செவ்வாய், 14 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2


இதைப் படிப்பதற்கு முன்பு, இதைப் படிச்சுடுங்க 

ரா கி & தண்டபாணி : " என்ன ஐடியா சொல்லும்மா. அதுக்கு முன்னே, திருத்தணிக்கு உங்க அப்பாவுக்கு கால் செய்து, சாருலதாவிடம் பேசச்சொன்னால் என்ன ஸ்வர்ணா ?"ஸ்வ : " தாத்தா - அதுமட்டும் வேண்டாம். நானோ சாருவோ ஏதேனும் பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால், அப்பா ஃபோன்லேயே கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்து, ஊருக்கு வந்ததும் எங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்."

ரா கி : "ரொம்பக் கோபக்காரரோ ?"

ஸ்வ : "ஆமாம். "

தண்டபாணி : " சரி. உன்னுடைய ஐடியாவைச் சொல்லும்மா. "

ஸ்வ : " இந்தக் கல்யாணத்தில் வீடியோ எடுப்பவரும் எங்க காண்ட்ராக்ட் ஆள்தான். நம்ம மூன்று பேரும் போய், வாசலில் இந்தக் கல்யாணத்துக்கு வருபவர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருப்பவரிடம், இந்தத் தாத்தா வரும்போது, இவரைக் கொண்டுவந்து விட்ட வெங்கிட்டு அந்த வீடியோவில் வருகிறானா என்று பார்த்து, அவனை முதலில் அடையாளம் காண்போம். வாங்க." 

மூவரும் செல்கிறார்கள். 

வீடியோக்காரர் இவர்களுக்கு வீடியோவை ரீவைண்டு செய்து, ரா கி இந்த மண்டபத்துக்கு வந்த காட்சியை போட்டுக் காட்டுகிறார். 

ரா கி : " ஆ ! அதோ வீடியோவில் நான் வருகின்றேன். அதோ முன்னாடி வருபவன்தான் வெங்கிட்டு"

வீடியோக்காரர், அந்தக் காட்சியை அப்படியே freeze செய்கிறார். 

ரா கி : " இவன்தான் அந்த வெங்கிட்டு. நல்லா பார்த்துக்கோ அம்மா . இவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா ?"

ஸ்வ : " பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போ இவனுக்கு வேற பெயர். என்ன பெயர் என்று ஞாபகமில்லை. சரி. இப்போ அது இல்லை பிரச்னை. இவனுடைய கூட்டாளி யார், அவர்கள் சாருலதாவை என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அந்த திட்டத்தை முறியடிக்கவேண்டும். அதற்குத்தான் ஒரு ஐடியா வந்திருக்கு "

தண்டபாணி : " ஐடியாவ சட்டுனு சொல்லும்மா "

ஸ்வ : " இப்போ நான், இங்கேயிருந்து, என்னுடைய பச்சைக் கலர் ட்ரெஸ் எடுத்துப் போட்டுக்கிட்டு, சாருலதாவா மாறி, அந்த மண்டபத்துக்குப் போகப்போகிறேன். அங்கே சாருலதாவை பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, நானே அங்கே சாருவாக நடிக்கப்போகிறேன். வில்லன் யாரு என்பதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சரியான பாடம் கற்பிக்கப்போகிறேன். 

ரா கி : " ஏதேனும் உதவி தேவை என்றால், எங்க மொபைல் நம்பர்கள் இந்த பேப்பரில் எழுதித் தருகிறோம், எங்களுக்கு மெசேஜ் அனுப்பும்மா"

ஸ்வ : " ஓ கே. தாங்க்ஸ். நான் அந்த மண்டபத்துக்குப் போகின்றேன்"

(தொடரும்) 

10 கருத்துகள்:

 1. இந்த மாதிரி பெண்கள் தான் இப்போது வேண்டும்.
  கில்லாடியா யோசிக்கிறதே.
  சங்கடம் இல்லாமல் பிரச்சினை தீரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்வர்ணா வாழ்க! வாழ்த்திய உங்களுக்கு நன்றி!

   நீக்கு
 2. ஆபத்து என்றால் வலியப் போய் மாட்டிக்கும் குணமா ஸ்வர்ணாவுக்கு? சாருலதாவுக்கு என்ன நேருமோ அது அவளுக்கும் நடக்க வாய்ப்பு இருக்கிறதே! எப்படித் தப்பிக்கப் போகிறாள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அதே பயம்தான். ஆனால் பாருங்க சாருலதாவுக்கு அவளைச் சூழ்ந்துள்ள ஆபத்து தெரியாது. ஆனால் ஸ்வர்ணாவுக்கு வில்லன் கூட்டத்தில் ஒருவனை அடையாளம் தெரிந்துவிட்டது. பார்ப்போம்.

   நீக்கு
 3. அடடா... ரொம்பவே dhதில்லா திட்டமிடறாங்க... என்ன நடக்கப் போகுதோ... நல்லதே நடக்கட்டும்! நாங்கள் காத்திருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 4. சாருவாக நடிக்க போகிற ஸ்வர்ணாவுக்கு என்ன நிகழ போகிறது? தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ஸ்வர்ணா வெற்றிப்பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  கதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. நான்தான் எ. பியில் கொக்கியை பார்த்து அவசரமாக என்னைப் பிடித்த அதில் தொத்தியபடி அங்குமிங்கும் பறந்து பறந்து (அந்த கால மக்கள்திலகம் பாணியில்,) கதை படித்து குழம்பி போனேன். (ஆனால் அவர் குழப்பாமல் அவரும் குழப்பிக்காமல் சண்டை போடுவார்.)

  "ஸ்"துப்பறியும் சிங்கமாக சென்று எப்படி வில்லன்களை கண்டு பிடிக்கப் போகிறார் என்பதை காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு