அதிகாலையிலேயே அந்த வீடு இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டான் அவன். தன்னுடைய காரை, சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, நடந்து வந்து, அந்த வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டான் அவன்.
வீட்டின் ரோடுப் பக்கக் கதவு திறக்க இயலாத வகையில் பூட்டிக் கிடந்தது. முன் பக்க ஜன்னல்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் இருந்தன. இரண்டு முறை, வீட்டைச் சுற்றி வந்தான். வீட்டின் பின்பக்கக் கதவு, சற்றே திறந்த நிலையில் இருந்ததை கவனித்தான்.