புதன், 10 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம். பகுதி 1.

 மின்நிலா பொங்கல் மலர் 2021 பற்றிய விமரிசனம் - பகுதி 1. 

எழுதியுள்ளவர் : நெல்லைத் தமிழன் 

மின்னிலா – பொங்கல் சிறப்பிதழ் – விமர்சனம் – நெல்லைத் தமிழன்

 

மலரில் பலதரப்பட்டவர்களின் contribution, மொத்த மலரையும் அனைத்து வயதினருக்கும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பகுதி சிலவாவது இருக்கும்படி மலரின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது. சிறப்பிதழில் எழுதிய, பங்கெடுத்துக்கொண்ட அனைவருமே பாராட்டிற்குரியவர்கள் என்றால் மிகையில்லை.  அடுத்த சிறப்பிதழுக்கு இதை எழுதுவோம், இந்தப் படங்களை அனுப்புவோம் என்று படிப்பவர்களை ஆர்வம் கொள்ள வைக்கிறது.


மலரின் சிறுகதைகள் சிறந்த தேர்வாக அமைந்திருந்தது ஆச்சர்யம்தான். பத்திரிகைகளில் ஆயிரம் கதைகள் வந்தால் அதில் ஓரிரண்டு தேர்வு செய்வதால், சிறப்பாக இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மின்னிலா போன்ற முயற்சியில் கதை எழுதுபவர்கள் சிறந்ததாக எழுதியிருப்பதுதான் ஆச்சர்யம்.  அதில் அப்பாத்துரையின் ‘அன்பு மகள்’ மிகச் சிறப்பாக, நம்மை இழுத்துப் பிடிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.  கதை ஜில்லிட வைத்தது.  ‘பேய்க்கதை மன்னன்” என்று தைரியமாக அவருக்கு பட்டம் தந்துவிடலாம், ‘என் கதைக்கருவை எடுத்தாண்டு மொழியாக்கம் செய்து nativityஐக் கொண்டுவந்தது’ என்று யாரும் சண்டைக்கு வராதவரை.


இந்த மாதிரி ‘மலர்’களில், சமையல் குறிப்புகள் என்பது ஊறுகாய் போலத்தான். ஆனாலும் சின்னஞ்சிறு தளிர் மோர்க்குழம்பு செய்யக் கற்றுக்கொள்வதை  “அம்மா செய்த மோர்க்குழம்பில்” மிகச் சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார்  ரேவதி நரசிம்ஹன். படிக்கும்போதே ஊதுகுழல், மண் அடுப்பு, பாவடை சட்டை (சிவப்பு பாவாடை, இள மஞ்சள் சட்டை) போட்டுக்கொண்ட இரட்டைச் சடையுடன் கூடிய சின்னப்பெண், பக்கத்தில் அம்மா என்று ஜெ.வின் ஓவியம்போல மனதில் காட்சி மலர்கிறது. கீதா ரங்கனின் சிரோட்டியைவிட, அதற்கான படங்கள் அட்டஹாசமாக வந்துள்ளன, சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இதுவரை சாப்பிட்டிராத சிரோட்டியை அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது செய்து தருவாரா இல்லை செய்முறையைப் படித்து நாமேதான் செய்துகொள்ளணுமா?


ஊறுகாய் பற்றி கேஜிஜி வாசகர்களை எழுதச் சொன்னாலும் சொன்னார், மலர் முழுவதுமே ஊறுகாய் நெடி அடிக்கும்படி நிறைய கட்டுரைகள். எடிட் பண்ணியிருக்கலாமோ?  ஆனாலும் காமாட்சியம்மாவின் ‘வெந்தய ஊறுகாய்’, ‘அட..இதிலுமா ஊறுகாய்’ என்று நம் புருவத்தை உயர்த்த வைக்கிறது. உடலுக்கு நல்லது என்பதில் சந்தேகமே இல்லை, ஆனாலும் சமீபத்தில் கேஜிஜி சிலாகித்த ஜாதிக்காய் ஊறுகாய் போல, இது எப்படி இருக்குமோ என்றும் யோசிக்கவைக்கிறது.


மலரை வேகமாகப் புரட்டியபோது நாக்கை நீட்டியிருக்கும் பெண்ணின் பட த்தைப் பார்த்து ‘எந்த நடிகை’ என்று கேட்டிருப்பார்களோ என்று பார்த்தால், ஊர் பெயர் கண்டுபிடிக்கும் புதிரில் அதுவும் ஒன்று போலிருக்கிறது.


மலரின் வடிவமைப்பில் நிறைய உழைப்பு தெரிகிறது. அதற்கான முயற்சிகள் எடுத்த கேஜி கௌதமன் பாராட்டுக்குரியவர். மலர் பளீரிடவேண்டும் என்பதற்காக நிறைய ஓவியங்களையும் படங்களையும் சேர்த்திருக்கும் விதம், வியக்கவைக்கிறது. அருண் ஜவஹரின் ஓவியங்கள் கண்ணைக் கவருகின்றன. அவருடைய அனைத்து ஓவியங்களும் நன்றாக இருந்தாலும், முகப்புப் படம் மிக மிக அருமையாக வந்துள்ளது. பாராட்டுகள் அருண் ஜவஹருக்கு. பலரிடமிருந்து படைப்புகளை வாங்கி, அதில் திருத்தங்கள் சொல்லி, அவைகளைக் கோர்த்து ஒரு மலர் தயாரிப்பது சுலபமல்ல. மிகச் செழுமையாகச் செய்திருக்கிறார் கேஜிஜி. பாராட்ட வேண்டிய உழைப்பு.  மலரைப் படிப்பவர்கள் கூறும் ஆலோசனைகள், இனி வரும் மலருக்கு மிகவும் சிறப்புச் சேர்க்கும்.  குறை என்று பார்த்தால், படங்களை format செய்திருக்கலாம், அந்த அந்தப் பகுதிகளோடு சரியாக இணைத்திருக்கலாம். உதாரணமா கேள்வி பதில் பகுதில படம் பெரிது என்பதால் அடுத்த பக்கத்துக்குப் போவதால் முந்திய பக்கத்தில் பாதிப்பகுதி வெற்றிடமாக இருப்பது, இதே குறை ‘நந்தீஸ்வர் தரிசனம்’ பகுதியில் இருப்பது, ஓவியங்கள் பகுதியில் சில ‘ஏனோ தானோ’வென இருப்பது ஆகியவற்றைச் சொல்லலாம். அதற்கான tools, Software துணையுடன் அடுத்த முறை சரிசெய்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேபோல, ‘படங்கள்’ பகுதியிலும் கத்தரி போட்டிருக்கலாம். எழுத்தாளர் அறிமுகம் பகுதியிலும் uniformity maintain செய்யப்படவில்லை (புகைப்பட அளவு, விவரம் போன்றவை). இது ஒரு குறையாகத் தெரிகிறது. மலரில் ஆங்காங்கே தென்படும் எழுத்துப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் ரொம்பவே உறுத்துகின்றன.


அடுத்த முறை இவற்றில் கவனம் செலுத்தி முன்னிலும் மேம்பட்ட மின்னூலை கேஜி கௌதமன் அவர்கள் தருவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.


 அடுத்து --- விரிவான விமரிசனம் - - - -


 (தொடரும்) 




13 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசிப்பனுபவம். நெல்லைத் தமிழன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    மிகச்சிறப்பாக பொங்கல் மலரை வெளியிட்டு இருக்கும் எங்கள் பிளாக் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான மலர் அழகான தொடரும் விமர்சனம் பாராட்டு எழுதி முடியாது அவ்வளவு பாராட்டலாம் அளவே இல்லை அன்புடன்

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து விமரிசனம் முழுவதையும் படிச்சுட்டுச் சொல்றேன். இன்னும் எத்தனை பேர் அனுப்பி இருக்காங்களோ! எழுதினவரைக்கும் நல்லா எழுதி இருக்கார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு பகுதிகளும் நெல்லைத் தமிழன் எழுதியவையே. இன்னும் ஐந்து நாட்களுக்கு விரிவான விமரிசனம் தொடர உள்ளது.

      நீக்கு
    2. மிகச் சிறப்பாக ஆராய்ந்து விமரிசித்திருக்கிறார்
      நெல்லைத்தமிழன்.
      வாசகர்கள் கருத்து என்று சொல்வதில் இத்தனை
      ஆழமாக அனுபவித்துச் சொல்லும் அன்பு முரளிக்கு வாழ்த்துகள்.

      மிக மிக ரசித்தேன்.ஒரு படைப்புக்கு நல்ல ரசிகன்
      எவ்வளவு தேவை என்பதை
      இந்தப் பதிவில் உணர முடிகிறாது.
      மின் நிலாவுக்கும் நெல்லைத்தமிழனுக்கும் பாராட்டுகள்.

      நீக்கு
    3. வல்லிம்மா... முன்னம் மறுமொழி எழுத யோசித்தேன்.

      நல்ல படைப்புகள்தான் வாசகனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தீனி. நன்றாக இருந்ததை நன்றாக இருந்ததுன்னு எழுதியிருக்கிறேன். எழுதினவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

      நீக்கு
  4. நெல்லைத் தமிழன் மின்னிலா பொங்கல் சிறப்பிதழ் விமர்சனம் மிக நன்றாக செய்து இருக்கிறார் .
    நானும் இன்னும் முழுதும் படித்து முடிக்க வில்லை. படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது.

    விமர்சனம் படிக்க தூண்டுகிறது.

    மின்நிலாவை சிறப்பாக பலவிதங்களில் வெளியிடும் கெளதமன் சாரையும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு