திங்கள், 13 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.1இதற்கு முந்தைய பகுதி : சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2

ஸ்வர்ணலதா கொஞ்சம் யோசித்தாள். 

" வெங்கிட்டு? எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கு. ஆனால் சரியாக நினைவு இல்லை. யாரு அது? "
ரா கி, ஸ்வர்ணாவிடம் சுருக்கமாக முந்தைய கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்தவைகளையும், தன்னை அழைத்து வந்து இங்கே விட்ட வெங்கிட்டு பற்றியும் கூறினார். 

இதுவரை இவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தண்டபாணி, " அப்படியா சமாச்சாரம்? அப்போ அந்தப் பொண்ணு சாருலதாவுக்கு ஏதோ ஆபத்து வரும்போல இருக்கே! நாம என்ன செய்யலாம்? நாம் ஏதாவது செய்து அந்தப் பொண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் " என்றார். 

ரா கி : " ஸ்வர்ணா உன் கிட்ட மொபைல் ஃபோன் இருக்கா? "

ஸ்வ : " எனக்கும் என் சிஸ்டருக்கும் சேர்ந்து ஒரே மொபைல் ஃபோன்தான். எங்க அப்பா கொடுத்திருக்காரு. அது இப்போ சாரு கிட்டத்தான் இருக்கு."

ரா கி : " ரெண்டு பேருக்கு ஒரு ஃபோனா! உன் அப்பா சுத்தக் கருமியா இருப்பார் போலிருக்கே."

ஸ்வ : " சத்தமா சொல்லாதீங்க தாத்தா. எங்க ட்ரூப் ஆட்கள் காதில் விழுந்தால் அப்பாவிடம் வத்தி வெச்சுடுவாங்க!"

ரா கி : " எல்லோருக்கும் உன்னுடைய அப்பாவைத் தெரியுமா ? ஆச்சரியமா இருக்கே! யாரு அவரு?"

ஸ்வ : " அவர்தான் இந்தக் கல்யாணத்திற்கும், அங்கே நடக்கும் கல்யாணத்திற்கும் காண்டிராக்டர் "

ரா கி + தண்டபாணி : " அட! சமையல் காண்டிராக்டர் பொண்ணுங்களா நீங்க? அப்போ சரிதான். உங்களை ட்ரூப்ல சேர்த்து ட்ரூப் சம்பளப் பணத்திலேயும் சிக்கனம் பண்ணும் சாமர்த்தியசாலி என்று சொல்லு. இங்கே இருக்காரா? "

ஸ்வ : " இல்லை. அப்பா வேற ஒரு வேலை விஷயமா திருத்தணி போயிருக்கார். "

ரா கி : " சரி. உங்க ஃபோன் நம்பர் சொல்லும்மா - வேற ஒரு ஃபோனிலிருந்து சாருலதாவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிவிடலாம். "

ஸ்வ : " அது முடியாது தாத்தா.  புதிய நம்பர் எதிலிருந்து கால் வந்தாலும் நாங்க இருவருமே கால் ஆன்சர் செய்யமாட்டோம். " 

ரா கி : " இப்போ என்னதான் செய்வது? " 

" எனக்கு ஒரு ஐடியா வந்துடுச்சு " என்றாள் ஸ்வர்ணலதா .

(தொடரும்) 12 கருத்துகள்:

 1. //அது முடியாது தாத்தா. புதிய நம்பர் எதிலிருந்து கால் வந்தாலும் நாங்க இருவருமே கால் ஆன்சர் செய்யமாட்டோம். " //

  நல்லதுதான். காலம் கெட்டு கிடக்கு.
  திருத்தணிக்கு அப்பா நம்பருக்கு போன் செய்து அப்பாவை சொல்ல சொல்லலாம் சாருலதாவிற்கு அப்பா எடுப்பார்தானே போனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஐடியா ! ஸ்வர்ணலதாவுக்குத் தெரியுதா பார்ப்போம்.

   நீக்கு
 2. ஸ்வர்ணலதாவுக்கு அல்ல. எழுதறவர்க்குத் தான் ஐடியா சொல்லியிருக்காங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதறவர் நம்ப எல்லாம் ஐடியா கொடுத்தால் கண்டுக்க மாட்டார்.

   நீக்கு
 3. நல்ல விறுவிறு தான். சாருலதாவைக் காப்பாற்ற ஸ்வர்ணலதா என்ன செய்யப் போகிறார்? பேசாம திருத்தணி போயிருக்கும் அப்பாவுக்குத் தகவல் சொல்லி விஷயத்தைச் சொல்லி வரச் சொல்லிடணும். அதான் சரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது எப்படிங்க முடியும்? முஹூர்த்தம் முடிந்துவிட்டது. சாருலதாவிற்கு இருக்கின்ற threat, அன்றைக்குள் நடக்க வாய்ப்பு நூறு சதவிகிதம். அதற்குள் அவருக்கு செய்தி அனுப்பி, அவர் வேலையை விட்டு கல்யாண மண்டபத்திற்கு வந்து இவர்களின் கதையைக் கேட்டு, நிலைமையைப் புரிந்துகொண்டு, என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் பொழுது விடிஞ்சிடுமே! பக்கத்துல இருக்கின்ற கல்யாண மண்டபத்துப் பிரச்னைக்கு திருத்தணியிலிருந்து ஆள் வரவேண்டுமா? ஏதேனும் நடக்கிற விஷயமா சொல்லுங்க!

   நீக்கு
 4. என்ன நடக்கப் போகிறது....

  அடுத்த கிளை எப்போது போடப் போறீங்க! காத்திருப்பில் நானும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே மூச்சில் படித்தாச்சு.
   வெகு ஸ்வாரஸ்யம். மொபைல் இல்லாம
   கு கு சார் கதை எழுதினதா சரித்திரமே இல்லையோ.:)
   வயசான காலத்தில் ரா கி,தண்டபாணி இருவரின் சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது.

   கிளை தாவலும் கதைக்கு நகை சுவை கொடுக்கிறது.
   தொடர்கிறேன் நன்றி கௌதமன் ஜி.

   நீக்கு