புதன், 5 பிப்ரவரி, 2020

சிவ பார்வதி.


(நேற்றைய பதிவின் தொடர்ச்சி) 

படங்களை அனுப்பிய அரைமணி நேரத்தில், தங்கதுரையின் அலைபேசிக்கு, வினோத்திடமிருந்து ஒரு செய்தி வந்தது. ' ஆஹா அற்புதமான லொகேஷன் சார்! இது எங்கே இருக்கு என்று விவரம் அனுப்புங்க. நானும் இதைப் போல் இருக்கின்ற சில இடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை நாளை போய்ப் பார்த்து உங்களுக்கு படம் எடுத்து அனுப்புகிறேன். இந்த இடத்திற்குத்தான் நாளை நீலு சாரைக் கூப்பிட்டுக்கொண்டு போகப்போகிறீர்களா?'

தங்கதுரை, நாளை செல்லவிருக்கும் இடம் அதுதான் என்றும், அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசத்தையும் வினோத்திற்கு அனுப்பி வைத்தார். 

* * * 


மறுநாள் மாலை, தங்கதுரை, நீலு தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக்கொண்டு, முதல் லொகேஷனைக் காட்ட, தன் காரில் கிளம்பினார். 

தங்கதுரையின் அலைபேசியில் பாட்டரி சார்ஜ் மிகவும் கீழிறங்கி இருந்ததால், அது தானாகவே ஆஃப் ஆகியிருந்தது. காரில் இருந்த மொபைல் சார்ஜரில் அதை சார்ஜ் செய்ய இணைத்தார். 

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணம். 

பயண நேரத்தில். சினிமா உலகம் பற்றி நிறைய தகவல்கள், கிசு கிசு செய்திகள் என்று பேசியவாறு பயணம் செய்தனர். காரை ஓட்டியவாறு இருந்ததால், தங்கதுரை அதிகம் பேசாமல் பாதையில் கவனமாக இருந்தார். அவ்வப்போது சில கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தார். 

த : " நேற்றே கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போ கேட்கிறேன். அப்புறம் அந்த பார்வதி இருந்த வீடு, அவளுடைய சொத்து எல்லாம் என்ன ஆச்சு? அவளுடைய இறுதிச் சடங்குகளை யார் செய்தார்கள்?" 

நீ : " பார்வதியின்  அப்பா உயிரோடு இல்லை. நான் அவளை சந்தித்த சமயம், அவளுடைய அப்பா காலமாகி ஒரு வருடம் ஆகியிருந்தது. ஆந்திராவில் அவள் இருந்த ஊரில், அவளுடைய தாயார், அந்தத் தாயாரின் தம்பி - அதாவது பார்வதியின் தாய் மாமா, அப்புறம் பார்வதியின் குட்டித் தம்பி  தாஸ் என்று ஒரு சிறுவன் எல்லோரும் இருந்தனர். அவர்கள் யாரும் பார்வதியோடு சென்னை வரவில்லை. பார்வதி தற்கொலை செய்துகொண்ட தகவல் அவர்களுக்குப் போனதும், அவர்கள் வந்தனர். பார்வதியின் தாய் மாமன்தான் இறுதிச் சடங்குகள் செய்தார் என்று கேள்விப்பட்டேன். அவள் பெயரில் இருந்த சொத்துகளை, தாய் மாமன் உரிமை பெற்றார் என்று சொன்னார்கள். அதில் எவ்வளவோ பொருட்கள் நான் வாங்கித் தந்தவை. " 

த : " இறுதிச் சடங்குகளுக்கு நீ போகவில்லையா? "

நீ : " இல்லை. தற்கொலை செய்துகொண்டு விட்டாள் என்ற செய்தி தெரிந்தவுடன், அன்று மாலை அவள் வீட்டுக்குப் போய், சடலத்திற்கு மாலை அணிவித்து வந்ததோடு சரி. மறுநாள் நான் ஷூட்டிங் சம்பந்தமாக பெங்களூர் சென்றுவிட்டேன்."

கார் மேலும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றது. 

த : " நாம் பார்க்க வேண்டிய முதல் லொகேஷன் வந்துவிட்டது. கொஞ்சம் இரு. காரில் இருந்தவாறே நான் படம் எடுத்த கோணத்தை உனக்குக் காட்டுகிறேன்."

தங்கதுரை தன் மொபைலை சார்ஜரிலிருந்து விடுவித்தார். மொபைலை ஆன் செய்தார். 

வாட்ஸ் ஆப் மெசெஞ்சரில் பல செய்திகள் இன்னும் படிக்கப்படவில்லை என்ற நிலைத் தகவலைப் பார்த்தார். 

வினோத் அனுப்பிய தகவல்கள் மட்டுமே பல இருந்தன. 

முதல் செய்தி வினோத் காலையில் அனுப்பியிருந்த ஒரு படம். 

அது :  



(தொடரும்) 
    

10 கருத்துகள்:

  1. பட வரைவு பிரமாதம். பேசிக்கொண்டே கதை நகரும் விதம் அருமை.
    இந்த வினோத் பார்வதியின் மறு பிறவியோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்குமோ? பார்ப்போம்.

      நீக்கு
    2. பாதியில் நிற்கிறது நான் எழுத ஆரம்பித்த எ பி கதை.
      முக நூல், எபி புதன், மற்ற பதிவுகள்
      என்று நேரம் திருடு போகிறது.போதாக்குறைக்கு வாட்ஸாப்
      அண்ட் பட்டிமன்றங்கள்:)

      நீக்கு
    3. நேர நிர்வாகம் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் திட்டமிட்டு நிர்வகிக்க இயலும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் கணினியில் தட்டச்சு செய்வது என் வழக்கம்.

      நீக்கு
  2. ஆஹா... படத்தில் இப்படி சிவபார்வதி வரைந்து காண்பித்து, அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வைத்து விட்டீர்கள்.

    மேலும் தெரிந்து கொள்ள, காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. என்.டி.ஆர். போய் இத்தனை காலத்துக்குப் பின்னர் மறுபடி சிவபார்வதியா? புகைப்படத்தில் வரைந்திருப்பது நீங்களா? அழகாய் வரைந்திருக்கிறீர்கள்! அடுத்து என்ன என அறிய ஆவலுடன் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  4. சிவபார்வதி தாண்டவம் ஆரம்பித்து விடுமோ!

    பதிலளிநீக்கு