ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

உருவங்கள் அழிவதில்லை.



இயக்குனர் நீலு தேவேந்திரா புதிய படத்தின் லொகேஷன்கள் தேடி வெளிநாடு வந்திருந்தார். 

உருவங்கள் அழிவதில்லை என்பது படத்தின் பெயர். 

இயக்குனரின் நண்பர் தங்கதுரை, அந்த நாட்டிலிருந்து அனுப்பிய அமானுஷ்ய வீட்டின் படத்தைப் பார்த்ததும்  தான் எடுக்கப்போகும் படத்தின் க்ளைமேக்ஸ் எடுக்க சரியான லொகேஷன் என்று நினைத்தார். உடனே செயலில் இறங்கிவிட்டார். 




ஹோட்டலில் தங்கிய இயக்குனர், நண்பரை போன் போட்டு அழைத்தார். 

நண்பர் வந்தவுடன், அந்த லொகேஷனை தன்னை அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

நண்பர் தங்கதுரை, " இந்த மாதிரி பாழ் பங்களாக்கள் நான் சொல்கின்ற ஹை வேயில் நிறைய உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூட்டில் கூப்பிட்டுகிட்டுப் போய் காட்டுகிறேன். ஏதாவது ஒன்றை நீயே செலெக்ட் பண்ணிக்கப்பா. ஆமாம், நீ அமானுஷ்ய சப்ஜெக்ட் படங்கள் எதுவும் எடுக்கமாட்டியே, எப்படி திடீர்னு இந்த இண்டரஸ்ட்?" என்று கேட்டார். 

" நான் சினிமா உலகில் நுழைந்ததும், எனக்குக் கிடைத்த முதல் கதை லவ் சப்ஜெக்ட். இரண்டாம் கதை ஒரு அமானுஷ்ய சப்ஜெக்ட். கதை டிஸ்கஷன், கதாநாயகன், ப்ரொடியுசர், ஃபைனான்ஸ் என்று சில கட்டங்கள் கடந்து வந்தது. கதாநாயகி தேர்ந்தெடுப்பதில், தயாரிப்பாளர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் புதுமுக கதாநாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, கதாநாயகி தேர்வுக்காக தென்னிந்தியா முழுவதும் சல்லடை போட்டு சலித்தேன். 

ஆந்திராவில், ஒரு துணை நடிகை. பார்வதி என்று பெயர். ஆந்திராவிற்கு நான் சென்றிருந்தபோது, சான்ஸ் கேட்டு வந்திருந்தாள். நான் மனதுக்குள் நினைத்திருந்த கதாநாயகியின் ஸ்கெட்ச் - அவளுக்கு தொண்ணூறு சதவிகிதம் பொருந்தியிருந்தது. அவளைக் கதாநாயகியாக்க நான் சம்மதம் சொன்னேன். அவளுக்கு ஒரே சந்தோஷம். அப்புறம் நான் சொன்னதை எல்லாம் செய்தாள். "

" நீ என்ன எல்லாம் சொன்னாய்?"

" உனக்குத் தெரியாததா - சினிமா உலகில் என்ன எல்லாம் சொல்வார்கள் என்று?"

" அப்புறம்?"

" ஆந்திராவில் அவளுக்கு இருந்த வீடு, நிலம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, என்னுடனேயே சென்னைக்கு வந்துவிட்டாள். தனியாக ஒரு வீடு பார்த்து அதில் தங்கினாள்.

அவளைக் கதாநாயகியாகப் போட்டு, சில சீன்கள் எடுத்தோம்.
அந்தப் படத்திற்காக ஒரு பாடல் கூட எழுதப்பட்டு, சில டியூன்கள் சரியாக வருமா என்று ஆராய்ந்துகொண்டிருந்தோம்."

" என்ன பாட்டு?" 

" எங்கும் ஒரு கீதம் - 
மங்கும் பொன் மாலை
பொங்கும் உன் மனம் 
தங்கும் ஒரு நினைவு ... " என்று ஆரம்ப வரிகள். 

"இந்தப் பாடலை நான் எங்கேயும் கேட்டதில்லையே?"

" படமும் வெளிவரவில்லை, பாடலும் பதிவாகவில்லை. "

(தொடரும்) 

14 கருத்துகள்:

  1. //நண்பர் தங்கதுரை, " இந்த மாதிரி பாழ் பங்களாக்கள் நான் சொல்கின்ற ஹை வேயில் நிறைய உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூட்டில் கூப்பிட்டுகிட்டுப் போய் காட்டுகிறேன். ஏதாவது ஒன்றை நீயே செலெக்ட் பண்ணிக்கப்பா" என்றார்.

    " ஆமாம், நீ அமானுஷ்ய சப்ஜெக்ட் படங்கள் எதுவும் எடுக்கமாட்டியே, எப்படி திடீர்னு இந்த இண்டரஸ்ட்?"//

    இரண்டு பாராக்களையும் இடைவெளி இல்லாமல் சேர்த்து விடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சரிதான். ஒருவரே பேசுபவைகளை, பிரித்திருக்கக் கூடாது. சரி செய்துவிட்டேன், நன்றி.

      நீக்கு
  2. //" நான் சினிமா உலகில் நுழைந்ததும், எனக்குக் கிடைத்த முதல் கதை லவ் சப்ஜெக்ட். இரண்டாம் கதை ஒரு அமானுஷ்ய சப்ஜெக்ட். கதை டிஸ்கஷன், கதாநாயகன், ப்ரொடியுசர், ஃபைனான்ஸ் என்று சில கட்டங்கள் கடந்து வந்தது. கதாநாயகி தேர்ந்தெடுப்பதில், தயாரிப்பாளர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் புதுமுக கதாநாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, கதாநாயகி தேர்வுக்காக தென்னிந்தியா முழுவதும் சல்லடை போட்டு சலித்தேன். "

    " ஆந்திராவில், ஒரு துணை நடிகை. பார்வதி என்று பெயர். ஆந்திராவிற்கு நான் சென்றிருந்தபோது, சான்ஸ் கேட்டு வந்திருந்தாள். நான் மனதுக்குள் நினைத்திருந்த கதாநாயகியின் ஸ்கெட்ச் - அவளுக்கு தொண்ணூறு சதவிகிதம் பொருந்தியிருந்தது. அவளைக் கதாநாயகியாக்க நான் சம்மதம் சொன்னேன். அவளுக்கு ஒரே சந்தோஷம். அப்புறம் நான் சொன்னதை எல்லாம் செய்தாள். " //

    சல்லடை போட்டு சலித்தேன் -- அடுத்து வரும் கொட்டேஷன் குறியை { " } மட்டும் நீக்கி விடவும். அப்பொழுது தான் இரண்டு பாராவும் ஒருவரே சொல்கிற மாதிரி அமையும்.


    பதிலளிநீக்கு
  3. இந்தப் பகுதியை முடிக்கும் பொழுது அடுத்த பகுதியை வாசிக்கிறவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி ஏதாவது செயுதிருக்கலாமோ என்று தோன்றியது.

    அப்பாதுரை அந்தப் படங்களை வெளியிட்ட சில நாட்களிலேயே படத்திற்கேற்ற கதை வெளிவந்தது பாராட்ட வேண்டிய சுறுசுறுப்பு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு நீளம் அதிகமோ என்ற சந்தேகம் வந்தது அதனால் கொஞ்சம் முன்னாடியே வெட்டிவிட்டேன்,

      நீக்கு
  4. பார்வதியை வைத்து கதை பின்னப்படுகிறதா?

    நன்றாக போகிறது கதை.

    பதிலளிநீக்கு
  5. படம் வெளியிட்டு சில நாட்களிலேயே கதை தொடங்கி விட்டீர்கள்... பாராட்டுகள். எப்படித் தொடர்கிறீர்கள் என்று வாசிக்க நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அமானுஷ்ய கதையின் ஆசிரியர் கௌதமன் ஜியா.
    கதை விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது.
    ஜீவி சாரும் நிறைய எடிட் செய்யச் சொல்லிக் கொடுக்கிறார்.
    அமர்க்களமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  7. இது வரைக்கும் அமானுஷ்யம் எதையும் காணோம். ஒரு வேளை இந்த இயக்குநரே அமானுஷ்யமாக வந்திருக்காரோ? அல்லது பார்வதி? என்னனு போகப் போகத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு