சனி, 25 ஜனவரி, 2020

கொக்கி 200125: படம் பார்த்துக் கதை எழுதுங்க!


அமெரிக்காவிலிருந்து நம்முடைய நண்பர், (மூன்றாம் சுழி) அப்பாதுரை அவர்கள், வாட்சாப் குழுவில் அனுப்பிய இரண்டு புகைப்படங்கள் இங்கே 


 
இந்தப் படங்களுக்குக் கதை எழுதுகிறேன் என்று இதுவரை நான்கு பேர் சொல்லியிருக்கிறார்கள். 

பார்ப்போம். யார் எல்லாம் எழுதுகிறார்கள் என்று!









18 கருத்துகள்:

  1. வீடுகளைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. பல்கொட்டி பேயார்கள் வருவார்களோ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பயமாத்தான் இருக்கு. அமானுஷ்யக் கதைகள் நிறைய வருமோ!

      நீக்கு
  2. பானுமதி வெங்கடேசன் அவர்கள் கருத்தே என் கருத்தும்...

    பதிலளிநீக்கு
  3. இரண்டு படங்களையும் வித்தியாசப்படுத்துகிற பக்க வாட்டு தோற்றம் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் அந்த வார்த்தை தான் கதைக்கு உயிர் நிலையானது. அப்பாதுரை விவரத்தோடு தான் அந்தக் குறிப்பைக் கொடுத்திருக்கிறார. அந்த வார்த்தை இல்லாமல் உயிர்ப்புள்ள கதையை எழுதுவது அர்த்தமற்று இருக்கும் என்பதினால் இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நம்ம எங்கள் ப்ளாக் பேயார் இதுக்கான கதையைக் கொடுப்பார்னு நம்பறேன். காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தை அமாவாசை விரதம் இருப்பதால், வெளியே வருவதில்லை.

      நீக்கு
  5. அமெரிக்காவில் இப்படி அனாதையாக விட பட்ட அமானுஷ்ய பீதியை கிளப்பும் வீடுகள் உண்டு.
    பேய் பங்களா, பேய் வீடு என்பார்கள். பேய் வீடு கதையை அப்பாதுரை சாரே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  6. பேய்க் கதை தான் என்றில்லை; அருமையான சமூகக் கதை கூட எழுதலாம்.
    சொல்லப் போனால் அது தான் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. அந்த வீடுகளைப் பார்த்தால் கைவிடப் பட்ட
    பல உயிர்களின் கதைதான் மனதில் வரும்.
    சோகம்,பரிதாபம்,
    பயம் மூன்று உணர்வுகள் நிறைகிறது. மகள் வீட்டிலிருந்து நெடுஞ்சாலைக்குப்
    போகும் வழியில் நிறைய பண்ணைவீடுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும்.

    அந்த விதமாக யோசிக்கலாம்.
    எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பல் கொட்டிப் பேய் கதை எழுதியவரிடமிருந்து இரண்டு படங்கள் - அமானுஷ்யம்! கதைகளைப் படிக்க நான் ரெடி! யார் யார் எழுதப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு