சனி, 8 பிப்ரவரி, 2020

கொக்கி 200125: தொடரலாமா / வேண்டாமா ?



உண்மையாகச் சொன்னால், நீலு தேவேந்திரா கதை இன்னும் முடியவில்லை. 

இன்னும் பார்க்கப் போனால், நீலுவுக்கு அந்த வீட்டில் நிகழ்ந்தவை எல்லாவற்றுக்கும் ஒரு லாஜிகல் விளக்கம் அளிக்கப்படவில்லை.

அந்த விளக்கம் இல்லை என்றால், இந்தக் கதைக்கு அர்த்தமே இல்லை. 



அந்தப் பகுதியை எழுதலாமா / வேண்டாமா என்று தெரிந்துகொள்ள நினைத்தேன். 

எல்லோரும் நேற்றைய பதிவையே முடிவாக ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்றால் நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். 

# நீலு மரணத்திற்கு விளக்கம் வேண்டுமா, வேண்டாமா? 

# நீலு அந்த வீட்டின் அருகே உணர்ந்த செண்ட் மணம், எப்படி / ஏன் அங்கே வந்தது?

# நீலு வீட்டின் உள்ளே பார்த்த புடவை எப்படி வந்தது?

# நீலு கேட்ட பாட்டு எப்படி அங்கே ஒலித்தது?

இதெல்லாம் விவரமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் யாருக்காவது இருக்கின்றதா? 

இந்தக் கேள்விகளுக்கான விளக்கம்தான் இந்தக் கதையின் முக்கிய பகுதி. 

தொடரலாமா / வேண்டாமா? முந்தைய பதிவுகளில்  கருத்துரைத்தவர்கள் எல்லோரும் சொல்லுங்க.


12 கருத்துகள்:

  1. //இதெல்லாம் விவரமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் யாருக்காவது இருக்கின்றதா? //

    இருக்கிறது.
    யாரோ ஒருவரால் திட்டமிட்டு செய்யப்பட்டதா? அல்லது ஆவியின் வேலையா? அல்லது மனபிரமையா? என்று தெரிந்து கொள்ள ஆசைதான்.

    தொடருங்கள். கொக்கி வேலை செய்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கேட்டிருக்கிற கேள்விகள் முக்கியமில்லை.
    அர்த்தமேயில்லாத ஜீபூம்பா வேலைகள், வாசிக்க வாசர்கர்களை வியர்க்க வைப்பது இதெல்லாம் தான் அமானுஷ்ய கதைகளுக்கு முக்கியம். இப்படியான கதைகளுக்கு இது - இதனால் என்ற நியாய தர்ம விளக்கங்களும் அவசியமில்லை. அப்படி விளக்கங்கள் கொடுத்தால் இது அமானுஷ்யத்தை விட்டு விலகிய ஒரு சமூகக் கதை ஆகிவிடும். இது வரை வளர்ந்த கதையிலிருந்தே நீலு செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்து விட்டான் என்று வாசகர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் நீலுவை அந்த பாழடைந்த வீட்டுக்குள் மறுபடியும் அனுப்புங்கள். அமானுஷ்ய சூழ்நிலை அதன் தொடர்ச்சி எல்லாம் உங்கள் விருப்பம். அதனால் அவற்றை விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.

    இதுவரை நடந்தது அந்த அத்துவான வீட்டை நெருங்க நெருங்க நீலுவின் மனசில் உருவெளித் தோற்றமாய் விளைந்த மனப்பீதி என்று என்று மாற்றிக்கொண்டு தொடரலாம்.

    இனிமேல் தான் நீலு அந்த பாழடைந்த வீட்டுக்குள் நுழையப் போகிறான்.

    இதற்கு மேல் உங்கள் சாமர்த்தியம். ஓக்கேவா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய திருப்பம் எல்லாம் யோசனை சொல்லாதீங்க சார். அப்புறம் இந்தக்கதை நீலாயணமாக நீண்டு விடும். படத்திற்கு எழுதப்பட்ட கதை என்பதால் படத்தில் தெரிந்த நிழலுருவத்தை வைத்து ஒரு கதை. ஒவ்வொருவருக்கு வெவ்வேறு உருவங்கள் தெரிந்திருக்கலாம். இந்தக் கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்டதால், சுருக்கமா இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. தொடருங்கள். இம்முறை நீங்களே கேள்விகள் கேட்டு இருக்கீங்க! பதில்களையும் நீங்களே சொல்லிடுங்க!

    பதிலளிநீக்கு
  4. வாலிட் கேள்விகள். நீங்களே சொல்லுங்கள்.
    ஆவியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
    ஏதோ திட்டமிட்டுச் செய்தது போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. தொடருங்கள்... நாங்கள் படிப்பதற்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு