெரிந்து ஏட்டுக் கண்கள் தான் இருக்கின்றன/கிடைத்தன. பரிசை யார் வேண்டுமானாலும் வெல்லட்டும். வெல்பவர்களுக்குக் கண்ணான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநன்று.ஓவியம் சிறப்பூ
நீக்குநன்றி!
நீக்கு// ஏட்டுக் கண்கள் தான் இருக்கின்றன-- // போலீஸ் கண்கள் தெரியும் - ஏட்டுக் கண்கள் ??
நீக்கு5?
பதிலளிநீக்கு7.
பதிலளிநீக்குNo correct answers so far.
பதிலளிநீக்குஓவியமும் ஸ்ரீராமின் கற்பனையும்
பதிலளிநீக்குமிக அற்புதம்.
நன்றிம்மா.
நீக்கு'கண்கள்' என்று எடுத்துக் கொண்டால் ஒன்று கூட இல்லை; "கண்"என்று எடுத்துக் கொண்டால் தலைப்பையும், ஆசிரியர் குறிப்பையும் சேர்த்து ஒன்பது வருகிறது.
பதிலளிநீக்குநன்று. ஆனால் விடை தவறு.
நீக்குகதைத் தலைப்பில் "கண்" ஒன்று. இடுகை தலைப்பாக வருவதில் ஒன்று. உங்கள் விளக்கத்தில் 2 + 2. நான்கு "கண்" கள். கதையில் ஐந்து "கண்" கள்.
பதிலளிநீக்குஎங்குமே "கண்கள்" இல்லை.
மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் கதையைப் படிப்பதைவிட போட்டி முக்கியம் என எண்ணிய உங்களை என்ன செய்வது?
// மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் கதையைப் படிப்பதைவிட போட்டி முக்கியம் என எண்ணிய உங்களை என்ன செய்வது?// ஆ !! ஸ்ரீராம் என்னை மன்னிக்கட்டும்.
நீக்குஒரு கேள்வி கேட்கிறேன் நெ த - ஒருவர் நம்மிடம், ' உங்களுக்கு எவ்வளவு கண்கள் ?' என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்?
நீக்குஒருத்தர் நேரடியாக கேள்வி கேட்காமல், பொடி வைத்து ஒரு போட்டிக் கேள்வி வைத்தால் நாம் என்ன பதில் எழுத முடியும்? இரண்டு என்றுதான் சொல்லமுடியும். திருக்குறளே,
நீக்குகண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர்
என்று சொல்வதால்
அந்தப் பையனின் படத்தில் ஒரு கண்ணை மட்டும் வரைந்திருந்தாலும், அதனை 'கண்' என்ற விதத்தில் சேர்க்கமுடியுமா? அதாவது படத்தில் ஒரு கண், கதையில் ஐந்து, உங்கள் விளக்கத்தில் 4, இடுகைத் தலைப்பில் 1, வெப் சைட்டில் இடுகைத் தலைப்பாக வருவதில் ஒன்று (இதைக்கூட drop செய்துவிடலாம்)
நீக்குநன்றி நெல்லை.
நீக்குயதார்த்தமான கற்பனை. அதற்கு ஸ்ரீராமிற்குப் பாராட்டுகள். கதையில் வரும் 3 கதாபாத்திரங்கள் படிக்கும் எங்கள் கண்கள் சேர்த்து 8 கண்கள்! இது எப்படி?
பதிலளிநீக்குபதில் நல்லா இருக்கு; ஆனால் தவறு! பாராட்டுக்கு நன்றி!
நீக்குநன்றி ரஞ்சனி அக்கா.
நீக்குமொத்தம் பத்து. இது சரியாகத்தான் இருக்கும்...
பதிலளிநீக்குஇன்னும் அதிகம்.
நீக்குஆறுமுகம் வந்துதான் பதில் சொல்லவேண்டும்! அதுசரி.. கடைசியில் கதை அனாதையாகிப் போனதே!!!
பதிலளிநீக்குகதைக்கு பாராட்டுகள் நிறைய வந்துள்ளனவே !! பார்க்கவில்லையா?
நீக்குஸ்ரீராம் பொறுமையை இழந்துவிட்டார். எனவே, கண் எண்ணிக்கை பரிசை nearest answer சொன்ன நெல்லைத்தமிழனுக்கே கொடுக்கிறேன். நன்றி, வணக்கம்!
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் mobile ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளது. எங்கள் பரிசு.
நீக்கு50 + 51 - எப்போ உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் போறேனோ தெரியலை.
நீக்குபடம் நல்லா வரைந்திருக்கீங்க.
சின்ன வயசுல, நம்மைவிட பணமுள்ளவர்களுக்கு (மற்றும் செலவழிக்க மனமுள்ள பெற்றோருக்குப்) பிறந்த பசங்கள் அனுபவிப்பதை நினைத்து ரொம்பவே மனசுல தாக்கம் இருந்தது. இப்போ பழசை நினைக்கும்போது, அப்படி இருந்ததால் என்ன குறைந்துபோயிட்டோம்...அப்போதிருந்த நண்பர்கள் அனுபவிக்காதவைகளை பிற்காலத்தில் அனுபவித்தோமே என்று நினைத்துக்கொள்கிறேன்.
என்னிடம் ஜேவிசி 50 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டி சென்னைல இருந்தது. என் பெண்ணின் கூட படிக்கும் பையன் அவனுடைய வீட்டுக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னதால் விற்றுவிட்டேன். அதற்கு மறுநாள் எங்கள் வீட்டிற்கு தரையை மெழுகி பெருக்கி உதவி செய்துகொண்டிருந்தவர், அவர் 13,000 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேனே, நீங்க 10,000க்குக் கொடுத்துவிட்டேன் என்று சொல்றீங்களே என்றார். நான் சொன்னேன், உங்களுக்குக் கொடுக்க நான் நினைக்கலை, விற்கத்தான் நினைத்தேன்.. உங்களுக்கு 10,000 ரொம்ப அதிகம், நிச்சயம் கொடுத்திருக்கமாட்டேன் என்றேன்.
துக்கடா கதையிலும் கடைசி பத்தியினால்தான் கதை மனசில் நிற்குது. ஸ்ரீராமுக்கு பாராட்டுகள்.
நன்றி, நன்றி! ஒவ்வொரு வாரமும் இங்கே படைப்பாளிகளுக்கு அவல் பதிவு போட இருக்கின்றேன். படித்து, பங்கேற்று சிறப்பிக்கவும். நன்றி.
நீக்குநல்ல கதை. மனதைத் தொட்டது. பாராட்டுகள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு