செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் 2021 வாசகர் விமர்சனம் - எம். தில்லைநாயகம்

 

மின்நிலா பொங்கல் மலர் 2021 வாசகர் விமர்சனப் போட்டி.   

எம். தில்லைநாயகம்                     

வணக்கம்.

முன்பக்க பின் அட்டை படங்கள் தங்கத்தில் வைரம் பதித்ததுபோல் சிறப்பாக இருந்தது, ஓவியமாக வரைந்த திரு. அருண் ஜவர்லால் அவர்களுக்கு பாராட்டுக்கள். 

சூரிய பிரகாஷ் வழங்கிய 1. பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்  2. என் இதயப் பெண்ணே" . 3. பூமித்தாய்க்கு வணக்கம். கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் . நான் ஒரு தமிழ் ஆர்வலர் என்று கூறி பெயரை ஆங்கிலத்தில் 2 கட்டுரைகளில் உள்ளது தமிழில் கொடுத்திருக்கலாம் .

கீதா சாம்ப சிவம்  வழங்கிய 1. ஆன்மீகப்  பொங்கல்: புராணதகவல்கள் சிறப்பு., 2. பொங்கல் பண்டிகை வரலாறும் - கொண்டாடும் விதமும். சிறப்பு,    3. பக்தியா? ஆன்மீகமா? இரண்டும் ஒன்றா?  நல்ல விளக்கம் .    

SRIPADMAM GOSALAI (advt) கடின உழைப்பு இறைப்பணி வாழ்த்துக்கள். 

தேவராஜன் சண்முகம் வழங்கிய 1. அந்த நாள் பொங்கல் மீண்டும் வராதா? நன்றாக இருந்தது YES, OLD IS GOLD . 2. அய்யா பொங்கல்!  சிறுகதை &                  3. அம்மாவின் நினைவு ஊறும் ஊறுகாய்: ருசியாக இருந்தது. 

துரை செல்வராஜு வழங்கிய திரவியம்.  ,& மருதாணிச் சித்திரம். – சிறுகதை சிறப்பாக இருந்தது

காமாட்சி மாஹாலிங்கம் வழங்கிய ஒரு அக்ரஹாரத்தின் பொங்கல் நினைவுகள் நன்றாக இருந்தது, காஸ் ஸ்டவ், சில்வர் பாத்திரத்தில் பொங்கல் படம் தவிர்த்திருக்கலாம்.

நெல்லைத்தமிழனின் ஒப்புக்குச் சப்பாணி : சிறப்பாக இருந்தது. 

2. பழைய நினைப்புதான் பேராண்டி OLD IS GOLD படங்களுடன் நன்றாக இருந்தது.

பானுமதி வெங்கடேஸ்வரன் வழங்கிய ஊறுகாய் என்றால் &    2. என்னை பேசச் சொன்னால் சிறப்பாக இருந்தது. 

சியாமளா வெங்கட்ராமனின் அழகி :: சிறுகதை நன்றாக இருந்தது. 

ஆதி வெங்கட் வழங்கிய டெல்லிப் பொங்கல் :: 

டில்லியில் கொண்டாடிய பொங்கல் விழாவிற்கு பாராட்டுக்கள். 

மாலா மாதவனின் அன்புள்ள அண்ணா - சிறுகதை :: சிறப்பாக இருந்தது. 

எம். தில்லை நாயகம் வழங்கிய {1. பொங்கல் கொண்டாட்டங்களில் சுற்றுச் சூழல் காப்போம், 2. உலகளாவிய ஊறுகாய் வகைகள்,         3. ஊறுகாய் நன்மைகளும், பிரச்சனைகளும், வாசகர்கள் விமர்சனம் பார்ப்போம்}   4. சென்னை - திருப்பதி பாதயாத்திரை – தில்லை நாயகம் அவர்களுடன் பேட்டி - பேட்டி கண்ட KGG க்கு பாராட்டுக்கள். 

சுபஸ்ரீ ஸ்ரீராம். வழங்கிய 1.  பீட்ரூட் தொக்கு: ருசியாக இருந்தது, 

2..நாற்காலி – சிறுகதை : YES சிலருக்கு தேவையில்லாதது சிலருக்கு அவசியம் தேவைப்படுகிறது. 

கீதா ரங்கனின்..1. .சிரோட்டி செய்முறை 2. நான் ரேணு -சிறுகதை சிறப்பாக இருந்தது. 

ரேவதி நரசிம்ஹனின் அம்மா செய்த மோர்க்குழம்பு ருசியாக இருந்தது. 

பரிவை செ. குமார் வழங்கிய அக்கா மகள் – சிறுகதை: சிறப்பாக இருந்தது. 

K G Y Raman வழங்கிய ஊறுகாய் ! காமாட்சி மாஹாலிங்கம் வழங்கிய வெந்தய ஊறுகாய்  ருசியாக இருந்தது. 

மாலா மாதவனின் விட்டில் பூச்சி :: சிறுகதை –நன்றாக இருந்தது. 

ஏகாந்தனின் அயல்நாட்டுச் சிறுகதை ::  சிறப்பாக இருந்தது. 

அப்பாதுரை வழங்கிய அன்பு மகள் (சிறப்புச் சிறுகதை), அப்பாதுரை பதில்கள் நன்றாக இருந்தது. 

கமலா ஹரிஹரனின் பொங்கல் பண்டிகை கண்களுக்கும் + வயிற்றுக்கும் : 

துரை செல்வராஜு பன்னீரும் பத்மப்பிரியாவும்...  நன்றாக இருந்தது

K G கௌதமனின்  கோபு வெச்ச ஆப்பு! - சிறுகதை :: நல்ல கற்பனை / அனுபவம்??? KGG க்கு என்ற தனி பாணி .

பானுமதி  வெங்கடேஸ்வரன்: சூரியன் கோவில்: நன்றாக இருந்தது, 

சென்னையில் உள்ள நவகிரக கோயில் பட்டியல் வழங்கியதற்கு நன்றி. 

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி வழங்கிய பைரவியும் பைரவர்களும் :: அனுபவம் நன்றாக இருந்தது. 

சியாமளா வெங்கட்ராமனின் லேடீஸ் கிளப் பொங்கல் – படங்கள், அனுபவம் சிறப்பாக இருந்தது. 

இரா. அரவிந்த் வழங்கிய சிங்கை பயணத்தை எளிதாக்கும் ”சிங்கப்பூர் மெமரீஸ்” நல்ல தகவல்கள், விழித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிக்கு வாழ்த்துக்கள்.   

அதிரா வழங்கிய தை பிறந்தால் வழி பிறக்குமாமே?:) - நன்றாக இருந்தது, ஆனால்,  தகவலுக்கும் தலைப்புக்கும் சம்மந்தமில்லையே ?

ஏகாந்தனின் சோமாலியாவில் ஒரு இந்திய இரவு சிறப்பாக இருந்தது.  

ரஞ்சனி நாராயணனின்  மாலை  மயங்குகின்ற நேரம் நன்றாக இருந்தது. 

VAI. GOPALAKRISHNAN வழங்கிய வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ.பொ போ  மு.க.’ உதயம்! - 

நெடுங்கதை  சிறப்பாக இருந்தது 

ரிஷபனின் மன்னிப்பு (சிறப்புச் சிறுகதை) :: நன்றாக இருந்தது

ரேவதி நரசிம்ஹனின் காதலும் காமமும் - சிறுகதை :: சிறப்பாக இருந்தது 

கீதா ரெங்கனின் வீரம்மை ஆச்சி - சிறுகதை :: நன்றாக இருந்தது  

துனர செல்வராஜூ வழங்கிய கண்ணாரப் பூப்பூத்தது… சிறப்பாக இருந்தது 

ராமலக்ஷ்மி வழங்கிய நீர்க்  கோலங்கள் – கவிதை & நந்தீஸ்வரர் 16.  படங்கள் தரிசனம் கண்டது கோடி புண்ணியம். 6+ 6+ 4 படங்களாக அனுப்பலாம் 13 படத்திற்க்கான இடம்/ பக்கங்கள் சேமிக்கப்படும். 

ஐயப்பன்கிருஷ்ணனின் ஊர்மிளாயின் உறக்கம் கதை சிறப்பாக இருந்தது : 

ரேவதி நரசிம்ஹன் அனுப்பிய 9 படங்கள்., Lighting Excelent Photography,  5 + 4 படங்களாக அனுப்பலாம் 7 படத்திற்க்கான இடம்/ பக்கங்கள் சேமிக்கப்படும். அர்ஜூன் & ரோஷினி வரைந்தது நன்றாக இருந்தது ஊக்கப்படுத்துவோம். 

பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் படங்கள் பார்த்து ஊர் பெயர்கள்???நல்ல கற்பனை

பொங்கல் மலருக்காக பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

பொங்கல் மலருக்காக பங்கு பெற்றவர்கள் சுய குறிப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் 🙏🏽                                                                       

நன்றி🙏🏽 தகவல் தில்லைநாயகம்

= = = = = 

7 கருத்துகள்:

 1. அழகாகப் பாராட்டி இருக்கிறீர்கள் யாவரையும். நன்றி. எனக்கு வெங்கலப்பாத்திரத்தில் வீட்னுள் செய்த படம் கிடைக்கவில்லை. கல்அடுப்பு, பானைகள் வழக்கமில்லை. ஏதோ மனதில் ஸந்தேகங்கள். தற்காலமாக அமைந்தது இது.தவிர்த்திருக்கலாம். மிக்க ஸந்தோஷம். அழகான பதிவு உங்களுடையது.அன்புடன்

  பதிலளிநீக்கு
 2. எனது சிறுகதைகளையும்,
  கண்ணாரப் பூ பூத்து - பாடலையும்
  பன்னீரும் பத்மபிரியாவும் - சமையல் குறிப்பையும் பாராட்டிய தங்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 3. மின் நிலாவின் அனைத்து பகுதிகளையும் ரசித்து அதனைக் குறித்து எழுதி இருப்பது சிறப்பு.

  தொடரட்டும் மின் நிலா வெளியீடுகள்...

  பதிலளிநீக்கு