சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு ..
எழுதியவர் : குரோம்பேட்டை குறும்பன்
இதைப் படிப்பதற்கு முன்பு ......
கொக்கி 191222 - பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு
பதிவை ஒருமுறை படிச்சுடுங்க. இல்லாட்டி ஒன்னும் புரியாது.
=============================
வெங்கிட்டுவை திருப்பி அனுப்பிவிட்டு, ரா கி - கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தார்.
என்ன ஆச்சரியம்! இங்கும் இவர் நுழைந்தவுடன் " கெட்டி மேளம் ... கெட்டி மேளம் .." என்ற குரல்.
அங்கு நடந்ததைப் போலவே இங்கும் கூட்டம் முன்னால் பாய்ந்து ஆசீர்வாத அட்சதைகளை வீசினார்கள்.
ஆனால் பின்னால் நின்று யாரும் எதுவும் பேசவில்லை.
ரா கி நேரே மணமேடைக்கு அருகே சென்றார்.
" வாடா ராதா! உன்னைப் பார்த்து பல மாமாங்கம் ஆயிடுச்சு! ஆளு ஜாடை அப்படியே இருக்கு! எப்படி இருக்கேடா? வீட்டுல வேற யாரையும் கூப்பிட்டுகிட்டு வரலையா ? " என்றபடி வரவேற்றார் மணமேடையில் சாஸ்திரிகளுக்குப் பின்னால் நின்றிருந்த தண்டபாணி.
" வந்தேன், வந்தேன், ...நீ எப்படி இருக்கே தண்டு?" என்று கேட்டவாறே மணமேடைப் படிகளில் ஏறி, தண்டபாணியை நோக்கிச் சென்றார் ரா கி.
மேடையில் ஏறிய ரா கி, முதலில் மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தலாம் என்று அவர்கள் அருகே சென்று, அட்சதை தூவி வாழ்த்திவிட்டு, மணப்பெண்ணுக்குப் பின்னே நின்றிருந்தவர்களைப் பார்த்து ..... அங்கே நின்றிருந்த சிவப்புக் கலர் ட்ரெஸ் போட்ட பெண்ணைப் பார்த்ததும் அப்படியே செய்வதறியாது நின்றுவிட்டார்.
இந்தப் பெண் ..... அந்தக் கல்யாண மண்டபத்தில் பச்சைக் கலர் ட்ரெஸ் போட்டு நின்றிருந்தாளே ! இங்கே எப்படி வந்தாள்? அதே அழகிய முகம், அதே சிரிப்பு, அதே அலங்காரம். ஆனால் பச்சைக்கலர் ட்ரெஸ் இல்லை - சிவப்புக் கலர் ட்ரெஸ்.
(நோ நோ -- இது அந்தப் பெண் இல்லை. அந்தப் பெண் அழகி. )
(தொடரும்)
(யோவ் கு கு ---- வானவில்லின் எல்லா கலரிலும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதுவீரா? அடுத்து என்ன? நீலம்? மஞ்சள்? )
இந்தப் பெண். அழகி.ஹாஹா. வண்ண வண்ண.தோற்றங்கள் அஞ்சு ரூபா மாதிாி கதை சுவையாகச் செல்கிறது.
பதிலளிநீக்குகு கு சார்பில் நன்றி.
பதிலளிநீக்குகெள சார்!
பதிலளிநீக்கு'மன்னனும் நானே, மக்களும் நானே' என்பது போல, கு.கு.வும் நானே; ..... நானே' வா?..
எனக்கும் அந்த டவுட்டு இருக்கு.
நீக்குஅங்க மொத பந்தியில சாப்பிட்டுட்டு இங்க ரெண்டாவது பந்தியில மோர் சாப்பிட வந்திருக்குமோ ... ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே ஆண்டவா ... சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
பதிலளிநீக்குஹா ஹா !
நீக்குகாலை டிஃபன் ஒரு கல்யாணத்திலே, மத்தியானச் சாப்பாடு வேறே கல்யாணத்திலேனு நாங்களும் சாப்பிட்டிருக்கோம் பல தடவை. இந்தப் பெண்ணும் அப்படி வந்திருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?
பதிலளிநீக்குஅது எப்படி? ரா கி அந்தப் பெண்ணை அங்கே பார்த்துவிட்டு, உடனே கிளம்பி வெங்கிட்டுவுடன் இங்கே வருகிறார். அதற்குள் அந்தப் பெண் எப்படி வேறு கலர் ஆடையணிந்து இங்கே அவருக்கு முன்பாக வந்து சேர இயலும்?
நீக்குஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஇரட்டையர்களோ பச்சை, சிவப்பு உடை அணிந்த பெண்கள்?
பதிலளிநீக்குஅப்படித்தான் தோன்றுகிறது. பார்ப்போம்.
நீக்கும்ம்ம்... நடத்துங்க! அடுத்து என்ன ஆகும்னு படிக்கக் காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குநீலம், மஞ்சள் டவுட் எனக்கும்! ஹாஹா...
ஆஹா நீங்கதான் குரோம்பேட்டை குறும்பனோ? எனக்கு டவுட் வருது!
நீக்கு