வியாழன், 18 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 2 - எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம்

 மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 2  

எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம். 

வீட்டு வேலைக்காரராக பொறுப்புள்ள  ஒரு நபரின் தாயில்லா மகளிடம் , தாயைப்போல் பரிந்து அன்பு செலுத்துவது, உவமையில்  மருதாணி அடையாளம் காண்பிப்பது போல நல்ல வாஸனையுடன் அழகாக எழுதப்பட்ட தாயன்பு. அருமையான கதைகளின்   படைப்பாளியினுடையது. துரை செல்வராஜ். 

கூட இருந்து பாசத்தைக் கொட்டி வளர்த்திய  அக்கா மகளை, மகளைப்போல வளர்த்து, மனைவியாக்க நினைக்காத உள்ளம்.. அதையறிந்த அக்காமகளின் மனப்பாங்கு..  ஆசைக்கோட்டைகளைக் கட்டினாலும், உணர்ந்து பேசிய,, உணர்ச்சிக் குவியலான கதை.  பரிவை சேகுமார்.

அதிகம் வரிசையாக  எழுத முடியவில்லை. ஸரி எது மனதில் வருகிறதோ அதை எழுதுவோம் என்று முடிவு பண்ணி விட்டேன் அந்த வகையில் - 

பீட்ரூட் தொக்கு.  --- பீட்ரூட் தொக்கு செய்யச் சிறிய அளவில்  செய்முறை கொடுத்திருப்தால் யாவரும் உடனே செய்து பார்க்க  மனம் வந்துவிடும்.  துருவி, வதக்கி .  அரைத்து. ருசியாக அருமை. சுபஸ்ரீஸ்ரீராம்.

சிரோட்டி----ராக்கெட்டில் போய் செய்தது. உயர்தரமாக இருக்கிரது. அழகாகப்பதிர் போட்டு, அதை அடுக்கி இடும் முறை, மற்றும் யாவையும் அழகழகாக படங்களுடன்  இப்பொழுதே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றுவித்து விட்டது. ஈஸியான செய்முறை..  புதிய குறிப்பு. கீதா ரங்கன்.

மோர்க் குழம்பு சாதாணமாக  பச்சையாக ஊறவைத்து அரைத்துதான் செய்வது வழக்கம். தேங்காயையும்  அப்படிதான். பச்சைமோர் என்றால்  வெந்தயம், துவரம்பருப்பு மிளகாய் வறுத்தறைப்போம். தேங்காயும்  சிவக்க வறுத்தறைத்துச் செய்வது புதிய முறையாக  இருக்கிறது. ருசிக்குக் கேட்பானேன்.----- ரேவதி நரஸிம்மன். காய்களும் அவரவர் விருப்பம். சிறிய வயது அநுபவம்.

பலதேசத்து ஊறுகாய் வகைகள், எதில் செய்கிறார்கள் என்ற ஸ்வாரஸ்யமான தகவல்கள். நம் தென்னிந்தியாவில் காய்கறி ஊறுகாய்கள் அதிகமில்லை. சீதோஷ்ணம் காரணமாக இருக்கலாம். இங்கும் வெரைட்டிகளும்,தரமும் அதிகம்..தில்லை நாயகம். பலவிஷயங்கள் ஊறுகாயே!!

ஊறுகாய்கள் உப்புக்குச் சப்பாணி. எவ்வளவு ஒத்துப் போகிறது. மாங்காய்  எலுமிச்சங்காய், கடாரங்காய் நாட்பட இருக்கும்.  மாகாளி வருஷம் இரண்டானாலும் கெடாது. போடுகிற மாதிரி போட்டால்.  அருமையான  கலெக்க்ஷன். ஊறுகாயும் பலே பலே.! நம் தென்னிந்திய ஊறுகாய்களில் வினிகர் சேர்ப்பது இல்லை. எண்ணெயும் உப்பும் அதிகம்.  மகிமை   நெல்லைத் தமிழன். 

அம்மாவின் ஊறுகாய் நினைவுகள்.—நாரத்தங்காயைப்பற்றி படிக்கும் போது நானும் அதைச் செய்து அனுபவித்த  நினைவுகளும், போட்ட அநுபவங்களும் ஞாபகம் வருகிறது.  தேவராஜன்  ஷண்முகம்.

ஊறுகாய் என்றால்  பானுமதியின் கதைகளும், பிரச்சினைகளும் ஞாபகம் வருகிறது.  நானும் நாரத்தங்காய்ப்பிரியை.  நன்றி பானுமதி வெங்கடேச்வரன்.

ஊறுகாயிலுள்ள ஸத்து, அஸத்துக்களை விளாசியிருக்கிரார் எம் தில்லை நாயகம்.

கவிதை வடிவில் ஊறுகாயுடன் உபமானஙகள் கவிதை வடிவில்  சூரியப் பிரகாஷ் k. g. y. ராமன்.  அழகு கவிதை. 

வெந்தய ஊறுகாய்  காமாட்சி மஹாலிங்கம்..  அட இன்னும் எவ்வளவோ எழுதி  இருக்கலாம்..  வயது காரணம். ஆற்றாமையாக இருக்கிறது. ஏன் என்றால் இது நானே. அதான். இன்னும் வேண்டியவர்கள் காரம், மஸாலா  அதிகம் சேர்க்கலாம்.

ஸோமாலியா மொகதிஷு அயல் நாட்டுக் கதை.  ஏகாந்தன் மிக அழகாக  அநுபவித்து  எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்காவின்  ஒரு தேசம்.  வர்ணனைகள், இடங்கள். பார்ட்டிகளில் அவ்விடத்தியவர்களின் பாடல் வர்ணனைகள்,  ஸாமானியப் பெண்களின் வர்ணனைகள். நாமும் அவருடன் போனமாதிரி  எண்ணம் ஏற்படுகிறது.  ஆப்பிரிக்காவில் லொஸேத்தோ என்ற நாட்டில்  என் மகனுடன் இருந்தபோது அனுபவித்த அதே நினைவுகள்.  என்ன இங்கு நிறம் வேறுபோலத் தோன்றுகிறது. அநுபவம் பேசுகிறது. ஏகாந்தன். 

இரட்டைக் குழந்தைகளை,  கரு தரித்த முதல் மனதிலேயே வளர்த்து விட்டு மகனை  பிறக்கும் போதே  இழந்ததை ஜீரணிக்க முடியாமல் அல்லல் பட்ட உருக்கமான கதை. அதுவும் அப்பா. அன்பு மகள்.  அமானுஷ்யமான கதை. அப்பாதுரை. அவர்களின் கதை  மனது நெகிழ்ந்து விட்டது.

கேள்வி பதில்கள்  இவருடையது  சொல்லவே வேண்டாம். உலகத்தரம் வாய்ந்தவை.

மாலை மயங்குகின்ற நேரம்.   படித்த பிறகு நான் அவரை நேரில் பார்த்திருந்த படியால்  மனது மிகவும் தவித்தது. உருக்கமான பாசத்தின் நெகிழ்வின்  உண்மைக்கதை.  ரஞ்சனி நாராயணன். 

வந்து விட்டார்  வ.வ.ஸ்ரீ.  நீண்ட அழகான கதை. மூக்குப் பொடியை  அடிநாதமாகக் கொண்ட கிளைக் கதைகளைக் கொண்ட  கதை. எல்லா ரஸங்களையும் உள்ளடக்கியது வழுவட்டை. மஹாத்மியம். எவ்வளவு விஷயங்கள். கதையினூடே நாமும் துபாய்க்கும் போய்விட்டு வந்து விட்டோம். அலுக்காது கதை நீளுகிறது.   வழுவட்டை  எழுச்சி வலம் வருகிரது. வை.கோ அவர்களின் கதை அருமை. 

மன்னிப்பு. பாசமான தம்பதிகளின் ஊடல்க் காவியம் என்றே சொல்லலாம். ரிஷபன் எழுதியது. இளம் வயது. அனுபவிக்கும்  ஊடலா? ரஸனை.

விட்டில் பூச்சி.  மாடலாக இருந்தால் என்ன?  ஸ்வயம்வதா அருமையான மனப்போக்கும், துணிவும் கொண்ட பெண்.  நன்கு. இது ஒருகோணம்.. மாலா மாதவன் .

என்னை பேசச் சொன்னால் வேகமாகப்பேசக்கூடிய திறனை நார்மலாகக் கொண்டுவரப் பாடுபட்டதைச் சுவைபட அழகாகச் சித்தரித்துள்ளார் பானுமதி வெங்கடேசுவரன். 

(தொடரும்) 

10 கருத்துகள்:

  1. ரசித்துப் படித்திருக்கிறீர்கள். மிக அருமையான நல்ல அலசல் அம்மா. எல்லோருக்கும் சுருக்கமான கருத்தைக் கொடுத்ததும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? மிக்க ஸந்தோஷம். இது ஒருநாளில் எழுதியது இல்லையம்மா. ஒரு உத்வேகம். நாமும் ஸரியாக எழுதவேண்டும் என்று.யாவும் ஆசிரியர் கௌதமன் அவர்களுக்கே இதை வெளியிடுவதில் ஆர்வம் கொடுத்தமைக்கு.. நன்றி. அன்புடன்

      நீக்கு
  2. ரொம்ப நெடியதா விமர்சனம், ஆர்வமா எழுதியிருக்கிறீர்கள் காமாட்சி அம்மா... பாராட்டுகள்.

    ஒரு இனிப்பு செய்முறை (நேபாளி இனிப்பு) எழுதுங்கள். தமிழ் புத்தாண்டு மின்னூலில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வம் இருந்தது உண்மை. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. நெடியதாக இரு்பபதால் பிரஸுரமாகாது என்றே நினைத்தேன். இதுதான் உண்மை. அன்புடன்

      நீக்கு
  3. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா.

    நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தொடர்ந்து பாருங்கள். ஸந்தோஷமாக இருக்கும். எல்லோருக்கும் பதிலளிக்க எனக்கு இது ஒரு ஸந்தர்ப்பம். அன்புடன்

      நீக்கு
  4. எனது சிறுகதை பற்றி - தங்கள் அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வாய்ப்பைக் கொடுத்த கௌதமன் அவர்களுக்கு நானும் சேர்ந்து நன்றி கூறி மகிழ்கிறேன்.. உஙகள் சுய விவரத்தை பலமுறை படித்தேன் ஸந்தோஷம். நன்றியும் அன்புடன்

      நீக்கு
  5. அனுபவித்து வாசித்தது உங்களது வார்த்தைகளில் தெரிகிறது. சிரமம் பார்க்காமல் விபரமாக, விமரிசனம்/பாராட்டுகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள் பல.
    நானும் எழுதத்தான் நினைக்கிறேன். நாட்கள் என்னை மிரட்டுகின்றன. துரத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கெல்லாம் பதிவு சீக்கிரமாக பதிவு செய்யும் ஆற்றல் இருக்குமே! நான் ஒருவிரலால் பதிவு செய்வதால் நேரம் அதிகம் எடுக்கும் என்று நினைத்துக் கொள்வேன். நீங்கள் வந்து கருத்து சொன்னது மிக்க மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு