சனி, 11 ஜனவரி, 2020

சி க ட்ரெஸ் பொண்ணு - தொடர்ச்சி


முதலில் ... 

ப க ட்ரெஸ் பொண்ணு,

அப்புறம் 

சி க ட்ரெஸ் பொண்ணு 1

படிச்சீங்களா? 

இப்போ பாருங்க கதை எப்படி வளைசல் ஓடிசலோடு போகப்போகுதுன்னு. === அன்புள்ள கு கு. 
முதல் கிளை :

தண்டபாணி, ரா கி யை விசித்திரமாக நோக்கினார். 

" என்ன ராதா? எந்தப் பொண்ணு? யாரைச் சொல்றே? " 

" இதோ கல்யாணப் பெண்ணுக்குப் பின்னால் நிற்கின்றாளே ... சிவப்புக் கலர் ட்ரெஸ் போட்ட பெண். ... " என்று சொன்னபடி அந்தப் பக்கம் பார்த்த ரா கி திடுக்கிட்டார். அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை.

" என்ன ராதா? என்ன ஆச்சு உனக்கு? இங்கே எந்த சிவப்பு ட்ரெஸ் பொண்ணும் இதுவரை மேடையில் நான் பார்க்கவில்லையே? Are you alright?" 

ரா கி என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று நிதானித்தார். 

அப்பொழுது அவர் காதருகே உஷ்ணக்காற்றுடன் ......  " நான் சொல்கிறேன் - என் பெயர் மாயா .... " என்று அமானுஷ்யக் குரல் கேட்டது. 

" மாயாவா ! மாயாவா !! நீ அதே மாயாவா! எப்படி நீ இங்கே ....  " என்று குழப்பமாகக் கேட்ட ரா கி, ஒரு விதிர்ப்புடன் விழித்துக்கொண்டார். 

" ஹாங் - மாயாவாவது - பாயாவாவது? சாயா கொண்டு வந்துருக்கேன் அதைக் குடிங்க ஐயா. சின்ன ஐயா, நீங்க போகவேண்டிய ஆட்டோ இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துடும்னு சொல்லச் சொன்னாரு. ஏதோ பிரண்டு கல்யாணத்துக்குப் போகணும்னு சொன்னீங்களாமே! " என்று சொன்ன வேலைக்காரப் பெண் டீ கோப்பையை அருகே இருந்த டீப்பாயில் வைத்து அகன்றாள். 

' அட! ஆமாம். தண்டபாணி பேத்தி கல்யாணத்துக்குப் போகவேண்டும் என்று சொன்னேன். பையன், வெயிட் பண்ணுங்க அப்பா குளித்துவிட்டு வந்து, ஊபர் ஆட்டோ புக் செய்கிறேன் என்று சொன்னான். வெயிட் பண்ணிய நேரத்தில் கண் அயர்ந்துவிட்டேன் போலிருக்கு' என்று நினைத்துக்கொண்டார். 

பத்து நிமிடங்கள் கழித்து அங்கே வந்த அவர் பையன், " அப்பா ஆட்டோ வந்திடுச்சு. கிளம்புங்க. ஆட்டோ டிரைவரிடம் விலாசம் கொடுத்திருக்கேன். உங்க பையில கல்யாணப் பத்திரிக்கை வெச்சுருக்கீங்களா? ஆட்டோவுக்கு நீங்க பணம் எதுவும் தரவேண்டாம். என்னுடைய PayTM அக்கவுண்டில் இருந்து நேராக அவருக்கு சேரவேண்டிய பணம் சேர்ந்துவிடும். திரும்ப வரும்பொழுது மட்டும் நீங்க உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து ஆட்டோ அல்லது டாக்சியில் வந்து சேருங்கள்" என்று சொன்னான். 

இதன் தொடர்ச்சி இங்கே 

========================================================

இரண்டாம் கிளை அடுத்த பதிவில். 

========================================================

ஆஹா - இது என்ன சோதனை? கு கு என்றால் குழப்பல் குப்பு போலிருக்கு. இப்பவே கண்ணைக் கட்டுது. இதுக்கு மேலே இரண்டாம் கிளை மூன்றாம் கிளை என்று எழுதிக் குழப்புவார் இந்த கு கு. 

ஐயா நெல்லைத்தமிழரே, பா வெ மேடம், வல்லிசிம்ஹன் கீ சா , கீ ரெ, து செ  -- யாராவது வந்து இந்தக் கிளைகளை ஒடித்து கதையை வேறு பாதையில் இட்டுச் செல்லுங்களேன்! உங்களுக்குக் கோடி புண்ணியமாகும் .

=======================================================

12 கருத்துகள்:

 1. நல்லவேளை... நான் இன்னும் கதைக்குள் நுழையவில்லை...

  பதிலளிநீக்கு
 2. லேசான குழப்பத்தின் தொடக்கம். இந்தக் குழப்பம் தொடரும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஹாஹாஹா, நான் தான் ஊரிலேயே இல்லையே! இந்தக் கதையை நான் படிக்கவும் இல்லை. குகு யாருனே எனக்குத் தெரியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவிலிருந்து கதை எழுதக் கூடாதா ? CAA சட்டம் (Cadhai Aezhudhaadheer Amerikkaavilirundhu ... ) ஏதாவது இருக்கா?

   நீக்கு
  2. ஏதேனும் நிகழ்வைக் கூட்டிக் குறைச்சு எழுதினா அது வரும். நீங்க கற்பனை எல்லாம் பண்ணச் சொன்னால்! இங்கே மேல்மாடி காலி! வறட்சி! :))))))

   நீக்கு
  3. கூட்டிக் குறைச்சி எழுதலாம். இது நம்ம ஏரியா. எழுத்தாளர்களுக்கு எல்லா சுதந்திரமும் இங்கே உண்டு. தயக்கம் வேண்டாம்.

   நீக்கு
 4. //அப்பொழுது அவர் காதருகே உஷ்ணக்காற்றுடன் ...... " நான் சொல்கிறேன் - என் பெயர் மாயா .... " என்று அமானுஷ்யக் குரல் கேட்டது.//

  பேய் கதை சொல்ல போகீறீர்கள் என்று பார்த்தால் இப்படி கனவு என்று சொல்லி விட்டீர்கள்.


  கனவில் வந்த மாயா பெண் மாய பெண்தான் . உங்களை குழப்பி எங்களை குழப்பி விட்டாள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹூம்! கிட்டத்தட்ட எல்லோரும் பேயாரை மறந்துட்டப்போ இங்கேயானும் வந்தாரேனு நினைச்சேன். அதுவும் இல்லை! :(

   நீக்கு
  2. ஏற்கெனவே இந்த கு கு படுத்துற பாடு பயங்கரமா இருக்கு. இதுல பேயார், பிசாசு என்றெல்லாம் யாரையாவது இழுத்து உள்ளே விடாதீங்க!

   நீக்கு