வியாழன், 23 ஜனவரி, 2020

சிவு சிவு

             

தண்டபாணியிடம் விடை பெற்று, தாம்பூலப்பை வாங்கிக்கொண்டு, வீட்டிற்குக் கிளம்பினார் ரா கி. 

ஆட்டோவில் வந்து இறங்கிய அப்பாவை எதிர்கொண்டு அழைத்தார் அவர் மகன். 




" என்ன அப்பா இது! முஹூர்த்தம் முடிந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, உடனே கிளம்பி வருவேன் என்று சொன்னீர்களே? ஏன் இவ்வளவு லேட்டு? உங்களைக் காணோம் என்று நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். சிவு வேறு ஒரு பக்கம், 'வயசான காலத்துல ஒங்கப்பா கிருஷ்ணா ராமான்னு வீட்டோடு இருக்கக்கூடாதோ! எங்கேயாவது கல்யாணம், கச்சேரி, கதாகாலட்சேபம் என்று சுற்றிவிட்டு வரவேண்டியது. மறுநாள் உடம்புக்கு முடியலை என்று போர்த்தி படுத்துகிட்டு, வீட்டுல இருக்கறவங்க பிராணனை எல்லாம் எடுக்கவேண்டியது ....' என்று திட்டிக்கொண்டே இருக்கா" 

" எப்போ சிவலட்சுமிங்கற பேரை 'சிவு'ன்னு கூப்பிட ஆரம்பிச்சியோ - அவள் எப்போ பார்த்தாலும் நம் எல்லோரிடமும் 'சிவு  சிவு'ன்னு கோபப்பட்டுகிட்டே இருக்கா! நீயும் உன் பையன் முரளியும் அவ கிட்ட பயந்து நடுங்கிகிட்டே இருக்கீங்க"

" அப்பா - சின்னக் குரல்ல பேசு அப்பா. அவ உள்ளே சமையல் அறையில்தான் இருக்கா. அது சரி, ஏன் திரும்பி வர இவ்வளவு லேட்? அதைச் சொல்லு. "

" (சின்னக் குரலில்) என் பேரன் முரளிக்கு ஒரு பொண்ணு பார்த்துவிட்டு வந்திருக்கேன். அவள் மட்டும் உனக்கு மருமகளா வந்தாள்னா - நீங்க ரெண்டு பேரும் பார்த்து, பயந்து நடுங்குகின்ற, 'சிவு'வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, அவளை ஒரு வழி பண்ணிடுவா" என்றார் ரா கி. 


&&&&&&&&&         சுபம்      &&&&&&&&&  

===============================================

பின் குறிப்பு. 

கொக்கி 192222 வைத் தொடர்ந்து வேறு யாரும் எழுதவில்லை என்றால், கு கு, கிளை மூன்று, நான்கு என்று தொடர்ந்து எழுதி, நம்மை போர் அடிப்பார். 'வேண்டாம் அந்த வேதனை' என்று நினைப்பவர்கள், உடனே கொக்கியில் மாட்டிக்கொள்ளும்படி தண்டனிட்டு, மண்டியிட்டு வேண்டிக்கொள்கிறேன். 

===============================================

19 கருத்துகள்:

  1. சுபமாகக் கல்யாணத்தில் முடிந்து விட்டது.
    வேறு ஒரு கொக்கி ஆரம்பியுங்கள் ஜி.
    விறுவிறுப்பாகச் சென்ற கதைக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நான் நினைச்ச மாதிரியே முடிச்சுட்டீங்க. ஆனாலும் முடிவு கொஞ்சம் சொதப்பலோ? வேறே விறுவிறுப்பான முடிவாய் இருந்திருக்கலாமோ? ஆனாலும் கதையை வித்தியாசமான கோணங்களில் நகர்த்திக் கொண்டு சென்றதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. கதை ஆரம்பம் : பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு. சம்பந்தம் இல்லாத ஒரு முதியவர், சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் ஏதோ தீங்கு வரப்போகிறது என்று எதேச்சையாக தெரிந்து கொள்கிறார். கதையைத் தொடர்ந்து எழுதுபவர், எல்லாவற்றுக்கும் சம்பந்தம் ஏற்படுத்தி, அந்தப் பெண்ணுக்கு வந்த பிரச்சனை எப்படித் தீர்ந்தது என்று சொல்லவேண்டும். கதாசிரியர் அதைத்தான் செய்திருக்கிறார்.
      நீங்கள் வேறு வகையில் முடிவை எழுதி அனுப்பினால், அதையும் இங்கே வெளியிடுவோம். வாசகர்கள் வரவேற்பார்கள்.

      நீக்கு
  3. // 'சிவு சிவு'ன்னு கோபப்பட்டுகிட்டே.. //
    ஜிவு ஜிவு, சிவு சிவு ஆகி விட்டதா?.. நடத்துங்க.. நடத்துங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சார் தமிழ்ப்புலவர் ஆயிட்டார். ஜ, ஸ. லாம் உபயோகிக்க மாட்டார்

      நீக்கு
    2. சரி ஜீவி சார் (சீவி என்று எழுதினால் பயமா இருக்கு) முரளிடின் அம்மா பெயர் ஜிவு என்றே வைத்துக்கொள்வோம். முழுப்பெயர் ஜீவலட்சுமி என்று சொல்வோம்!

      நீக்கு
  4. கதை இவ்வளவு சீக்கிரமாக, அப்ரப்ட்டாக முடிக்க வேண்டுமென்று அப்படி என்ன நிர்பந்தம் வந்தது என்று தெரியவில்லை.

    அதுவும் இறுதிப் பகுதி அரைப்பக்க அளவு என்றால் ஜெஞ்சு பொறுக்குதில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுப்போமே என்கிற பரந்த மனப்பான்மைதான்! மேலும், ப்ளாகுகளில் தொடர்கதை என்பதைப் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வரும். அதனால், ஏழெட்டு episodes எழுதி முடித்துவிடுவது நல்லது. இது என்னுடைய அனுபவம்.

      நீக்கு
  5. டிவிஸ்ட்டுகள் சாமர்த்தியமாக இருந்தது தான்; இருந்தாலும் இன்னும் பொறுமையாக அவற்றை அவிழ்த்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  6. ஏற்கனவே தெரிந்து விட்டதினால் --

    கு.கு. யாரென்று, அல்லது எவர்களென்று கேட்கவே மாட்டோமே!...

    பதிலளிநீக்கு
  7. ரா.கி. என்று பத்திரிகைகளுக்கு படம் வரையும் ஓவியர் ஒருவர் இருந்தார். இந்தப் பகுதியில் நீங்கள் ரா.கி. என்று எழுதும் பொழுதெல்லாம் அவர் நினைவு தான் வந்தது.

    கல்கி காலத்தில் அவருக்கு ரொம்பவும் நெருக்கமானவர்கள் தான் -- ராஜாஜி, சதாசிவம் போன்றவர்கள் தான் -- அவரை ரா.கி என்று சொல்வது வழக்கம். மற்றபடி நம்மைப் போன்ற எல்ளோருக்கும் அவர் கல்கி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரா கி - துக்ளக் அட்டைப்படக் கார்ட்டூன்கள் நிறைய வரைந்திருக்கிறார்.

      நீக்கு
  8. கதை முழுவதும் பிடிஎஃப் ல் முழுவதும் படித்தேன். ரொம்ப சினிமாத் தனமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.

    இந்தக்காலத்தில் பெண்ணை எங்கோ பார்த்து, நம்ம பையனுக்கு முடிக்கலாம் என நினைத்துவிட்டால் நடந்துவிடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்காது. // அவள் மட்டும் உனக்கு மருமகளா 'வந்தாள்னா'// வந்தால்தானே - இதுவும் ஒரு கொக்கி!

      நீக்கு
  9. //" எப்போ சிவலட்சுமிங்கற பேரை 'சிவு'ன்னு கூப்பிட ஆரம்பிச்சியோ - அவள் எப்போ பார்த்தாலும் நம் எல்லோரிடமும் 'சிவு சிவு'ன்னு கோபப்பட்டுகிட்டே இருக்கா//

    நீங்கள் சொல்வது சரிதான்.

    வைச்ச பேரை மாற்றி கூப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தவள்.

    வாய் நிறை சிவலட்சுமி அல்லது லட்சுமி என்று அழைத்தால் என்ன!


    //சிவு'வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, அவளை ஒரு வழி பண்ணிடுவா" என்றார் ரா கி. //
    பேரனுக்கு வர போகிற மனைவி மருமகளை ஆட்டி படைக்க வேண்டும் அடக்கி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாரே மாமனார்.



    பதிலளிநீக்கு
  10. கொஞ்சம் எதிர்பார்த்த முடிவு - அதுவும் முடிவு மட்டுமே சொல்ல இந்தப் பதிவு! :) வேறு யாரேனும் இதைத் தொடர்கிறார்களா (தொடர்ந்திருக்கிறீர்களா?) எனப் பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு