ஞாயிறு, 10 ஜனவரி, 2021

படத்துக்கு கதை - உறக்கம் பற்றி ரேவதி நரசிம்ஹன் மற்றும் தில்லைநாயகம்


 ரேவதி நரசிம்ஹன்: 

ஒரு  சிறிய  எழுத்தாக்கம் -  உறக்கத்துக்கு.

 தூங்கும் சுகம் தூங்காதவர்களுக்குத் தெரியும்.

7 வயதில் வரும் தூக்கம் 70இல் வருவதில்லை.

அலுத்துக் களைத்த உடலுக்கு எந்த மருந்தும் வேண்டாம் தூங்க.

கணினியும் ,கதையும் கண்ட கண்களுக்கு உறக்கம் உடனே வருவதில்லை..

கொஞ்சம் இருட்டு 

கொஞ்சம் வெளிச்சம்

கொண்டுவரும் தூக்கம்.

பிரச்சினைகள் அண்டிய மனமும்

நோய் அண்டிய  உடலும் முரண் கொள்ளூம் 

உறக்கத்துடன்.

இங்கே உறங்கும் கண்ணன் அன்னையின் கவனிப்பில் 

அயர்ந்து உறங்குகிறான்.

அப்பா வந்து எழுப்பும் முன்னால்

அவன் உறக்கம் சுகப்படட்டும்.    ( ரேவதி நரசிம்ஹன்)

 

 = = = = = 

மோ . தில்லைநாயகம் : 

1)  ஒரு நாள் அயர்ந்து
தூங்கிவிட்டேனாம், அவளுடன்
தினமும் நேரத்தைச்
செலவழிப்பதை மறந்து...

என் மீது கோபித்துக்கொண்டாள்
அவள். 
(யார் அவள் ? நள்ளிரவு !)

2) தூக்கம்:

இமை கதவினை மூடி ,
விழி பெண் அவளை சிறைபிடித்ததால் -
அவள் கொண்ட மயக்கம் தான் தூக்கம்! 

= = = = 


25 கருத்துகள்:

  1. மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் – அண்ணன்
    வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..  ஹி  ஹி சும்மா ஒரு சொல்லு தான். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. பாவம், நல்லாத்தூங்கட்டும். கதை எல்லாம் எழுதி எழுப்பித் தொந்திரவு செய்ய வேண்டாம்! என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கதை எழுதினால், தூங்கும் சிறுவனுக்கு என்ன தொந்தரவு!

      நீக்கு
    2. கதையைச் சத்தமாய்ச் சொன்னால் எழுந்துடுவான் இல்லையோ?

      நீக்கு
    3. சுத்தமா எழுதி அனுப்பிடுங்க.

      நீக்கு
    4. @ கீதாக்கா நீங்க அந்த கும்பிடுப்பூச்சியை படம் ,எடுத்திருக்கணும் அதை வச்சி எல்லாரும் ஸ்டோரி எழுதி இருக்கலாம் :)

      எச்சூஸ்மீ கீதாக்கா உங்க வீட்டுக்கும் விசிட் வந்தது கொஞ்சம் நாளுக்கு முன்னே அது கும்பிடு பூச்சி தானே ?

      நீக்கு
    5. அது எங்க வீட்டுக்கு இல்லை ஏஞ்சல், கீ/ரெ.வீட்டுக்கோ? நானும் பார்த்தேன். ஆனால் எங்கேனு தான் நினைவில் வரலை.

      நீக்கு
    6. Haaaa grasshopper akkaa
      Not praying mantis

      //வெட்டுக்கிளி தானே பறந்து விட்டது. :)))) இரண்டு நாட்களாய் இங்கே குடித்தனம் பண்ணியாச்சு//
      It visited you

      நீக்கு
    7. ஓ! அவரா! அவர் எங்கேயும் போகலை. ஒவ்வொரு அறையாக மாறி மாறிப் போய்ப் பார்த்துட்டு எங்கே செட்டில் ஆகலாம்னு பார்க்கிறார் போல! இப்போதைய புது வரவுகள் கலர் கலரான சிராவண்டு எனப்படும் சின்னச் சின்னப் பட்டுப் பூச்சிகள். விதம் விதமா வருகின்றன.

      நீக்கு
  3. நாளைக் காலை ஒரு புதிய படம் வெளியாக உள்ளது. அதற்கு கதை / கவிதை / கற்பனை சேர்த்த படம் ஆகியவை வரவர்க்கப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  4. பாட்டி, தாத்தாவுடன் தினமும் போர்வையால் மூடிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடும் குட்டிக் குஞ்சுலு அசந்து போய் இப்படித்தான் போர்த்திக் கொண்டு தூங்கும். களைப்புடன் பார்க்கவே பாவமாய் இருக்கும். மனதில் குழந்தை மேல் பாசமும், கவலையும், அன்பும் மேலிடும். தூங்கும் குழந்தையைக் கொஞ்சக் கூடாது என்று பொறுத்துப்பேன்.

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் அருமை!, அதிலும் வல்லி அக்காவின் கவிதை அனுபவம் கலந்த  எழுத்து சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு பானு மா ,நன்றி.
      இது கவிதை என்று சொல்ல முடியாதுமா.
      எண்ண ஓட்டம்.
      நிறைய எழுத நினைத்தேன். சேகரித்ததெல்லாம்
      மறந்தது.
      மனம் நினைக்க அது கணினியில் பதிய ஒரு கருவி வந்தால்
      தேவலை. வருமாய் இருக்கும்.
      தங்கள் அன்பு இதம்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. உங்கள் மொபைல் போனில் " Autodesk SketchBook " app உள்ளதா? அந்த app உள்ளவர்கள், படம் வரைய நிறையக் கற்றுக்கொள்ளலாம். நாளை வெளியாகும் படத்தை தரவிறக்கம் செய்துகொண்டு அதில் உங்கள் கற்பனைக் கோடுகள் இட்டு, வண்ணங்கள் தீட்டி - புதிய படைப்பு படைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. படத்திற்கான வல்லிம்மாவின் எண்ண ஓட்டமும் தில்லை நாயகம் அவர்களின் படைப்பும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. /தூங்கும் சுகம் தூங்காதவர்களுக்குத் தெரியும்.//
    உண்மைதான் வல்லிம்மா ..காலைல ஷிஃப்ட்டுக்கு 6 மணிக்கு குளிரில் அலார்ம் வச்செழும்பும்போது தூக்கத்தின் அருமை தெரியும் .அதுவும் இப்பெல்லாம் பிள்ளைங்க பகலிலும் தூக்கமில்லை இரவிலும் உறங்காப்புலிகளா இருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  9. இயல்பான எழுத்துவரிகள் வல்லிம்மா .கண்ணன் தூங்கட்டும் ,இந்த கண்ணனுக்கு கணினியும் கன்சோல் கேம்ஸும் தெரியலை அதான் ஆழ்ந்த உறக்கம் 

    பதிலளிநீக்கு