வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 3 - எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம்


மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 3

எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம். 


ஜான் மத்தர்ஸ் கதை. வயிற்றுவலியோடு துடித்துப்போனபோது மருந்து வாங்கப்போன அப்பாவின்  கதைபோல தன்மகளுக்கும் ஆகி விடக் கூடாது  என்று நினைத்து  உஷாராக இருக்கும் அவளுக்கு அவளின் அப்பா, பேத்தி துடிக்கும்போது  ட்ராமிற்கு லேட்டாகிவிட்டது என்று வந்து நிற்கும்போது, என்ன நினைக்கத் தோன்றும்?   ஆச்சரியகரமான உணர்ச்சிப் பிழம்பான கதை என்றுதான் தோன்றியது.  எப்படி இப்படி ஆகும்?  மனப்பிராந்தி  எனக்கா என்று யோசிக்கிறேன்.    ஏகாந்தன்.

கண்களுக்கும் வயிற்றிற்கும்.  எனக்கு இந்த விஷயத்தில்  படிக்க ஆர்வம் அதிகம். கடவுள்படம், கோலம் என்று ஆரம்பித்து பால்கொழுக்கட்டை, சேமியாகேஸரி, உருளைபோண்டா என்று ருசியானதாகவே. ரோஸ்ட்., குட்டிபுடலங்காய் பருப்புசிலிக்கு ஸரியான தேர்வு. கமலா ஹரிஹரன்  எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒருகை பார்க்கலாம்.

நான் ரேணு  நிதானமாகப் படித்தபோது, எவ்வளவு மகத்தான விஷயங்கள், எப்படி தீர்க்கப்பட்டது? சட்ட நுணுக்கமும், பல தினுஸு நிவாரணங்களும், ஒரு சட்டம் படித்தவரால் எப்படி தீர்க்கப்பட்டது. மனதை உருக்கும் ஸம்பவஙகள். விஷயஞானம் இருந்தால் ஒழிய இம்மாதிரிக் கதைகள் எழுத முடியாது. கதை மிகவும் அருமை. கீதா ரங்கன்.

எனக்கு எந்தக் கதையிலும் குற்றம் சொல்ல முடியாது.  எவ்வளவு யோசித்து எழுதியிருப்பார்கள்?  

பன்னீரும், பத்மப்பிரியாவும். புலவும், பன்னீர் மஸாலா குழம்பும், கதைபோல  செய்முறை வெகு அழகு. பாஸ்மதிக்குப் பெயர்தான் பத்மப்ரியா.  இது அழகாயிருக்கே! துரை செல்வராஜு.

கோபு வைத்த ஆப்பு. ஹாஸ்யமாகச் சொல்லப்பட்ட  பக்கத்துவீட்டு சினேகிதராக காட்டிக்கொண்ட நபர். கௌதமன் அவர்களது. ரஸிக்க முடிந்தது ஹாஸ்யமாக. நல்லகதை.. அவருக்கும் இரண்டு காரணங்கள் கிடைத்தது. ஜி கௌதமன்.

சூரியன் கோயில். சென்னையைச்சுற்றி இருக்கும் நவக்கிரஹக் கோயில்களைப் பற்றிய விவரம்.  கொளப்பாக்கம்  விவரமான தகவல்கள். பக்தியுடையவர்களுக்குத் தரமான விருந்து. பானுமதி வெங்கடேசுவரன். நல்லவைகள். நானும் சில இடங்களுக்குப் போயிருக்கிறேன்.

பைரவியும், பைரவர்களும்..ஹாஸ்யமாகச் சொல்லப்பட்ட பைரவி ராகத்துடனாக  இணைக்கப்பட்ட சிரிப்புக்கதை.  சிரித்துமாளவில்லை. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி.

பக்தியா, ஆன்மீகமா இரண்டும் ஒன்றா   கீதா ஸாம்பசிவத்தின்  பொருளடங்கியக் கட்டுரை. சிந்தித்துப் பார்த்து புரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது  ஆராய்ச்சி  அருமை. 

லேடீஸ் கிளப் பொங்கல்  அநுபவத்தில் கொண்டாடியதை அழகுறச் சொல்லும் பதிவு. ஒன்று விடாமல் எல்லாவிவரமும். ஸந்தோஷமான தருணங்கள். அனுபவிக்க முடிந்தது. சியாமளா வெங்கட்ராமன். 

காதலும், காமமும். ரேவதி நரஸிம்மன்.. பொய்யாக மனைவியைப் பொறாமைப்பட வைக்கச்சொன்ன நிகழ்வை, நிஜமாகக் கற்பனை செய்து கொண்டு அதனால் வாழ்வில் நிம்மதியை இழந்த உண்மைக்கதை இப்படியும் உண்டா? இருந்திருக்கிறது  உண்மைக்கதை.நெகிழ்வு. 

என் இதயப் பெண்ணே.  சூரியப்பிரகாஷின் கவிதை. அழகியது.  

நீர்க்கோலங்கள் ராமலக்ஷ்மி அழகுக் கவிதை,  கண்ணாரப் பூப்பூத்து   துரை செல்வராஜு எல்லாமே அழகு. 

வீரம்மை ஆச்சி. கதையைத் திரும்பத் திரும்பப் படித்தேன். என்ன ஒருவிதப் பிணைப்பு. கதையின் கருவுடன் கொண்டு போன விதமும் அருமை. ஒவ்வொரு பாத்திரமும். படைப்பு. ரத்த பந்தம் வீரம்மைக்கும், வீருவிற்கும். நல்ல கதை. கீதா ரெங்கன்.

ஊர்மிளையின் உறக்கம். ராமாயண காவியம் இப்படியும்தான் இருந்திருக்கும் என்று மனதைவிட்டு அகலாத. காவியமாக இருக்கிறது. மிக்க நயம். அருமை. ஐயப்பன் கிருஷ்ணன். 

சிங்கைப் பயணத்தை எளிதாக்கும் சிங்கப்பூர் மெமரீஸ்.  இரா அரவிந்தன். நல்ல வழிகாட்டி. நூல்.

தை பிறந்தால் வழி பிறக்குமாமே   அதிரா. எங்கள் ப்ளாகை ஓவியமாகத்  தீட்டி, அதை அழகிய முறையில் பெயிண்டிங் செய்து படங்களுடன் அழகிய முறையில் வர்ணனையும் செய்து எழுதியிருக்கிரார். வானவில்லையும் பார்த்தால் அதிர்ஷ்டம்  என்று அயல் நாட்டவர்களையும் பார்க்க வைத்த அனுபவம். அவருடைய வழக்கமான அழகிய பதிவு. 

நாற்காலி. என்னுடைய சுபாவம் மாதிரி பழைய ஸாமான்களின் மீது பாசம்.  அழகான  எண்ணப்போக்கு. நாற்காலி வாங்கினவர்களின் காரணம். ஆக எப்படி எல்லாம் மாறுகிறது. சுபஸ்ரீஸ்ரீராம். அழகு. 

சென்னை -  திருப்பதி பாதயாத்திரை. பேட்டி கேஜி கௌதமன். அருமையான விஷயங்களடங்கிய பேட்டி.  படிக்க வியப்பு. 

வாசகர் அனுப்பிய படங்கள். குழந்தைகள் அனுப்பியதும்,பெரியவர்கள் அனுப்பியதும் எல்லாம் நன்றாக உள்ளது.. மலர் பூரவும் தகுந்த சித்திரங்கள் வரைந்த  கேஜிஜி அவர்களுக்கும்,, அருண் ஜவர்லால் அவர்களுக்கும்  பாராட்டுதல்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அருமை. 

நந்தீசுவரர் தரிசனம். மற்றும் படங்கள். க்ஷேத்ராடனம் செய்த மாதிரி பக்திப் பரவசம். நல்ல விவரங்கள்.  மனதிற்கு ஸந்தோஷத்தைக் கொடுத்தது. ராமலக்ஷ்மி.  எத்தனை நந்திகள்! 

மலரை விமரிசிக்கத் தகுந்த இன்னும் பாராட்டுதல்களை எழுதலாம். எதையும் விடவில்லை என்று நினைக்கிறேன். என் வயது காரணமாக எனக்கு முன் பின் எதுவும் ஸரியாக  உள் வாங்கினேனோ , இல்லையோ   என்ற ஐயம். அதுவும் ஸரிதான். எல்லோருடையதும் அருமை.  விட்டுப் போனவைகள் இருந்தால் மன்னிக்கவும்.   எழுதியது எழுத்துத் தவறுகள் எல்லாமுமே.  யாவருக்கும் ஆசிகள். 

மலரைத் தயாரிக்க எடுத்துக்கொண்ட எங்கள் பிளாக் மின்னிலவு ஆசிரியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி யாவருக்கும். 

விடை கொடுங்கள்.  ஸந்தோஷமாக.
அன்புடன், 

காமாட்சி மஹாலிங்கம். மும்பை. 

= = = =  

13 கருத்துகள்:

  1. விடாமல் படித்துவிட்டு, விறுவிறுவென விமரிசனம் எழுதியிருக்கிறீர்கள். நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது டைரி மாதிரி விவரம் எழுதிக்கொண்டே நிறைய நாட்களில் எழுதி முடித்தது சந்தோஷம் நன்றி அன்புடன்

      நீக்கு
  2. அழகான விமர்சனம். மலரை முழுமையாகப் படித்து, சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. ஒன்று விடாமல் படித்துவிட்டு அருமையான விமரிசனம் கொடுத்திருக்கிறீகள் அம்மா. என்னையும் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி. உங்களுக்கும் பாராட்டுகள்/வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு எழுதிய பின்னூட்டம் கடைசியில் பதிவாகி உள்ளது அன்புடன்

      நீக்கு
  4. அனைத்தையும் உள்ளடக்கிய விமர்சனம். எல்லாவற்றையும் பாராட்டி ரசிக்கும் குணம். அருமை.

    "விடை கொடுங்கள் சந்தோஷமாக" - இதைத்தான் ரசிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், விமர்சியுங்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனத்தில் இருந்துதான் விடை கொடுங்கள் என்ற அர்த்தத்தில் நான் எழுதினேன் உங்கள் அன்பிற்கு நன்றி எழுதுவதில் எனக்கு விருப்பம் அதிகம் முயற்சிக்கிறேன் ஆசிகள் அன்புடன்

      நீக்கு
  5. உங்கள் யாவரின் பாராட்டுகளும் எனக்கு மிக்க மகிழ்வை கொடுத்தது அதில் எவ்வளவு நிம்மதி தெரியுமா யாவரும் அருமையாக எழுதியவைகள் தானே நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம், ஔ இருக்க பொருளில்லா அவ் ஏன் என்பது போல ச இருக்க ஸ ஏன்?நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். அ"ச்ச"ம், பி"ச்சை" என்று சொல்லும்போது தேவைப்படும் "ச" "ஸ"ர"ஸ்'வதி என்னும் போது "ஸ"தான் தேவை என்பதை உச்சரிப்பே உணர்த்தும். அதை விடுத்து ச்சரச்வதி என்றால் எப்படி இருக்கும்? "அய்" என்பதும் "அவ்" என்பதும் மாத்திரைக்குறைவினால் இலக்கணப்பிழையாகப் பொருள் கொள்ளப்படும். அதே சமயம் ஔ என்பது அப்படி இல்லை. இலக்கணத்தில் குறிப்பிட்ட மாத்திரையில் உள்ளது. ஆகவே ஔவை என்பதும் "ஐயர்" "ஐயா" என்பதுமே இலக்கணப்படி சரியானதாகும். நன்றி. அதோடு இல்லாமல் இந்த எழுத்துக்கள் தொன்றுதொட்டுப் பயன்பாட்டிலும் இருக்கின்றன. நாங்கல்லாம் படிக்கையில் தமிழ் எழுத்துக்கள் கற்கும்போது "ஜ" "ஷ" "ஸ" "ஹ" என்று சேர்த்தே கற்றோம். அதே போல் ஃ அக்கன்னாவும் இப்போது பயன்பாட்டில் குறைந்து வருகிறது. இப்போத் தான் நூறு வருஷங்களுக்கும் அதிலும் கடந்த ஐம்பது வருஷங்களுக்குள் இவற்றின் மேல் வெறுப்புப் பரப்பப் பட்டு வருகிறது. இல்லையா? :)))))))

      நீக்கு