திங்கள், 11 ஜனவரி, 2021

படத்துக்கு கதை . கவிதை மற்றும் படைப்பாற்றல் திறன்

 

இங்கே நான் கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். 


இதைப் பின்னணியாகக் கொண்டு கதை / கவிதை / கட்டுரை ஏதாவது எழுதி அனுப்புங்கள். 

படம் வரையும் திறமை உள்ளவர்கள், இந்தப் படத்தை காப்பி செய்து, அதனோடு உங்கள் கற்பனை கோடுகள், வண்ணங்கள், வடிவங்கள் சேர்த்து அனுப்பலாம். 

உங்கள் படைப்பாற்றல் திறமையைக் காட்டுங்கள்! 

வாழ்த்துகள்!

= = = =  

10 கருத்துகள்:

 1. அழகான படம் . திரைச்சீலையோ? .பச்சை நிறம் செழுமை.

  மரத்தில் படர இயலாத கொடி
  தன் இலைகளை ஜன்னல் திரையில்
  பரவ விட்டதோ!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லா இருக்கு உங்கள் கற்பனை. நன்றி.

   நீக்கு
  2. நல்ல எழுதியிருக்கீங்க வல்லிம்மா......

   மரங்கள் வளர்ப்போம் மரங்கள் வளர்ப்போம்
   என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு
   இலைகள் செடிகள் படங்களாக
   படுக்கை விரிப்பில் பிரிண்ட் பண்றாங்களே.

   கொஞ்சம் யோசித்து என்ன contribute பண்ணலாம்னு பார்க்கிறேன்

   நீக்கு
  3. // கொஞ்சம் யோசித்து என்ன contribute பண்ணலாம்னு பார்க்கிறேன்// வரவேற்கிறோம் !

   நீக்கு
 2. கத்திரிக் கோலைக் கண்டதும்
  துள்ளி விலகும் இளந்தளிர்கள்.

  பதிலளிநீக்கு
 3. கற்பனை வழிந்தோடட்டும். பதிவுகளைக் காணும் ஆவலுடன் நானும்!

  பதிலளிநீக்கு
 4. விதைக்குள் தான்
  விழுது மரம்..
  வெட்டுகிற கோடரி
  அறிவதில்லை..

  படம் என்றாலும்
  பசுமை என்பதை
  கத்தரிக்கும் கத்தரியும்
  கற்றிருப்பதில்லை...

  பதிலளிநீக்கு