மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 1
எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம்.
மின்நிலா பொங்கல் மலரைப் பற்றிய என் கருத்துகள்.
மிகவும் அழகியமலர். ஆனால் நீண்டது. மிகவும் விஷயங்கள் அடங்கியது.
ஸாதாரணமாக ஒரே மூச்சில் என்போன்ற வயதானவர்களால் படிக்க முடியவில்லையே தவிர வேறொன்றும் இல்லை.
பஞ்சக்கர ஆனை பதம் பணிவோம். அருமையான பாமாலை. நாமும் பதம் பணிவோம். சூரியப்பிரகாஷ் அவர்களுக்கு நன்றி.
அருண் ஜவர்லால், இதயம் பேத்துகிறது என்ற வலைப்பூவின் ஆசிரியர் ஜவர்லால் அவர்களின் மகன் என்று நினைக்கிறேன். அப்படியா?
மிகவும் அருமையான படங்கள் மலர் முழுவதும். இதை முதலில் எழுதவேண்டும்.இது வார்த்தைக்காக இல்லை. மனது பூராவும் அதே எண்ணம்.. வாழ்த்துகள்.
இன்னும் நான் மலர் பூராவும் வாசிக்கவில்லை. கைபேசியில் அநேகத் தொல்லைகள் .ஸரியாகக் கையாளத்தெரியாத என்னுடைய திறன்.
கீதா ஸாம்பசிவம் அவர்களின் பொங்கல் வழிபாடு. ஆன்மீகப் பொங்கல். ஸூரிய வழிபாடு. இவைகள் பற்றி தொன்று தொட்டு வரும் நம்பிக்கைகளும் பாதைகளும் அழகான கருத்துள்ள கட்டுரை. இதைவிட அழகாகச் சொல்ல விஷயங்களே கிடையாது. அவ்வளவு கோர்வையாகச் சொல்லி இருக்கிறார்.
அந்தநாள் பொங்கல் மீண்டும் வாராதா? தேவராஜன் ஷண்முகம்.
அந்தந்த மாவட்டத்தை வைத்து இருந்த ஊரின் நினைவுகளை அனுபவித்தவர்களே, எழுதமுடியும். அந்த வகையில் நாகை மாவட்டத்தை அனுபவித்துப் பார்க்க இந்தக் கட்டுரை. அன்று அனுபவித்த ஸந்தோஷங்களை இன்று எழுத்தில் கொண்டு வருவதற்குக் கூட கற்பனைகள் இல்லாத மனக்கண்ணில், கனவுகள் நினைவாக வர வேண்டும்.
அடுத்தடுத்து நிகழ்வுகளைப் பார்வையில் கொண்டு வருகிறார்.
திரவியம் என்ன என்பதை அறிந்து கொள்ள எங்கேயோ போய்விட்டு எங்கயோ வந்து மதராஸிலிருந்து தஞ்சைக்கு ரயிலேறி விட்டோம். உறவுகள் அப்பா. அருமையான கதை.
ஒரு அக்கிரஹாரத்தின் பொங்கல் நினைவுகள். நான் எழுதியது. ஒரு சின்னப் பெண்ணின் அந்த வயது நிகழ்வுகள்.. இதுதான் அதன் ஸாரம். அவ்வளவுதான் இருக்கும். அதுவும் கட்டுப்பாடான குடும்பம் அல்லவா? இது ஒரு இடைச் சொருகல்.
ஊர்கள் படப்புதிர் நானும் தேடினேன். அருமை. பானுமதி வெங்கடேஸ்வரன். அவரின் கதையும் அருமை.
உணர்ச்சிகரமான ஐயா பொங்கலை நாமும் தேட ஆரம்பித்து விட்டோம். தன் பழைய கதைகள் வேண்டாமென்றா? புதுமனிதனாகவே இருக்கட்டும்.பெயர்க் காரணம் ஆகுபெயர். அசத்தல். தேவராஜன் சண்முகம்.
நெல்லை மாவட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாத எனக்கு அருமையான விவரங்கள். கூடவே அவ்விடத்திய பேப்பர் தோசை இலையில் சுற்றி வாங்க, லாலாக்கடை ஹல்வாக்கள் , பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஜங்ஷன் மனது லயித்துப் போய்விடுகிறதென்று சொன்னால் மிகையாகாது. நெல்லையின் பழைய நினைப்புகள் எனக்குப் புதிய நினைப்புகளாக மாறிவிட்டது. அழகிய வர்ணனை. நெல்லைத் தமிழன்.
ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதற்காக தன் பெண்ணைச் சொன்னது. அழகைக் குறைக்க எடுத்த விபரீதம். கயவர்களின் பார்வையில் தப்ப, குடும்பத்தைக் காக்க அழகைக் குலைத்தவிதம். அப்பாடீ! சியாமளா வெங்கட்ராமனின் கதை உருக்கம்.
.தில்லிக் குளிரில், பொங்கல் விழா, பல் கிட்டுகிறது .அருமைக் கட்டுரை. டில்லிப் பொங்கல். ஆதி வெங்கட்.
தந்தையாக மாறிய அண்ணா.. என்ன அருமையான உதாரண வாக்கியங்களுடன் கூடிய கதை அருமை அண்ணா. பாசம். இளைப்பாற வந்தவர்களுக்கு எல்லா ஸுகமும் கொடுக்கும். மாலா மாதவன்.
பொங்கல் வரலாறு, கொண்டாடும் விதம்.ஒருவிஷயம்கூட விட்டுப்போகாமல் எழுதியிருக்கும் பாங்கு. ஞாபகமாக யாவரும் குறித்து வைத்துக் கொள்ளலாம். தகவல் களஞ்சியம்தான்.
பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகளின தாத்பர்யம் அருமையான தகவல். இனிப்பான அக்கார வடிசலும் கூட. கீதா சாம்பசிவம்.
எம் தில்லை நாயகத்தின் பொங்கல் பண்டிகை ஸமயங்களில் சுற்றுச் சூழல் காப்போம் அவசியமான விஷயங்கள். விசேஷமாகக் கடைபிடிக்க.
(தொடரும்)
காமாட்சி அம்மா போலவே கச்சிதமாக அமைந்த விமரிசனம்.
பதிலளிநீக்குசீரான கருத்துகளை மிக அருமையாக
உரைக்கிறார். அவர் சொல்வது போலவே நீண்ட உரைகளைப்
படிப்பது சிரமம் என்றாலும்
தானும் படித்துக் கருத்துச் சொல்லும் அழகையும் கொண்டிருக்கும்
உள்ளத்திற்கு அன்பு வாழ்த்துகள்.
மிக நன்றி காமாட்சி மா.
ஆம், சரியாகச் சொன்னீர்கள்.
நீக்குமிக்க நன்றி அன்புடன்
நீக்குமிக அருமையாகச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள் அம்மா. நல்லதொரு விமரிசனம். தொடரக் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குகாத்திருப்போம்.
நீக்குஎப்படி இருக்கிறது சொல்லுங்கள் நன்றி அன்புடன்
நீக்குசுருக்கமாகவும், கொஞ்சம்எழுதுவது கஷ்டம் என்றபோதும் ஆர்வமாக நெடிதாக எழுதிய விமர்சனம்... நன்று. மொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்வோம்.
நீக்குமிக்க சந்தோஷம் நன்றிகளும் அன்புடன்
நீக்குசிறப்பான விமர்சனம் அம்மா.
பதிலளிநீக்குஅவர் சார்பில் நன்றி.
நீக்குமிக்க நன்றிகள் உங்கள் யாவருக்கும் அன்புடன்
நீக்கு// அருண் ஜவர்லால், இதயம் பேத்துகிறது என்ற வலைப்பூவின் ஆசிரியர் ஜவர்லால் அவர்களின் மகன் என்று நினைக்கிறேன். அப்படியா?//
பதிலளிநீக்குஆமாம்.
இதயம் பேத்துகிறது மூலம் ஜவர்லால் அவர்களை பின்னூட்டங்கள் மூலம் தெரியும் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன்
நீக்குகாமாட்சி அம்மாவின் பொங்கல் மலர் விமர்சனம் பார்ததும் முமுதும் படிக்காத குற்றம் உணர்வு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குவிமர்சனம் மிக அருமையாக செய்து இருக்கிறார்கள்.
நானும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படித்தேன்பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அன்புடன்
நீக்குதிரவியம் சிறுகதைக்குத் தங்கள் அன்பான கருத்துரை.. மகிழ்ச்சி.. நன்றியம்மா..
பதிலளிநீக்குஅழகிய கதைகள் யாவற்றிற்கும் யாவரின் அழகான பின்னூட்டங்கள் வரும் மிக்க சந்தோஷம் ஆசிகள் அன்புடன்
நீக்கு