இந்தப் பதிவு, நம்ம ஏரியா பதிவு கொக்கி 200225
படத்திற்காக, திருமதி ரேவதி நரசிம்ஹன்
எழுதி அனுப்பியுள்ள நினைவுகள்.
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
இந்தப் பூ மரம் எங்கள் வீட்டுக்கு 1983யில் வந்தது.
ஒரு இரண்டடி வளர்ந்ததும் மொட்டு வந்துவிட்டது.
மொட்டாக இருக்கும்போதே அத்தனை வாசனை ,ஜன்னல்
வழியே வந்து மூக்கை வருடும்.
நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வரும் காலம் அது.
அவர்களில் சிலர் இது வீட்டில் வைக்கக் கூடாத மரம்
என்ற எண்ணம்.
இந்த மரத்தின் பூக்கள் மாடியில் ஜன்னலை உரசியபடி இருக்கும்.
10 வருடங்களில் அவ்வளவு வளர்ந்து விட்டது.
தம்பிகளின் மனைவிகள் வரும்போதெல்லாம், இதன் மலர்களை
ஆசையுடன் எடுத்துச் செல்வார்கள்.
இந்த நெல சம்பங்கி வளர எங்கள் குடும்பமும் வளர்ந்தது.
அத்துடன் பக்கத்தில் நடப்பட்ட மணிபிளாண்டு இந்த மரத்துடன்
பின்னிப் பிணைந்து வளர்ந்து வீடு அமேசான் காடு போல ஒரு தோற்றம்
கொடுத்தது.
மணி பிளாண்டின் ஒவ்வொரு இலையும் பலகாரம் வைத்து
சாப்பிடலாம் போல பெரிதாக இருந்தது.
1983 லிருந்து 2013 எங்களுக்கு நல்ல மணத்தை அள்ளித் தந்து,
பச்சைப் புல்களுக்கிடையே மஞ்சளும் வெண்மையாக மனதை
மயக்கிக் கொண்டாடிக் களித்தது.
சென்ற வருடம் 16 நாட்கள் சென்னையில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஐப்பசியில் அபரிமிதமாகப் பூக்கும். வருபவர்கள் மீது ஒவ்வொரு
மலராக விழும்.
சிதறிக்கிடக்கும் மஞ்சள் பூக்களை ஒரு பெரிய பாத்திரத்தில்
தண்ணீரில் இட்டு வைப்பேன்.
மேலே படத்தில் இருக்கும் மலரின் அழகுக்கு
சில வரிகள்:
" பூத்து மணம் வீசி மரம் விட்டு வீழ்ந்த பூவே
கவலை வேண்டாம்.
இதோ அடுத்து வரப் போவது உன் துணைப்பூ.
தனிமை நிரந்தரமில்லை.
வேறு யாரும் உன்னை மிதிக்காமல்
காற்று உன்னைக் காக்கும். "
அழகான படத்தைக் கொடுத்த நண்பர் கௌதமன் ஜி க்கு
மிக மிக நன்றி.
மிக நன்றி கௌதமன் ஜி.
பதிலளிநீக்குவேறு யாரும் உன்னை மிதிக்காமல்
பதிலளிநீக்குகாற்று உன்னைக் காக்கும்.
நல்ல வேளை கருங்கல்லில்
விழுந்து விட்டாய்.. வலித்ததோ?
காற்று ஊதி விட்டு கீழே தள்ளாமல்
கடவுள் உன்னைக் காக்கட்டும்.
பாதையில் விழுந்திருந்தால், மனிதர்
பாதம் பட்டு கசங்கிப் போயிருப்பாய்
மலரும் மங்கையரும் ஒரே ஜாதியென்பது
பாழும் பாவியர் உலகத்து நீதி..
அடடா அருமை.
நீக்குஜீவி சார். எங்கள் வீட்டுப் பூ,காற்றடிக்கும் போது
பச்சைப்புல்லில் போய் உட்கார்ந்து விடும்.
ஒவ்வொன்றாக சிங்கம் எடுத்து ஜன்னலில் வைப்பார்.
பெருக்கிக் கூட்டுபவர்களின் விளக்குமாறு அதன் மேல் பட
அவருக்கு மனம் பொறுக்காது.
அதனால் அப்படி எழுதினேன்.
அருமையாக சொற்களால் மலருக்கு
அலங்காரம் செய்து விட்டீர்கள்.
நினைவுகள் மிக அருமை அக்கா.
பதிலளிநீக்குசாரின் கைவண்ணத்தில் தோட்டம் பச்சை பசேல் என்று அமேசான் காடு போல ஒரு தோற்றம்
அளிக்கிறது.
மலர் கவிதை அருமை.
நன்றி கோமதி மா.
நீக்குவீட்டுக்கு அழகு தருவதே அவருடைய கைவண்ணம் தான்.
இன்று தான் அவரது தளத்திலும் வாசித்தேன்.
பதிலளிநீக்குநினைவுகள் நன்று.
நன்றி மா. வெங்கட்.
நீக்குஇது நில சம்மங்கிப் பூவா? அழகாக இருக்கிறது உங்கள் நினைவுகளைப் போல இவையும் மணம் வீசட்டும்.
பதிலளிநீக்குதமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
பதிலளிநீக்குஎமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
நில சம்பங்கிப்பூ பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது. இதற்கு "கோவில் மரம்" என்று ஒரு பெயரும் உண்டு... அந்த அளவிற்கு தெய்வத்தோடு சம்பந்தப்படுத்தி பேசப்படும் உயரிய தாவரம் ... வண்ண புகைப்படமாக தந்ததில் மகிழ்ச்சி !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு