வியாழன், 27 பிப்ரவரி, 2020

கொக்கி 200125 :: சந்தோஷ இல்லம்.


சந்தோஷ இல்லத்தில் நுழையும் முன்பு,  பார்க்க : 


கொக்கி 200125 ::  படம் பார்த்துக் கதை எழுதுங்க!

எழுதியவர்:  திருமதி ரேவதி நரசிம்ஹன் 






இதைவிட வெளிச்சமாக , ஒரு வீடு நாங்கள்  பேரனின்  பள்ளிக்குச் செல்லும்   வழியில்  இருக்கிறது . ஒரு முதியவர்  தனியாக வசிப்பது தெரியும்.  அவருடன் ,அவரது செல்லம்   (கோல்டன் ரெட்ரீவர்)  ஒன்றும்  விளையாடியபடி  வலம் வரும்.

இரண்டு வாரங்கள் கழித்து,  அந்த வழியாகப்  போனபோது  அங்கே ஆம்புலன்ஸ்  நிற்பதைப் பார்த்தோம்.

நான்   'தனியா இருக்காரே, என்ன ஆச்சோ' என்று கவலைப்பட மகள், "இந்த ஊர் மனிதர்கள் திடமானவர்கள் மா ஒன்றும் கெடுதல் இருக்காது"  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்சில் இருந்து ஒரு  முகம்,  பெண்ணைப் பார்த்துக் கை காண்பித்துச் சென்றது.

''ஓஹோ, நம்ம ரஞ்சனி மா, தாத்தா ராஷ் காப்லி  மருத்துவ மனைக்குப் போகிறார்"  என்றாள்  பெண்.

ரஞ்சனி எங்கள் சப் டிவிஷனில் இருக்கும் பெண்தான்.

அவளிடம் தொலைபேசிய போது, தாத்தா மயக்கமாகி விழுந்து விட்டதாகவும், அவர் எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருக்கும் அலாரம் ஹாஸ்பிடலில் ஒலித்ததால், உடனே  வந்ததாகவும் சொன்னாள்.

கால்  கணுக்கால்  பிசகி நினைவு தப்பி இருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகமாகி,   அவருக்கு சின்ன ரத்த அடைப்பு இருப்பதாகவும். , அறுவை சிகித்சை செய்யப்பட்டு, அடுத்த நாள்  முதல் பத்து நாட்கள்,  அவர் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும் என்றும், அவர் மகன்  நியூயார்க்கில் இருந்து  வருவார் என்று செய்திகளை  பகிர்ந்து கொண்டாள் . " நீ தான் அந்தப் பக்கம் அடிக்கடி போவியே, இரண்டு வாரத்தில்  தாத்தா வெளியில்  உட்கார்ந்திருப்பார், பார் " என்று பேசி முடித்தாள்  ரஞ்சனி.

பேரனின் இசைக் குழு பங்கேற்கும் நிகழ்ச்சிக்குப்  போகும் வழியில் 
ரஞ்சனி  சொன்னது போலவே தாத்தா வெளியில் காலை நன்றாக நீட்டிக் கொண்டு, தன்  செல்லத்தின் தலையைத் தடவிக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

முகம் தெளிந்திருந்தது. 

உள்ளிருந்து  ஒரு  பெண்  அழகாக மூடப்பட்ட தட்டில் ஏதோ  ஒரு பழச்சாறு கொண்டுவந்து கொடுத்ததைப்  பார்த்தபடி கடந்தோம்.





ஆம் .வசந்தம் வந்தே விட்டது.



தாத்தாவுக்குப் பணம் பிரச்சினை இல்லை.

மருத்துவ மனையில்  படுத்திருந்த போது , தன் மன நிலையையும் மேம்படுத்திக் கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவி மறைந்தது அவரை  இந்த  உயிர்ப்பில்லாத வாழ்க்கையில் அமர்த்தி விட்டது.

அவரது  தமக்கை அவருடன் வந்து இருந்தார். அவரும் தன்  இடத்துக்குத் திரும்பி விட்டார். ஒரே மகன், 45 வயதில்  மறு  மணம்  முடித்து  தன் வாழ்க்கையை,அனுபவித்துக் கொண்டிருந்தான். 

அவனைப் பொறுத்தவரை,  'அப்பா   வலிவுள்ளவர். வாழ்வை சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. 'அதற்கு மேல் அவன் வாழ்வு அவனுக்கு முக்கியமானது.

மருத்துவ மனையில் இருக்கும்போது   வீட்டுக்கு எது வேண்டும், எது மாற  வேண்டும்  என்றெல்லாம்  யோசிப்பது அவருக்குப்  பிடித்த பொழுது போக்கானது. உடனே செயலில் இறங்கினார்.

அவருக்குத் தெரிந்த மெக்சிகன் தோட்டக்காரரை வரவழைத்து  அந்தப் பெரிய தோட்டத்தை ஒழுங்குபடுத்தச் சொன்னார். உடலில்  தெம்பு ஏற ஏற, அவரது சிந்தனைகளும்  சுறு சுறுப்படைந்தன .அவரைப் பார்க்க வந்த செல்லத்தின் அன்பும் அவரை ஊக்கப்படுத்தியது. 

அடுத்து என்ன என்று யோசிக்க வைத்தது. வீட்டுக்குப் புது  மேக் ஓவர் எனப்படும் ,வெளிப்பூச்சு, புது ஜன்னல்  கதவுகளுக்கு வர்ணங்கள், புது சிட்  அவுட் அமைக்கப்பட்டன. 

வீட்டுக்குப் பின்னால் மக்காச்சோளம்  பயிரிடப் பட்டது.

அவருக்கு உதவியாக வந்த  கரேன், தன்  முனைப்போடு   கவனம் செலுத்தி   பல பூச்செடிகளை  வண்ணங்களின் கோலாகலமாகப் பாதை எங்கும் நட , வீடே  பளபளப்பாகியது.

ஏப்ரல் சென்று மே  வந்ததும், மகன்  பார்க்க வந்தான்.  பேய் பங்களா என்ற  பெயர்  மறைந்து,  சந்தோஷ இல்லம்  என்ற பெயரைத் தரித்து நிற்கிறது, இப்போது அந்த வீடு.

பகல் வேலைக்கு கரேன்  உதவியும், இரவில் பிலிப்  என்ற  40 வயது மனிதரும் துணை இருக்க, அங்கே நர்சரி  ஒன்றை ஆரம்பிக்கப் 
போகிறாராம் தாத்தா ஜேகப் .



    

வாழ்க வளமுடன்.  


(வல்லிசிம்ஹன்) 



8 கருத்துகள்:

  1. மிக நன்றி. உப்பு காரம் சேர்த்து இருக்கணுமா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் இருக்கு என்று நினைக்கிறேன். மற்ற வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

      நீக்கு
    2. ம்ஹூம். ஸாரி ஜி. கடை விரித்தும் பொருள் கொள்வோர்
      இல்லையே.
      மசாலா இல்லாத கதை சொல்லிவிட்டேன்.

      நீக்கு
  2. படம் எதிர்மறை எண்ணங்களைச் சொன்னால், பகிர்வு நேர்மறை எண்ணங்களின் வலிமையைச் சொல்கிறது.

    பேய் பங்க்ளாவிலிருந்து சந்தோஷ இல்லம்! நல்ல மாற்றம்....

    சிறப்பான கதையைச் சொன்ன வல்லிம்மாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கதையை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை. ஒரு பேய் வீட்டை சந்தோஷ இல்லமாக மாற்றியிருக்கிறது உங்களின் பாசிட்டிவ் அப்ரோச். தெளிவான, எளிமையான நடை. 

    பதிலளிநீக்கு
  4. இந்த கதையை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை. ஒரு பேய் வீட்டை சந்தோஷ இல்லமாக மாற்றியிருக்கிறது உங்களின் பாசிட்டிவ் அப்ரோச். தெளிவான, எளிமையான நடை. 

    பதிலளிநீக்கு
  5. பேய் பங்களா சந்தோஷ இல்லமாக மாறியது சந்தோசம்தான் .... தாத்தாவின் பக்கத்தில் அவருக்கு துணையாக "நன்றியுள்ள ஜீவன்" அமர்ந்திருப்பதால் இனி சந்தோஷத்திற்கு குறைவிருக்காது... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு