ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு - கிளை 2


இதைப் படிப்பதற்கு முன்பு 

இதைப் படியுங்க :

சி க ட்ரெஸ் பொண்ணு 1
இப்போ இரண்டாம் கிளைக்குத் தாவுவோம்!


ரா கி சுட்டிக்காட்டிய பெண்ணைப் பார்த்த தண்டபாணி, " ஓ ! இந்தப் பெண்ணா ! இந்தப் பெண் எங்க சொந்தம் இல்லை. நாங்க இந்தக் கல்யாணத்துக்கு சமையல் வேலை, பூ, மாலைகள், கோலமிடுதல், வரவேற்பு, ஜானவாச ஊர்வலம் எல்லாவற்றையும் ஒரே காண்டிராக்டரிடம் விட்டிருக்கோம். எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்த காண்ட்ராக்ட். அந்த ட்ரூப்ல வந்திருக்கிற பெண் இவள். சகலகலாவல்லி. கல்யாண வேலைகள் எதுவாக இருந்தாலும் சுறுசுறுவென்று செய்து முடிப்பாள். ட்ரூப்பில் இருப்பவர்கள் அவளை, 'ஸ்' என்று கூப்பிடுகிறார்கள் " என்றார். 

ரா கி, அந்தப் பெண்ணின் அருகில் சென்று, " ஏம்மா - உன் முழுப் பெயர் என்ன?" என்று கேட்டார். 

அந்தப் பெண் புன்னகையுடன், " தாத்தா என் பெயர் ஸ்வர்ணலதா. இங்கே எல்லோரும் சுருக்கமாக 'ஸ்' என்று கூப்பிடுவார்கள்."

ரா கி : " ஒரு விஷயம் கேட்கிறேன், தப்பாக எடுத்துக்கொள்ளாதே, சற்று முன்பு பக்கத்துத் தெரு கல்யாண மண்டபத்தில் இதே மாதிரி மணமக்களுக்குப் பின்னால் நீ நின்றிருந்ததைப் பார்த்தேனே. இங்கே எதுக்கு வந்திருக்கே? எப்படி நான் அங்கிருந்து இங்கே வருவதற்குள் நீ இங்கே வந்தே?  காலை டிஃபன் ஒரு கல்யாணத்திலே, மத்தியானச் சாப்பாடு வேறே கல்யாணத்திலேனு சாப்பிடுகிற பெண்ணா நீ"  (நன்றி கீ சா மேடம்) என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கினார். 

ஸ் : " தாத்தா - பக்கத்துத் தெரு கல்யாண மண்டபத்தில் இருப்பது என்னுடைய இரட்டை சகோதரி, சாருலதா. அந்தக் கல்யாணத்திற்கும், இந்தக் கல்யாணத்திற்கும் ஒரே சமையல் காண்டிராக்ட். நேற்று நாங்கள் எல்லோரும் ஒன்றாக வந்தோம். சாரு அந்த காண்டிராக்ட் கோஷ்டியிலும், நான் இந்த காண்டிராக்ட் கோஷ்டியிலும் என்று பிரிந்து வந்திருக்கிறோம். "

ரா கி : " அடேடே! அப்படியா விஷயம்? என்னை மன்னித்துவிடு ஸ்வர்ணா." 

ஸ் : " அதனாலென்ன தாத்தா - நீங்க தெரியாமத்தானே கேட்டீங்க. வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?"

ரா கி : " இருக்கும்மா - அதனாலதான் நீ யாரு என்ன என்கிற விவரம் கேட்டேன்."

ஸ் : " என்ன சந்தேகம் "

ரா கி : " ஸ்வர்ணா - உனக்கு வெங்கிட்டு என்று யாரையாவது தெரியுமா?" 

(தொடரும் ) 

============================================

கு கு என்றால் குரங்கு குசலா போலிருக்கு. 'இப்போ இரண்டாம் கிளைக்குத் தாவுவோம்!' என்று எழுதியிருக்காரே! 

போன பதிவுலேயே நம்ம ஆஸ்தான எழுத்தாளர்களைக் கூப்பிட்டேன். யாரும் வரமாட்டேன் என்கிறார்களே! 

நம்ம இப்படி கு கு பிடியில சிக்கித் தவிக்கிறோமே! முஜே பச்சாவ், முஜே பச்சாவ் !

============================================

14 கருத்துகள்:

 1. //ஸ் : " தாத்தா - பக்கத்துத் தெரு கல்யாண மண்டபத்தில் இருப்பது என்னுடைய இரட்டை சகோதரி, சாருலதா. அந்தக் கல்யாணத்திற்கும், இந்தக் கல்யாணத்திற்கும் ஒரே சமையல் காண்டிராக்ட். நேற்று நாங்கள் எல்லோரும் ஒன்றாக வந்தோம். சாரு அந்த காண்டிராக்ட் கோஷ்டியிலும், நான் இந்த காண்டிராக்ட் கோஷ்டியிலும் என்று பிரிந்து வந்திருக்கிறோம். "//

  நான் சரியாக சொல்லி விட்டேனே! இரட்டையாராக இருக்கும் என்று.

  பதிலளிநீக்கு
 2. குரங்கு குசலா என்று படித்தவுடன் ராணிப் பத்திரிக்கை நினைவுக்கு வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 3. நான் கூட ஜெமினி என்று க்ளூ போலச் சொல்லலாம் என்றிருந்தேன்.

  கு.கு. கிட்டே க்ளூவா சொன்னா எடுபடாதுன்னு சொல்லாம விட்டுட்டேன். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெமினி ? அது என்ன க்ளூ? எனக்கு மட்டும் சொல்லுங்க. கு கு எப்பவுமே கமெண்ட் படிப்பதில்லை.

   நீக்கு
  2. ஓஹோ இரட்டையரா !! சரிதான்!

   நீக்கு
  3. ஆமாம். குழலூதும் இரட்டையர்கள். நீங்கள் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.

   நீக்கு
 4. எப்படியெல்லாம் யோசிக்கிறார் கு.கு! ராணியின் குரங்கு குசலா இப்போதும் நினைவில்!

  பதிலளிநீக்கு
 5. இரட்டையர்னு நானும் சொல்லி இருக்கணுமோனு இப்போ தாமதமா நினைச்சுக்கறேன். போகட்டும். இதை குகு மாதிரி எல்லோராலும் தொடர முடியாது! நல்லாத் தொடர்கிறார் என்பதோடு யார் இந்தப் பெண்கள் என்ற ரகசியத்தையும் போட்டு உடைச்சுட்டார். ஆனால் மர்மக்குரல் மன்னன் வெங்கிட்டு எதுக்காக இந்தப் பெண்களைப் பற்றிச் சொன்னான் என்பது தெரியணும். அடுத்த கல்யாணத்துக்கு ஆர்டர் எடுக்கவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுசு புதுசா எதையாவது சொல்லிவைக்காதீங்க - கு கு அதைப் படித்தால், அதை ஒரு கிளையாக்கி அங்கே தாவி விடுவார்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  ஆகா.. இந்த இடத்தில் கொக்கியின் பிடியை நான் தவற விட இருந்தேன். அதனால் எனக்கும் பயங்கர குழப்பமாகி எ. பி க்கு வந்து கொக்கி போட்டு கேள்வி கேட்டு விட்டேன். இனி கதையை தொடர்கிறேன். அருமை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு