சனி, 18 ஜனவரி, 2020

சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.5


முந்தைய பதிவாகிய 
        
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4
  
கதையின் தொடர்ச்சி. 

ஸ்வர்ணா என்கிற சாரு என்கிற ஸ்னேகா வரும் வரை, ரா கி , ராகவனிடம் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். 
   
    
ரா கி : " ரொம்ப தைரியசாலியா வளர்த்திருக்கீங்க உங்க பொண்ணை. படிச்சு முடிச்சுட்டாளா ? வேற எங்கேயும் வேலைக்கு அனுப்பவில்லையா? உங்களுக்கு உதவியா இருந்துகிட்டு இருக்காளா?"

ரா : " படிச்சு முடிச்சுட்டா. என்னுடைய கல்யாண காண்டிராக்ட் விஷயங்களை சரியாக டயரியில் நோட் செய்து, எல்லாவற்றையும்  கோ ஆர்டினேட் செய்வது அவள்தான். உள்ளூர் கல்யாணங்களில் எங்கள் ட்ரூப் வேலை செய்யும்போது, கல்யாண மண்டபத்துக்கே வந்து எல்லா வேலைகளையும் கோ ஆர்டினேட் செய்வாள். வேலைக்கும் போய்க்கொண்டிருக்கிறாள். எ சா & கா சோ டிடக்டிவ் ஏஜென்சி என்று ஒரு ப்ரைவேட் டிடக்டிவ் ஏஜென்சி. அதில் இவளையும் ஒரு டிடக்டிவ் ஆக சேர்த்துக்கொண்டுள்ளார்கள். இவளுக்கு அவ்வப்போது ஏதேனும் டாஸ்க் கொடுப்பார்கள்.  கல்யாண காண்டிராக்ட் வேலைகள் இருந்தால், ஆபீசில் டாஸ்க் எதுவும் இல்லை என்றால் எங்களோடேயே இருந்து கோ ஆர்டினேஷன் வேலைகளை கவனித்துக்கொள்வாள். "

ரா கி : " உங்க பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏதாவது பிளான் இருக்கா? சொந்தத்துல யாராவது மாப்பிள்ளை இருக்கிறார்களா?" 

ரா : " பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டும் என்று நினைப்பதுண்டு. சொந்தத்தில் யாரும் சரியான, இவளுக்குப் பொருத்தமான பையன்கள் இல்லை. "

ரா கி, தொடர்ந்து தன் குடும்பம் பற்றி ராகவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ராகவனைப் பற்றியும் அவருடைய பூர்வீகம் பற்றியும் தெரிந்துகொண்டார். 

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஸ்னேகா வந்து சேர்ந்தாள். " ஹி டாட்! திருத்தணியிலிருந்து எப்போ வந்தீங்க? " என்று அப்பாவி போல கேட்டாள். 

ரா : " ஏய் போக்கிரி ! இங்கே ஏற்கெனவே உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏற்றியாச்சு. சும்மா நடிக்காம இங்கே வந்து நடுவுல இருக்கின்ற சோஃபாவுல உட்காரு. நாங்க கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் டூப் விடாம உண்மைய சொல்லு. " 

ஸ்னேகா அழகாக சிரித்தபடி அப்பா காட்டிய சோஃபாவில் உட்கார்ந்தாள். 

" கேள்வி எல்லாம் கேட்காதீங்க. நானே நடந்தது என்ன என்று சொல்கிறேன். சந்தேகம் ஏதாவது இருந்தால் மட்டும் கேள்வி கேளுங்க. சரியா?"

(தொடரும்) 
                 

7 கருத்துகள்:

  1. ஸ் என்ன சொல்ல போகிறாள் பார்ப்போம்.

    //எ சா & கா சோ டிடக்டிவ் ஏஜென்சி என்று ஒரு ப்ரைவேட் டிடக்டிவ் ஏஜென்சி. //

    யாரை துப்பறிய போனார் ? பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை முடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. பார்ப்போம் முடிவு என்ன என்று.

      நீக்கு
  2. கலக்கல் துப்பறியும் வேலை. மேலும் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா, ஒரு வழியாகப் போட்ட முடிச்சுகள் எல்லாம் அவிழப் போகின்றன. என்னனு பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பகுதியில் முடிந்து விடும் எனத் தோன்றுகிறது. சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது. அடுத்த பகுதிக்கு இதோ செல்கிறேன்.

    பதிலளிநீக்கு