கொக்கி 191222 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொக்கி 191222 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஏப்ரல், 2020

யாரடி வந்தார் ?


இது நேற்றைய பதிவின் கொக்கிக்கு எழுதப்பட்டது. 
இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியாகும். 

மாலினிக்கு அன்று வந்த எஸ் எம் எஸ் : 

" நாளைக் காலை எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்க இயலுமா? உங்களை உங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கிறேன்." 


புதன், 8 ஏப்ரல், 2020

கொக்கி 191222 : 'மாலினி' :: பானுமதி வெங்கடேஸ்வரன்


நம்ம ஏரியாவில் சென்ற டிசம்பர் 22, வெளியான
கொக்கி 191222    (பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு) 
ஆரம்பத்தை எடுத்து, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதியுள்ள கதை. மூன்று பகுதிகளில் இது முதல் பகுதி. 


அந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பிய வெங்கிட்டுவிற்கு, அப்படி சொன்னால் அவனுக்கு கோபம் வரும். என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித்தான் கூப்பிடுவார். 

வியாழன், 23 ஜனவரி, 2020

சிவு சிவு

             

தண்டபாணியிடம் விடை பெற்று, தாம்பூலப்பை வாங்கிக்கொண்டு, வீட்டிற்குக் கிளம்பினார் ரா கி. 

ஆட்டோவில் வந்து இறங்கிய அப்பாவை எதிர்கொண்டு அழைத்தார் அவர் மகன். 


புதன், 22 ஜனவரி, 2020

சுவர் தாண்டிய சுவர்ணா!


முந்தைய பதிவின் தொடர்ச்சி. 

அப்புசாமி தாத்தா அந்த மண்டபத்திலிருந்து இந்த மண்டபத்திற்கு வருவதற்குக் கிளம்பியவுடன், எனக்கு சட்டென்று ஒரு ஐடியா வந்தது. அவர் உண்மையிலேயே இந்தக் கல்யாணத்திற்கு வந்தவரா என்று தெரிந்துகொள்ள, உடனடியாக செயலில் இறங்கினேன். 


செவ்வாய், 21 ஜனவரி, 2020

சாருலதாவின் பார்வையில் ..... சில சந்தேகங்கள் !


(முந்தைய பதிவின் தொடர்ச்சி. ) 


அந்த போட்டோகிராபர்கள் இருவரும் சந்தேகப்படும்படி எந்த வகையிலும் நேற்று நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களை ரகசியமாகப் படம் எடுத்து, வாட்சாப் மூலம் என் பாஸ் நம்பருக்கு அனுப்பினேன். 


திங்கள், 20 ஜனவரி, 2020

ஸ்பை ஸ்னேகா


முந்தைய பதிவின் தொடர்ச்சி. 

ஸ்னேகா சொல்ல ஆரம்பித்தாள்: 

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, எங்க ஆஃபீஸு(டிடக்டிவ் ஏஜென்சி)க்கு, உள்ளூர் போலீஸ் அதிகாரி வந்திருந்தார். 

சில கேஸ்களில், எங்க டிடக்டிவ் ஏஜென்சி உதவியை போலீஸ் கேட்பது உண்டு. 


சனி, 18 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.5


முந்தைய பதிவாகிய 
        
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4
  
கதையின் தொடர்ச்சி. 

ஸ்வர்ணா என்கிற சாரு என்கிற ஸ்னேகா வரும் வரை, ரா கி , ராகவனிடம் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். 
   

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4



முந்தைய பதிவின் (சி கா ட் பொ 2.3) தொடர்ச்சி. 
===============================================

ரா கி : " ஸ்வர்ணலதா, சாருலதா ரெண்டுபேரும் உங்க twin பொண்ணுங்க இல்லையா? நீங்க திருத்தணிக்குப் போயிருக்கிறதா சொன்னாளே ஸ்வர்ணா, திருத்தணி வேலை எல்லாம் முடிந்துடுச்சா?"

ரா : " சுவாமீ ! என்னைக் குழப்பாதீர்கள். நான் போன வாரம் திருத்தணிக்குப் போயிட்டு, ரெண்டே நாளில் திரும்பி வந்துவிட்டேனே! இப்போ வீட்டிலிருந்து நேரா இங்கே வந்திருக்கேன் "


வியாழன், 16 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.3


இதற்கு முந்தைய பகுதிக் கதை : 
           
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2

பிறகு, தண்டபாணியும் ராதாகிருஷ்ணனும் தங்களின் பால்ய வயது கடலூர் நினைவுகளில் மூழ்கி, நினைவுக் கடலிலிருந்து பல முத்துக்களை எடுத்து ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். 

கோழிமுட்டைப் பள்ளிக்கூட வாத்தியார்கள் பத்மநாபன், ஸ்ரீனிவாசராகவன் தொடங்கி, பால்கார நடேசன், தேவிவிலாஸ் ஹோட்டல் வழியாக, பாடலீஸ்வரர் கோவில் யாளி சிலையின் வாயில் உருளும் கோலி வரை பேசித் தீர்த்தார்கள். 


செவ்வாய், 14 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2


இதைப் படிப்பதற்கு முன்பு, இதைப் படிச்சுடுங்க 

ரா கி & தண்டபாணி : " என்ன ஐடியா சொல்லும்மா. அதுக்கு முன்னே, திருத்தணிக்கு உங்க அப்பாவுக்கு கால் செய்து, சாருலதாவிடம் பேசச்சொன்னால் என்ன ஸ்வர்ணா ?"

திங்கள், 13 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.1



இதற்கு முந்தைய பகுதி : சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2

ஸ்வர்ணலதா கொஞ்சம் யோசித்தாள். 

" வெங்கிட்டு? எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கு. ஆனால் சரியாக நினைவு இல்லை. யாரு அது? "


சனி, 11 ஜனவரி, 2020

சி க ட்ரெஸ் பொண்ணு - தொடர்ச்சி


முதலில் ... 

ப க ட்ரெஸ் பொண்ணு,

அப்புறம் 

சி க ட்ரெஸ் பொண்ணு 1

படிச்சீங்களா? 

இப்போ பாருங்க கதை எப்படி வளைசல் ஓடிசலோடு போகப்போகுதுன்னு. === அன்புள்ள கு கு. 


வெள்ளி, 10 ஜனவரி, 2020

கொக்கி 191222 சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு


சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு .. 

எழுதியவர் : குரோம்பேட்டை குறும்பன் 

இதைப் படிப்பதற்கு முன்பு ...... 


ஞாயிறு, 22 டிசம்பர், 2019

கொக்கி 191222 : பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு


ஆட்டோவில் இருந்து இறங்கினார் அந்த எண்பது வயது முதியவர். ஆட்டோவுக்கு 'பே டிஎம்' மூலம் உரிய பணம் கொடுக்கப்பட்டுவிடும் என்றும், அவர் ஏதும் பணம் கொடுக்கவேண்டாம் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார் அவருடைய மகன். 
  
கல்யாண மஹால். 
    
விலாசம் சரியாக இருக்கின்றதா என்று தன் கையில் உள்ள கல்யாணப் பத்திரிக்கையை எடுத்து, கண்களுக்கு அருகே வைத்து மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தார் பெரியவர். சரியாகத் தெரியவில்லை. முகூர்த்த நேரம்.  களை கட்டியிருந்தது கல்யாண மண்டபம். . இந்த மண்டபமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, உள்ளே சென்றார் அவர்.