வெள்ளி, 17 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4



முந்தைய பதிவின் (சி கா ட் பொ 2.3) தொடர்ச்சி. 
===============================================

ரா கி : " ஸ்வர்ணலதா, சாருலதா ரெண்டுபேரும் உங்க twin பொண்ணுங்க இல்லையா? நீங்க திருத்தணிக்குப் போயிருக்கிறதா சொன்னாளே ஸ்வர்ணா, திருத்தணி வேலை எல்லாம் முடிந்துடுச்சா?"

ரா : " சுவாமீ ! என்னைக் குழப்பாதீர்கள். நான் போன வாரம் திருத்தணிக்குப் போயிட்டு, ரெண்டே நாளில் திரும்பி வந்துவிட்டேனே! இப்போ வீட்டிலிருந்து நேரா இங்கே வந்திருக்கேன் "




ரா கி க்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை. 

ராகவன்,  ராதாகிருஷ்ணன் பேய்முழி முழிப்பதைப் பார்த்தவுடன் ஒருவாறு, என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக்கொண்டார். 

சமையல் வேலைகள் செய்த ஆட்களில், சூபர்வைசர் போல இருந்த ஆளைக் கூப்பிட்டார். " மணி - இங்கே வா. அந்தப் போக்கிரிப் பொண்ணு இங்கே திரும்பவும் வந்திருந்தாளா? அவளை 'அந்த மண்டபத்தில் போய் இரு' என்று சொல்லி அனுப்பி வைத்தேனே! " என்று கேட்டார். 

மணி : " ஆமாம் சார். அங்கே முஹூர்த்தம் முடிந்துவிட்டது என்று சொல்லி இங்கே முஹூர்த்த டயத்தில் திரும்ப வந்திருந்தா. இந்த சார் கிட்டயும், இவருடைய நண்பர் கிட்டேயும் பேசிக்கொண்டிருந்தா. அப்புறம் ஏதோ வீடியோ பதிவு  இவங்க பார்த்துகிட்டு இருந்தாங்க. அதற்கப்புறம் அந்தக் கல்யாண மண்டபத்துக்குப் போறதா சொல்லிட்டுப் போயிட்டா."

ரா கி மேலும் குழப்பமடைந்து, " சார், உங்க பொண்ணு பேரு என்ன?" என்று ராகவனிடம் கேட்டார். 

ரா : " என் பொண்ணு பேரு ஸ்னேகா. ட்ரூப்ல இருக்கறவங்க எல்லோரும் அவளை "ஸ்" என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். உங்க கிட்ட ஸ்வர்ணலதா என்று சொன்னாளா? நிறைய டூப் அடிப்பா. ட்ரூப்ல இருக்கறவங்களுக்கெல்லாம் தன் கையால சம்பளம் கொடுக்கணும்னு என் கிட்ட பணம் வாங்குவா. சம்பளப் பணத்தை அவள் கையால் வாங்குவது ராசி என்று ட்ரூப்ல ரொம்பப் பேருங்க அவளிடம் வாங்கிக்கொள்வார்கள். ஓய்வு நேரத்தில் அவர்களோடு உட்கார்ந்து ரம்மி ஆடி, அவர்களுக்குக் கொடுத்த சம்பளப் பணத்தில் கால் வாசியை ஜெயித்து எடுத்துக்கொண்டு போயிடுவா! அப்புறம் அந்தப் பணத்தை அவர்களுக்குத் திரும்ப  நான் தலையிட்டு வாங்கிக்கொடுப்பேன். உங்க ரெண்டு பேருங்க கிட்டயும் ஏதாவது உருக்கமா டூப் அடித்து, பணம் வாங்கினாளா? "

ரா கி : " பணம் எதுவும் எங்களிடம் கேட்கவில்லை. ஒரே ஒரு சந்தேகம் மட்டும் கேட்கிறேன், நீங்க பயங்கரமான கோபக்காரரா?"

ராகவன் இதைக் கேட்டதும் கட கடவென சிரித்தார். " ஸ்வாமீ - நான் கோபக்காரன் எல்லாம் இல்லை. ஒரே பொண்ணு, அதுவும் தாயில்லாத பொண்ணு என்று ஸ்னேகாவை செல்லமாக வளர்த்து வருகிறேன். அவ செய்கிற போக்கிரித்தனம் எல்லாவற்றையும் ரசிப்பேன். சரி, நீங்க நடந்தது எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுங்க"

ராதா கிருஷ்ணன் காலையில் தான் அந்த இன்னொரு கல்யாண மண்டபத்தில் நுழைந்தது முதல், பார்த்தது, கேட்டது, வெங்கிட்டு பற்றி எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னார். பிறகு இங்கே வந்தது, ஸ்வர்ணாவைப் பார்த்தது, பேசியது எல்லாவற்றையும் சொன்னார். 

ராகவன் எல்லாவற்றையும் நடு நடுவே உரக்கச் சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.  பிறகு சொன்னார்: " சரி, நீங்க கவலைப் படாதீங்க - அந்தப் போக்கிரி எந்த பிரச்னையிலும் நிச்சயம் மாட்டிக்க மாட்டா. அவளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் எங்க ட்ரூப் ஆளுங்க சும்மா விட்டுடமாட்டாங்க. ஆனாலும் ஸ்னேகா இவ்வளவு பொய்ப்பந்தல்கள் கட்ட என்ன காரணம் என்று நானும் தெரிஞ்சிக்கணும். அவளை அங்கேயிருந்து இங்கே கூப்பிட்டுகிட்டு வரச் சொல்றேன். ஏகாம்பரம் - இங்கே வா " என்று கார் டிரைவரைக் கூப்பிட்டார். 

ஏகாம்பரம் அருகே வந்ததும், " அந்தக் கல்யாண மண்டபத்துல என் போக்கிரிப் பொண்ணு இருப்பா. அவளை அப்பா கூப்பிடறார்னு சொல்லி, கூப்பிட்டுகிட்டு வா " என்றார். 

(தொடரும்) 





12 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. //எல்லோரும் அவளை "ஸ்" என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள்.//

    ஸ்..ஸ்... என்ன ஜோரா நம்பற மாதிரி ஒரு நொடிலே மாத்திப்புட்டீங்க, சார்!

    //அவளை அப்பா கூப்பிடறார்னு சொல்லி, கூப்பிட்டுகிட்டு வா " என்றார். //

    வரப்போறதும் ஸ்--ஸில் ஆராம்பிக்கும் பெயர் கொண்டவர் தான்!

    பதிலளிநீக்கு
  3. இரண்டு பேரும் ஒருத்தர் தான்னு நான் முதல்லேயே சொன்னேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்/இப்போப் பாருங்க இரட்டைச் சகோதரிகளில் ஒருத்தி இல்லைனு சொல்லிட்டீங்க! அடுத்து என்ன? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அடுத்து என்னவோ.... தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. போக்கிரி பெண்ணின் அடுத்த நடவடிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கதையில் தீடிரென வரும் திருப்பங்கள் அருமை. அப்படியும், இப்படியுமாக கதை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இரண்டு என்பது இன்று ஒன்றாகி விட்டது. கடைசியில் அந்த வெங்கிட்டும், தனக்கு உறவு எனக்கூறி ராகவன் நாளை கதையை முடித்து வைத்து விடுவார் என நம்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைப்பதெல்லாம் ...... நடந்துவிட்டால் ......... கதைகள் ஏதுமில்லை!

      நீக்கு