செவ்வாய், 21 ஜனவரி, 2020

சாருலதாவின் பார்வையில் ..... சில சந்தேகங்கள் !


(முந்தைய பதிவின் தொடர்ச்சி. ) 


அந்த போட்டோகிராபர்கள் இருவரும் சந்தேகப்படும்படி எந்த வகையிலும் நேற்று நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களை ரகசியமாகப் படம் எடுத்து, வாட்சாப் மூலம் என் பாஸ் நம்பருக்கு அனுப்பினேன். 




பாஸ் அவற்றை, போலீஸ் அதிகாரிக்கு அனுப்பினார். 

போலீசிடமிருந்து, அந்த இருவரில் ஒருவர் மட்டும் சந்தேக நபர் என்று என் பாஸுக்கு செய்தி அனுப்பியிருந்தனர். 

போலீசிடமிருந்து வந்திருந்த சந்தேக நபரை கல்யாண நாள் அன்று முழுவதும் கண்காணிக்கவேண்டும் என்று உறுதிசெய்துகொண்டேன். 

இன்று காலையில் முடிந்தவரை, கல்யாண மேடை அருகில் இருந்துகொண்டு, " அட்சதை எங்கே, பூஜைக்கு புஷ்பம் எங்கே, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி - எங்கே" என்று கேட்கும்பொழுதெல்லாம் அவற்றை எடுத்துத் தருவது, போன்ற மேடை வேலைகளை செய்துகொண்டிருந்தேன். 

கல்யாண மேடையிலிருந்து பார்த்தால் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்பதால், பெரும்பாலும் கல்யாண மேடையில் எங்காவது நின்று, அந்த போட்டோகிராபரை கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

சந்தேக நபரிடம் யார் யார் வந்து பேசுகிறார்கள் என்பதையும் நோட் செய்துகொண்டிருந்தேன். 

முஹூர்த்த நேரத்தில் மட்டும் அவரை தொடர்ந்து கண்காணிக்க முடியவில்லை. தாலி கட்டி முடிந்ததும், அந்த போட்டோகிராபர் வாசல் அருகே நின்றிருந்ததையும் அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததையும் மேடையிலிருந்து பார்த்தேன். 

போட்டோகிராபருடன் பேசிக் கொண்டிருந்தவர் யார் என்று சரியாகப் பார்ப்பதற்குள், இந்த அப்புசாமி தாத்தா அவர் முகத்தை மறைக்கும் வகையில் குறுக்கே வந்துவிட்டார். ( ஸ்னேகா ரா கி யைப் பார்த்து - "சாரி தாத்தா, உங்க முகம் அப்புசாமி போல இருந்ததால், உங்களுக்கு அப்புசாமி என்று ஒரு பெயர் அப்போ அடையாளத்துக்காக வைத்தேன்" ) ரா கி சிரித்தபடி மேலே சொல்லு என்று சைகைக் காட்டினார். 

அப்புசாமி தாத்தா முகத்தில் குழப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி, மேடை நோக்கி வந்தார். அவர் குறிப்பாக என்னைப் பார்த்தபடியே வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

மேடைக்கு வந்தவர், கல்யாணப்பொண்ணு கிட்ட விசாரித்த விஷயங்களும், என்னையே பார்த்தவாறு, என்னிடம் ஏதோ சொல்ல வந்தவர் போன்று இருந்ததும், எனக்கு சில சந்தேகங்களைக் கிளப்பியது. 

அந்த நேரத்தில், மேடையில் இருந்த இன்னொருவர் இந்த அப்புசாமியை, ஒரு ஆளுடன் இந்த மண்டபத்தில் நடக்கும் கல்யாணத்திற்கு அனுப்பிவைத்தார். 

அப்புசாமி, என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, அந்த ஆளுடன் சென்றார். 

அப்போ எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்த அப்புசாமிக்கும், ஏமாற்றுக்காரர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? அப்பாவி போல வந்து யாருக்காவது ஏதேனும் சிக்னல் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம் வந்தது.

சரி, இதை மேற்கொண்டு ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். 

(தொடரும்) 

12 கருத்துகள்:

  1. சாருலதாவின் சந்தேகப் பார்வையில் அப்பாவி அப்புசாமி !
    உதவி செய்யவந்தவருக்கு இப்படியும் ஒரு சோதனையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க! காலம் கெட்டுப்போச்சு!

      நீக்கு
    2. கோமதிம்மா.. உங்களுக்குத் தெரிந்தது சாருக்குத் தெரியவில்லையே!
      பலரின் கைவண்ணத்தில் கதை படாத பாடு படுவது மட்டும் தெரிகிறது. (அந்த பாஸ், ஒருவரைக் காட்டிக் கொடுத்து விட்டது தனிக்கதை.) எது எப்படியிருந்தாலும் எப்படியோ இந்த எழுத்துக் கில்லாடிகள் அந்தத் தொடரும் வரை நீட்டி விடுகிறார்களே!
      அதற்கு மட்டுமே நமக்கு சக்தி இருந்தால் ஆயிரம் பொற்காசுகள் தாராளமாய்க் கொடுக்கலாம்! :))

      நீக்கு
    3. ஹா ஹா ! அதுவும் சரிதான்!

      நீக்கு
    4. பலர் எழுதும் கதையா!,,,,,,! அது சரி. அதுதான் யோயோ மாதிரி பயணிக்கிறதா.ரங்க ராட்டினம் எங்கு நிற்கிறது என்று பார்க்கலாம்:) பஸ்மாசுரன் கதை போலவே தாத்தாவின் மேல் பழ வருகிறதே.

      நீக்கு
  2. பலரெல்லாம் எழுதலை இந்தக்கதையை. குகு தான் எழுதறார் கௌதமனின் முகமூடியைப் போட்டுக் கொண்டு. விறுவிறு. ரா.கி.ஐயையே சந்தேகப்பட்டது நல்லா இருக்கு! ஜாலியாவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    துப்பறிவாளருக்கு என்றுமே சந்தேகந்தானே பலம். சந்தேக கண்களுக்குத்தான் உண்மைகளை கண்டு பிடித்து அவைகளை கண்ணாடியாக பிரதிபலித்து காட்டும் திறன் உண்டு. அருமை. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அட இன்னும் நிறைய விஷயம் இருக்கு போல!

    அப்புசாமி - தாத்தாவிற்கு இப்படி ஒரு பெயரா... ஹாஹா...

    தொடர்கிறேன் அடுத்த பகுதிக்கு!

    பதிலளிநீக்கு