வியாழன், 16 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.3


இதற்கு முந்தைய பகுதிக் கதை : 
           
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2

பிறகு, தண்டபாணியும் ராதாகிருஷ்ணனும் தங்களின் பால்ய வயது கடலூர் நினைவுகளில் மூழ்கி, நினைவுக் கடலிலிருந்து பல முத்துக்களை எடுத்து ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். 

கோழிமுட்டைப் பள்ளிக்கூட வாத்தியார்கள் பத்மநாபன், ஸ்ரீனிவாசராகவன் தொடங்கி, பால்கார நடேசன், தேவிவிலாஸ் ஹோட்டல் வழியாக, பாடலீஸ்வரர் கோவில் யாளி சிலையின் வாயில் உருளும் கோலி வரை பேசித் தீர்த்தார்கள். 




பேச்சின் நடுவே அவ்வப்போது தங்கள் மொபைலில், ஸ்வர்ணாவிடமிருந்து ஏதேனும் எஸ் எம் எஸ் வந்துள்ளதா என்றும் பார்த்தவண்ணம் இருந்தனர். 

தண்டுவும் ரா கி யும் ஒன்றாகவே சாப்பிடச் சென்றனர். ஒன்றாகவே வெற்றிலை மென்றார்கள். அவ்வப்போது மொபைலை நோட்டம்விடத் தவறவில்லை. 

தண்டபாணி : " என்ன ஆச்சு இந்தப் பெண் ஸ்வர்ணாவுக்கு? ஏன் ஒன்றும் மெசேஜ் அனுப்பவில்லை? சாருலதாவை ஆபத்திலிருந்து காப்பாற்றினாளா? இவளே ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுவிட்டாளா .... "

ரா கி : " எனக்கும் அதே கவலையா இருக்கு. நம்ப அந்தப் பெண்ணை அப்படித் தனியாக அனுப்பியிருக்கக்கூடாதோ? என்ன செய்யலாம்? இப்போ வேறு யாருக்காவது சொல்லி அந்தப் பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யலாமா?"

தண்டபாணி : " அது வேண்டாம் ராதா. ஸ்வர்ணா சொன்னாளே - அவர்கள் ஏதாவது பிரச்னையில்  மாட்டியிருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவங்க அப்பா இவர்கள் இருவரையும் கடுமையாக தண்டித்துவிடுவார் என்று. " 

ரா கி : " இப்போ நாம் என்னதான் செய்வது? சாப்பாட்டு பந்திகள் எல்லாம் முடிந்து நலங்கு நேரம் வந்திடுச்சு. "

தண்டு:  " பார்ப்போம். இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையாக இருப்போம். நிச்சயம் அந்தப் பெண்ணிடமிருந்து ஏதேனும் மெசேஜ் வரும். "

அப்போது கல்யாண மண்டபத்தின் வாசலில், ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவருக்கு, வாசலில் இருந்த வீடியோக்காரர் முதல், உள்ளேயிருந்து ஓடிவந்த சமையல்காரர் வரை எல்லோரும் வரிசையாக வணக்கம் தெரிவித்தனர்.  அவர் உள்ளே வந்து, ஒரு சோஃபாவில் உட்கார்ந்தார். 

ரா கி : " யார் அவர்?"

தண்டு : " எனக்குத் தெரியவில்லை. என்னுடைய பெண்ணைக் கேட்கிறேன். "

தண்டு அவருடைய பெண்ணிடம் சென்று, 'வந்திருப்பவர் யார்' என்று கேட்டார். 

மகள் : " அப்பா! நீங்க இவரைப் பார்த்தது இல்லை. இவர்தான் இந்தக் கல்யாணத்தின் சமையல் தொடங்கி எல்லாவற்றுக்கும் மொத்தக் காண்டிராக்டர். பெயர் ராகவன். அட்வான்ஸ் பணம் போக, மீதியுள்ள காண்டிராக்ட் பணத்தை செட்டில் செய்து வாங்கிக்கொள்ள வந்திருக்கிறார். "

தண்டு வேகமாக ரா கி யின் அருகே வந்து, " வந்திருப்பவர் காண்டிராக்டர் ராகவன். ஸ்வர்ணா & சாருலதா சகோதரிகளின் அப்பா. நான் இதுல எங்கேயாவது சம்பந்தப்பட்டிருக்கேன் என்று தெரிந்தால் என் பெண்ணும் மாப்பிள்ளையும் என்னைத் திட்டுவார்கள். அதனால ஒரு மூணாம் மனுஷனா நீ போய் அவரிடம் சாருலதாவிற்கு வந்திருக்கும் ஆபத்தைப் பற்றி மெதுவாக எடுத்துச் சொல் ராதா " என்றார். 

ரா கி யும் அதற்கு சம்மதித்து, ராகவன் அருகே சென்றார். 

தன் அருகே வந்த ரா கி யைப் பார்த்தார் ராகவன். 

ரா கி : " நமஸ்காரம். என் பெயர் ராதாகிருஷ்ணன். கல்யாணப் பெண்ணின் தாத்தாவுக்கு பால்ய சிநேகிதன். " என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 

ரா : " நமஸ்காரம். ரொம்ப சந்தோஷம்."

ரா கி : " உங்க பொண்ணு, பக்கத்துல இருக்கிற கல்யாண  மண்டபத்துக்குப் போயிருக்கா "

ரா : " அவளை அங்கேயேதானே இருக்கச் சொல்லியிருந்தேன். இங்கே வந்துட்டுப் போனாளா?"

ரா கி : " இல்லை. அங்கே இருக்கிற உங்க இன்னொரு பொண்ணு சாருவுக்கு பிரச்னை வராம பாத்துக்க ஸ்வர்ணா அங்கே போயிருக்கா."

ரா : " ஸ்வர்ணாவா? யாரு அது? சாருவா? அது யாரு? இன்னொரு பொண்ணா ! எனக்கு ஒரே பொண்ணுதான் சுவாமி!"

(தொடரும்) 




14 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம் விறு விறுப்பு. ஓடுகிறது கதை.
    சஸ்பென்ஸ் மேலே சஸ்பென்ஸ்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக நகர்கிறது. அடுத்து என்னவோ என்ற ஆவலுடன் தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... இங்கே ஒரு திருப்பமா....

    அடுத்து என்ன... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //" ஸ்வர்ணாவா? யாரு அது? சாருவா? அது யாரு? இன்னொரு பொண்ணா ! எனக்கு ஒரே பொண்ணுதான் சுவாமி!"//
    ஆஹா! இது என்ன புது கதை!

    பதிலளிநீக்கு
  5. கதையை அலுவலக கணினியில் வாசித்துக் கொள்கிறேன்...
    ஆனால் அதிலிருந்து கருத்துரை இட முடியாது...

    இன்றைக்கு இங்கே வந்ததும் - திருவிழாவில் காணாமல் போன மாதிரி இருக்கின்றது...

    ( நல்லவேளை.. திருவிழாவே காணாமல் போனது மாதிரி இல்லை!..)

    பதிலளிநீக்கு
  6. "எனக்குப் பெண்ணே கிடையாதே?.. ஒரே ஒரு பையன் தானே!" என்று சொல்லுவார் என்று எதிர்ப்பார்தேன்.

    நீங்கள் பரவாயில்லை. ரா.கி.க்கு ஒரு பெண் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா. ஒரே பெண்ணை பையன் போல வளர்த்து வருகிறாரோ!

    பதிலளிநீக்கு