திங்கள், 20 ஜனவரி, 2020

ஸ்பை ஸ்னேகா


முந்தைய பதிவின் தொடர்ச்சி. 

ஸ்னேகா சொல்ல ஆரம்பித்தாள்: 

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, எங்க ஆஃபீஸு(டிடக்டிவ் ஏஜென்சி)க்கு, உள்ளூர் போலீஸ் அதிகாரி வந்திருந்தார். 

சில கேஸ்களில், எங்க டிடக்டிவ் ஏஜென்சி உதவியை போலீஸ் கேட்பது உண்டு. 
என் பாஸ் கேட்டுக்கொண்டதால், போலீஸ் கூறிய சில தகவல்களை, கம்பியூட்டரில் பதிவு செய்தேன்.  

போலீஸ் சொன்ன கேஸ்களில் ஒன்று, பெண்களை ஃபோட்டோ எடுத்து, ஃபோட்டோவில் சில மாற்றங்களை செய்து, அந்தப் படத்தைக் காட்டி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிப்பது. சில சமயங்களில், அதே உருவ அமைப்புக் கொண்டவர்களைக்கூட அப்படி ப்ளாக் மெயில் செய்து பணம் பறிப்பார்கள். 

அப்படி ப்ளாக் மெயில் செய்தவர்கள் சிலர் பிடிபட்டபோது, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில படங்களை போலீஸ் குழு ஆராய்ந்துள்ளனர். சில படங்களில் பின்னணி விவரங்கள் - சுவர், சிற்பம், இருக்கைகள் போன்ற விவரங்களை ஆராய்ந்தபோது, பல படங்கள் சில கல்யாண மண்டபங்களில் எடுக்கப்பட்டவை என்று தெரிந்துகொண்டார்கள். 

சந்தேகப்படுகின்ற சில கல்யாண மண்டபங்களின் பெயர்களையும் போலீஸ் பட்டியலிட்டிருந்தனர். அதில் ஒன்று, அந்தக் கல்யாண மண்டபம். 

அப்பாவின் காண்டிராக்ட் விஷயங்கள் எல்லாவற்றையும் டயரியில் எழுதி, நாந்தான் திட்டமிடுகிறேன் என்பதால், இன்றைய கல்யாணத்திற்கு, காண்டிராக்ட் ஆட்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, யார், எங்கே, எப்போது வரவேண்டும் என்பதை எல்லாம் நான் ஒரு வாரம் முன்பே துல்லியமாக செய்துமுடித்துவிட்டேன். 

ஆபீஸில் என்னுடைய பாஸ் கிட்ட சொல்லி, கல்யாண மண்டபத்தில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து ப்ளாக்மெய்ல் செய்து பணம் பறிக்கும் சிலரை அடையாளம் காட்ட அவரின் அனுமதியைப் பெற்றேன்.

சாதாரணமாக, இந்த வகை கேஸ்களில், ப்ளாக் மெய்ல் செய்பவர் நேரடியாக இறங்கமாட்டார். அவர் ஒரு ஏஜெண்டை அனுப்புவார். அந்த ஏஜெண்ட், ஒரு புகைப்படம் எடுப்பவருடன் வருவார். எந்தப் பெண்ணை, அல்லது எந்தெந்த பெண்களை படம் எடுத்துக்கொடுக்கவேண்டும் என்று அவர், அடையாளம் காட்டுகின்ற பெண்ணை அல்லது பெண்களை, புகைப்படக்காரர் படம், எடுத்து, அந்தப் படங்களை, ஏஜெண்டுக்கு விற்றுவிடுவார். 

பெண் வீட்டார் சார்பில்தான் எங்கள் ட்ரூப் காண்டிராக்ட் வேலை செய்கிறோம். எங்கள் ட்ரூப்பில் இருக்கின்ற சமையல் சிப்பந்திமுதல், வீடியோக்காரர், ஸ்டில் ஃபோட்டோ எடுப்பவர் என்று எல்லோருடைய, பெயரும், முகவரியும், ஆதார் நம்பர் உட்பட எல்லாம் என்னிடம் டயரியில் இருக்கிறது. 

ஆனால், மாப்பிள்ளை வீட்டார் பக்க வீடியோக்காரர்கள், ஃபோட்டோகிராபர் போன்றவர்கள் விவரங்கள் என்னிடம் இல்லை. அதனால, கல்யாணக் கும்பலில், ஒரு திருட்டு ஏஜெண்டும், புகைப்படக்காரரும் கலந்தால், அவர்களை மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்துள்ள ஆட்கள் என்று நாங்களும், எங்கள் ஆட்கள் என்று மாப்பிள்ளை வீட்டாரும் நினைத்துவிடுவார்கள். 

நேற்று மாலை, மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கிய நேரத்திலிருந்து கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவரையும் கவனித்தேன். 

பொதுவாக, கல்யாணக் கூட்டங்களில், குழுக் குழுவாக அமர்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பவர்கள், உறவினர்கள் / நண்பர்கள் பட்டாளம். அவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்கள் இருக்க வாய்ப்பு இருக்காது. யாருடனும் ஒட்டாமல் தனியே திரிபவர்களை யார், என்ன என்று கொஞ்சம் முயன்றால் கண்டுபிடித்துவிடலாம். 

எங்கள் ட்ரூப் ஃபோடோகிராபரிடம் சொல்லி, மாப்பிள்ளை வீட்டார் குழுவோடு வந்திருந்த சில ஃபோடோகிராபர்கள் பற்றி விவரங்கள் தெரிந்துவரச் சொன்னேன். 

அவர் அளித்த விவரங்களின்படி, இரண்டு ஃபோட்டோகிராபர்கள், பெயர் உட்பட எந்த விவரத்தையும் இவரிடம் சொல்ல மறுத்திருக்கிறார்கள். 

அந்த இருவரையும், யார் என்று தெரிந்துகொண்டு, நேற்று மாப்பிள்ளை அழைப்பு நேரத்திலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்தேன்.  அவர்கள் எங்கே இருக்கிறார்கள், கூட்டத்தைப் படம் எடுக்கிறார்களா அல்லது தனிநபர்களையா - யாரோடு அடிக்கடி பேசுகிறார்கள் என்பதை இயன்றவரையில் பார்த்துக்கொண்டிருந்தேன். 

(தொடரும்) 

12 கருத்துகள்:

 1. இது என்ன பயங்கரப் புதுத் திருப்பம்.
  மிக மிக சுவாரஸ்யம்.அப்புறம் என்ன ஆச்சு.

  பதிலளிநீக்கு
 2. இவ்வளவு நடக்கிறதா? உலகத்தில்!

  பதிலளிநீக்கு
 3. அட? இத்தனை புத்திசாலியா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னும் ஸ்நேகா? தொடருங்கள். விறுவிறு, பரபர, ஸ்வாரசியமாகச் செல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரி, நீங்க தான் குகு இல்லையே! அப்புறமா எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? பினாமியா? :)))))))))

   நீக்கு
  2. அவர் சார்பில் நன்றி. அவர் எப்போதாவதுதான் பின்னூட்டம் இட வருவார். எனக்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்திருக்கிறார் - அவர் சார்பில் நன்றி உரைக்க!

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  கதையின் திருப்பு முனை சுவாரஸ்யமாக இருக்கிறது. துப்பறிவாளர் தொடர்ந்ததையும் தொடர்கிறேன்.. கதையை விறுவிறுப்பாக எழுதியவருக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... படங்கள் இப்படியும் சிலரால் பயன்படுத்தப்படுவது நடக்கத்தான் செய்கிறது. மேலும் தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

  பதிலளிநீக்கு