பார்வதி, தன் தாயையும், குட்டித் தம்பியையும் தன்னுடைய தாய் மாமன் பொறுப்பில் விட்டு வந்திருந்தாள் என்றாலும், வாரம் ஒரு கடிதமாவது, அம்மாவுக்கு எழுதுவாள். சென்னையில், தன் வாழ்க்கை எப்படிப் போகிறது என்பதை எழுதியனுப்புவாள்.
குட்டித் தம்பிக்கு அவ்வப்போது சிறிய பரிசுப்பொருட்கள் வாங்கி, பார்சலில் அனுப்புவாள். தான் கதாநாயகியாக நடித்துப் புகழ் + பொருள் வந்ததும், எப்படி அம்மாவையும், மாமா குடும்பத்தையும், தன்னுடைய குட்டித் தம்பியையும் அழைத்து வந்து அவளுடனேயே வைத்துப் பார்த்துக்கொள்வாள் என்பதையும் கடிதத்தில் எழுதியனுப்புவாள்.
அம்மா அந்தக் கடிதங்களையும், பொருட்களையும் பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார்.
பார்வதி, பாட்டு டிஸ்கஷனில், தான் பாடிக்காட்டிய பாடலைக் கூட, ஒரு கேசட்டில் பதிவு செய்து, தன்னுடைய திறமையை, டைரக்டர் நீலு எப்படிப் பாராட்டினார் என்பதையும் சொல்லி, அனுப்பியிருந்தாள்.
பார்வதியின் அம்மா அந்தக் கேசட்டை அடிக்கடிப் போட்டுக்கேட்டு சந்தோஷப்படுவார்.
பார்வதி எழுதாமல் விட்ட விஷயம், நீலுவுக்கும் தனக்கும் இருந்த நெருக்கம் பற்றி மட்டும்தான். டைரக்டர் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்தவுடன், எல்லா விவரத்தையும் அம்மாவுக்கு எழுதலாம் என்று நினைத்திருந்தாள் பார்வதி.
பார்வதி, படப்பிடிப்பு தடைப்படுகிறது, தொடரவில்லை என்ற நிலை வந்ததும், ஊருக்குக் கடிதம் எழுதவில்லை. வருத்தமாகவே இருந்துவந்தாள்.
****
பார்வதியால் தன் நிம்மதி போய்விடும், புகழுக்கு களங்கம் ஏற்படும், தன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தார் நீலு.
பார்வதியைக் கொல்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் நீலு.
பார்வதிக்கு போன் செய்து, "உனக்கு வாழ்க்கை தருகிறேன். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு. அது பற்றிப் பேச உன் வீட்டிற்கு இன்று மாலை வருகிறேன். ஆனால் நான் வரும் சமயம் வீட்டில் உன்னைத் தவிர வேறு யாரும் இருக்கவேண்டாம். சம்மதமா?" என்று கேட்டார்.
பார்வதி சந்தோஷமாக சம்மதித்தாள். வீட்டில் துணையாக இருந்து வந்த வேலைக்காரிக்கு லீவு கொடுத்து அனுப்பினாள். " நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நாளைக்கு வா, உனக்கு நல்ல செய்தி சொல்கிறேன்" என்று சொல்லி, வேலைக்காரிக்கு நூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினாள், பார்வதி.
வேலைக்காரி மீதியிருந்த சில வேலைகளை முடித்து வெளியே செல்லும் சமயம், தெருவில் நீலுவின் கார் வந்ததைப் பார்த்தாள். 'சரிதான், டைரக்டர் ஐயா பார்வதி அம்மாவுக்கு ஏதோ சினிமா சான்ஸ் கொண்டுவந்திருக்கிறார் போலிருக்கு' என்று நினைத்தவாறு வீட்டுக்குச் சென்றாள் அந்த வேலைக்காரி.
அப்புறம் என்ன?
நீலு வந்தார். சரியான சமயம் பார்த்து பார்வதியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். பிறகு அவளுடைய பெட்டியிலிருந்து மேலாக இருந்த புடவையை எடுத்து, அதை அவள் கழுத்தில் சுருக்கு மாட்டி, மின்விசிறியில் தொங்கும்படி அமைத்துவிட்டார். எல்லா தடயங்களையும் அழித்துவிட்டு, காரில் தன்னுடைய வீட்டிற்கு வந்துசேர்ந்தார்.
பார்வதியின் 'தற்'கொலையை முதலில், பார்த்தவர் மறுநாள் காலை அந்த வீட்டிற்கு வந்த பால்காரர்தான். அவர் அலறியதைக் கேட்ட அக்கம்பக்கத்தார் அங்கே குழுமினார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு, அங்கே வந்த வேலைக்காரி, பார்வதியின் உடலைப் பார்த்து, பொங்கிப் பொங்கி அழுதாள். பார்வதியின் தாய் மாமாவின் விலாசத்தை அவள்தான் தேடிப்பிடித்து எடுத்துக்கொடுத்தாள். தந்தி வழியாக பார்வதி குடும்பத்திற்கு செய்தி சென்றது.
போலீஸ் வந்தது. உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய எடுத்துச் சென்றனர்.
நீலு கவனிக்கவேண்டியவர்களை கவனித்து, பார்வதி இறந்தது தற்கொலையால்தான் என்று ரிபோர்ட் கொடுக்கச் செய்தார்.
பார்வதியின் உடல், போஸ்ட்மார்ட்டம் முடிந்து வந்ததும், முதல் ஆளாக கவலை தோய்ந்த முகத்துடன், பெரிய மாலையை உடலுக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வேலைக்காரிக்கு அருகே சென்று, " எதையாவது, யாரிடமாவது உளறி வைக்காதே. பார்வதியைக் கடைசியாக உயிருடன் பார்த்தது நீ ஒருத்திதான். யார் கேட்டாலும் பார்வதி உனக்கு லீவு கொடுத்து அனுப்பிவிட்டு, இப்படி தற்கொலை செய்துகொண்டுவிட்டாங்க .... என்பதை சொல்லி அழு. வேறு எதுவும் சொல்லாதே. என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் கேள் " என்று சொல்லி, பிறகு அங்கிருந்து சென்றார்.
(தொடரும்)
எத்தனை ப்ளானிங்! மனித மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி.
நீக்குஅடப்பாவி மனுஷா நீலு. :(
பதிலளிநீக்குஆஹா இப்போது தடயங்கள்
பார்வதி அம்மாவிடம்.
ஏனோ சில்க்கின் நினைவு வருகிறது.
பார்வதி(யின்) அம்மாவிற்கு, அவை தடயங்கள் என்று தெரியுமா என்பதே சந்தேகம்.
நீக்குஇனித்தான் இந்தத் தளத்தில் விட்டுப்போனவற்றைப் படிக்க வேண்டும். படித்துவிட்டுச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குவேலைக்காரிக்கு அப்போவே சந்தேகம் வந்துவிட்டதா? உடனே ஏன் காவல்துறைக்குச் சொல்லவில்லை? இந்த விநோத் பார்வதியின் குட்டித் தம்பியா? இப்படி ஒருத்தரை இணைத்ததை முதல்லே மறந்துட்டேன். யாராயிருக்கும் விநோத்னு மண்டை காய்ஞ்சுட்டு இருந்தது. சரிதான், கதை இப்போ ஒரு மாதிரியாப் புரிஞ்சு போச்சு!
பதிலளிநீக்குஏழைச்சொல்லை யார் மதிப்பார்கள்? வேலைக்காரி போலீசிடம் சொல்லியிருந்தால், அப்போவே அவங்களைப் பிடித்து சந்தேகக் கேசில் ஜெயிலில் போட்டு, நீலுவிடம் நல்ல பெயர் வாங்கியிருப்பார்கள். கடைசி பாராவில் இந்த எச்சரிக்கையைத்தான் செய்கிறார், நீலு வேலைக்காரியிடம்!
நீக்குஅப்படியா சங்கதி? என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம்...
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
கதை விறு விறுப்பாய் செல்கிறது யூகித்த மாதிரியே!
பதிலளிநீக்குவேலைக்காரி நீலு வந்ததை போலீஸ் கிட்ட சொல்லமுடியாமல் செய்து விட்டாரரே நீலு.
பார்வதி பாவம் நம்பி கெட்டாள்.