செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கொக்கி 200225 கருங்கல் மலர்.


இதற்கு முன்பு வெளியிடப்பட்ட 

கொக்கி 191222

கொக்கி 200125 

இரண்டையும் பார்த்திருப்பீர்கள், (அல்லது படித்திருப்பீர்கள். ) 

அந்தக் கொக்கிகளுக்கான கதையையும் பா அ ப ! 

இந்த மாதத்து கொக்கி, இந்தப் படம் : இதைப் பார்த்தவுடன், உங்களுக்குத் தோன்றுகிற கதையோ, கட்டுரையோ, கவிதையோ, துணுக்கு செய்தியோ எதுவாக இருந்தாலும் 

kggouthaman@gmail.com 

or / and 

sri.esi89@gmail.com  

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். 

இதற்கு முன்பு வெளியான கொக்கிகளுக்கும் அதே போல், எழுதி அனுப்புங்கள். 

உங்கள் படைப்பு, எந்த கொக்கிக்கானது என்ற குறிப்பையும் அனுப்புங்கள். படைப்புகளை அனுப்புபவர்கள், நம்ம ஏரியா அல்லது எங்கள் ப்ளாக் வலைப்பக்கத்தில், அன்றைய பதிவின் பின்னூட்டத்தில் எங்களுக்குத் தெரிவித்தால், உடனுக்குடன் அவற்றைப் பார்த்து (/படித்து)  வெளியிட வசதியாக இருக்கும். 

செய்வீர்களா? 

நன்றி. 18 கருத்துகள்:

 1. கருங்கல்லில் மென்மையான மலர்!

  கல் போன்ற மனதும் இந்த மென்மையான மலரைப் பார்க்கும் போது மெல்லிய புன்னகை பூக்குமே!

  பதிலளிநீக்கு
 2. போட்டியில் பங்குபெறுவோருக்கு எமது வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பதிவு நீக்கப்பட்டுவிட்டதாக கூகுள் சொல்லிக் கொண்டிருந்ததே? என்னவாயிற்று?

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கொக்கி 200225 கருங்கல் மலர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பதிவின் URL மாற்றப்பட்டுள்ளது.
   engal6.blogspot.com என்பது புதிய URL. Type செய்ய வசதியாக இருக்கவேண்டும் என்பதால் சுருக்கமாக மாற்றிவிட்டோம்.

   நீக்கு
 3. தகிக்கும் வெயில் 
  உதிர்ந்த மலர் 
  சுடும் கருங்கல் 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. செய்வீர்களா?..

  இந்த ஒற்றை வார்த்தையே அர்த்தபூர்வமானது.

  பதிலளிநீக்கு
 5. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏற்கெனவே இதை வேறே எங்கேயோ பார்த்திருக்கோமே என்னும் நினைவு தான் வந்தது. நல்லா எடுத்திருக்காங்க படம் எடுத்தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி. (படம் எடுத்தவன். ) ஆனால் நான் இதை வேறு எங்கும் வெளியிடவில்லை.

   நீக்கு
 6. அழகான படம்.

  வரப் போகும் பகிர்வுகளைப் படிக்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் - வழக்கம் போல எதுவும் எழுதப் போவதில்லை! :)

  பதிலளிநீக்கு
 7. நோ நோ நீங்க ஏதாச்சும் எழுதித் தான் ஆகணும்.

  பதிலளிநீக்கு
 8. மிதிபடப் போவதா
  மங்கையின் கூந்தலுக்கா.

  வாசமுள்ள தனிமை.
  வீசும் வெளிச்சத்தை நோக்கி
  முகம் மலர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா - அற்புதமான சுருக் கவிதை.

   நீக்கு
  2. வாசமுள்ள தனிமை! சூப்பர்.

   நீக்கு
  3. நன்றி கௌதமன் ஜி.
   அந்த ஒற்றை மலர் மனதைச் சலனப் படுத்திவிட்டது.
   மொட்டாகி மலராகி
   வண்டுகளுக்குத் தேன் கொடுத்து
   மரத்திலிருந்து உதிர்ந்து விட்ட
   இந்த மலரின் பயணம்
   இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்கலாம்..
   தண்ணீர்க் கிண்ணத்தில்
   இடப்பட்டால். கவிதை இல்லை ஜி. எண்ண ஓட்டம்


   நீக்கு
  4. ஆம், உண்மைதான்.
   " நாளை வாடிவிடுவோமே என்று எண்ணி
   மலர்கள் மலராமல் இருப்பதில்லை.
   பூமியில் பூக்கும் ஒவ்வொரு மலரும்,
   கடவுள் இன்னும் மனிதனின் மீது நம்பிக்கை
   இழக்கவில்லை என்பதை உணர்த்துகிறது."

   நீக்கு
 9. காதலன் வரவுக்காக வழிமேல் விழிவைத்து அவனின் "பூவே பூச்சூடவா" என்னும் ஒற்றை சொல்லுக்காக ஏங்கி காத்திருக்கும் பாசமலர் இவள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு