புதன், 22 ஜனவரி, 2020

சுவர் தாண்டிய சுவர்ணா!


முந்தைய பதிவின் தொடர்ச்சி. 

அப்புசாமி தாத்தா அந்த மண்டபத்திலிருந்து இந்த மண்டபத்திற்கு வருவதற்குக் கிளம்பியவுடன், எனக்கு சட்டென்று ஒரு ஐடியா வந்தது. அவர் உண்மையிலேயே இந்தக் கல்யாணத்திற்கு வந்தவரா என்று தெரிந்துகொள்ள, உடனடியாக செயலில் இறங்கினேன். 




கிடு கிடுவென டிரெஸ்ஸிங் ரூம் சென்று பச்சைக் கலர் டிரெஸ்ஸை மாற்றி, சிவப்புக் கலர் ட்ரெஸ் போட்டுக்கொண்டு, குறுக்கு வழியில் சுவரேறிக் குதித்து, இந்தக் கல்யாண மண்டபத்திற்கு வந்தேன்.

அந்தக் கல்யாண மண்டபத்தின் சமையல் செய்யும் பகுதிக்கும், இந்த மண்டபத்தின் சமையல் செய்யும் இடத்திற்கும் நடுவே ஒரே ஒரு ஒற்றைக்கல் சுவர். அதுவும் இடுப்பளவு உயர சுவர். 

      



அப்புசாமி என்னை அந்த மண்டபத்தில் மேடையில் எந்த இடத்தில் பார்த்தாரோ அதே இடத்தில் இந்த மேடையில் அவர் இங்கே வருவதற்கு முன்பு வந்து நின்றுகொண்டேன். 

அப்புசாமி இந்த மண்டபத்துக்குள் தனியாகத்தான் வந்தார். 

நான் எதிர்பார்த்தபடியே மேடை அருகில் வந்து, என்னைப் பார்த்ததும் குழம்பிப் போனார். 

அப்புறம் அவர் கூறிய தகவல்களைக் கேட்டதும், இவர் அப்பாவி (அப்புசாமி) என்று தெரிந்துகொண்டேன். 

அவரை இங்கே கொண்டு வந்து விட்ட ஆளைப் பற்றி, இந்த ரா கி தாத்தா கூறியதைக் கேட்டதும், அந்த வெங்கிட்டுதான் அயோக்கிய கும்பலின் கையாள்களில் ஒருவன் என்று தெரிந்துகொண்டேன். மேலும் அவர்கள் குறி வைத்திருப்பது என்னை என்பதையும் தெரிந்துகொண்டேன்.

வீடியோவைப் பார்த்து, அந்த ஆள் யாரென்று அடையாளம் தெரிந்துகொண்டேன். 

என்னைக் குறி வைத்து, சதி செய்பவர்களை என் கையாலேயே பிடித்து, போலீசில் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். 

ரா கி : " ஏம்மா அப்பவே எல்லா உண்மையையும் எங்க கிட்ட சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை?" 

ஸ்னே : " நான் உண்மையைச் சொல்லியிருந்தால் நீங்க என்ன சொல்லியிருப்பீங்க? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. நீ இங்கேயிருந்தே போலீசுக்கு போன் பண்ணி சொல்லிடு என்றெல்லாம் சொல்லி - என்னை அங்கே திரும்பப் போகவிடாமல் தடுத்திருப்பீர்கள்"

அந்தக் கல்யாண மண்டபத்துக்கு நான் உடனே திரும்பிச் செல்ல சாருலதா, ஸ்வர்ணலதா இரட்டைச் சகோதரிகள், சாருவைக் காப்பாற்ற நான் உடனே அங்கே செல்லவேண்டும் என்று கலர் கலராக ரீல் விட்டுக் கிளம்பினேன். 

உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பச்சைக் கலர் ட்ரெஸ் போட்டுக்கொண்டு அங்கே போவேன் என்று சொன்னேன். ஆனால் அப்புறம் யோசித்துப் பார்த்ததில், அங்கே அந்த அயோக்கிய வெங்கிட்டு மற்றும் போட்டோகிராபர், பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணை தேடிக்கொண்டிருப்பார்கள் என்பது சட்டென்று ஞாபகம் வந்தது. 

உடனே, என் மேக் அப் செட் எடுத்து, ஒரு பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டு, ப்ளைன் க்ளாஸ் மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டு, ஹேர் ஸ்டைலை கொஞ்சம் மாற்றிக்கொண்டு, சிவப்புக் கலர் ட்ரெஸ் பெண்ணாகவே அங்கு சுவரேறிக் குதித்துச் சென்றேன். 

நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் இருவரும் பச்சைக் கலர் ட்ரெஸ் போட்ட அழகிய பெண்ணை கூட்டத்தில் தேடிக்கொடிருந்தனர். 

என் மொபைலில் வெங்கிட்டுவை தூரத்திலிருந்து போட்டோ எடுத்து, விவரங்களுடன் பாஸுக்கு அனுப்பினேன். அவர் அதை போலீசுக்கு அனுப்பினார். 

இரண்டே நிமிடங்களில் போலீசிடமிருந்து மெசேஜ் வந்தது. இவர்களைப் பிடிக்க இரண்டு போலீஸ்காரர்கள் மஃப்டியில் வருவார்கள் என்றும் யார் அந்த போலீஸ்காரர்கள் என்றும் போட்டோவுடன் மெசேஜ் வந்தது. 

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வந்ததும், அவர்களை கல்யாணத்திற்கு வந்தவர்களைப் போல வரவேற்று, பன்னீர் தெளித்து, சந்தனம் கல்கண்டு கொடுத்து, நானே உள்ளே அனுப்பி வைத்தேன். 

வெங்கிட்டுவையும், அந்த போட்டோகிராபரையும், அவர்களின் அருகே சென்ற போலீஸ்காரர்கள், தங்கள் அடையாள கார்டைக் காட்டி, அவர்களை அழைத்துச் சென்று, தூரத்தில் நின்றிருந்த ஜீப்பில் ஏற்றியதைப் பார்த்தேன். எல்லாம் யாருடைய கவனத்தையும் இழுக்காமல் சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டன. 

அப்புறம் என்னுடைய வேஷத்தை எல்லாம் கலைத்துவிட்டு, ஸ்னேகாவாக மாறி, சமையல் க்ரூப் ஆட்களுடன் ரம்மி ஆடப் போய்விட்டேன். 

ரம்மி ஆட்டத்தில் ஃபிராடு அடித்து, காசு ஜெயித்துக்கொண்டிருந்த மும்முரத்தில், இந்த ரெண்டு தாத்தாக்களையும் மறந்தே போய்விட்டேன்! 

( " நோ நோ. 'ரம்மியில் ஃபிராட் அடிப்பது எப்படி' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். இந்த கேஸ் பற்றிய விவரங்கள் மட்டும்தான் சொல்வேன்") 

ரா கி : " நல்ல பொண்ணும்மா நீ. இப்படி எல்லாம் ஆபத்தான சூழ்நிலைகளில் அதிரடி ஆட்டம் போடுகிறாயே! ஆமாம், அந்த சதிகாரர்கள் அப்புறம் என்ன ஆனார்கள்? போலீசிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? "

ஸ்னே : " பாஸிடமிருந்து செய்தி வந்தது. அந்த ரெண்டு பேரையும் ஜட்டியோட நிக்க வெச்சி, முட்டிக்கு முட்டி தட்டி, போலீஸ் விஜாரிச்சதாம். அப்புறம் அவர்கள் இருவரும் பாத் ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்களாம்" 

(தொடரும்) 

அடுத்த பதிவோடு முடியும் (என்று எதிர்பார்க்கப்படுகிறது!)  





14 கருத்துகள்:

  1. சூப்பர் ஆக்ஷன் கதை. த்ரில்லர்.
    பாவம் தாத்தாக்களுக்கு நல்லா பொழுது போச்சு.
    இன்னும் இழுத்தால்.... பார்க்கலாம்.கற்பனைக்கு நல்ல தீனி கொடுக்கும் கதை. வாழ்த்துகள்.ஜி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அதி வீராங்கனையாக, சாகச செயல்கள் செய்த ஸ்னேகாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. தொடர்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. குறுக்கு வழியில் சுவரேறிக் குதித்து, இந்தக் கல்யாண மண்டபத்திற்கு வந்தேன்.//

    ஸ் மிக திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.


    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை வளம். கீழே வழுக்கி விழுந்தவங்க மறுபடி எழுந்துட்டாங்க தானே?

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம். இரண்டு பேரும் ஒருத்தர் தான்னு! கடைசியில் அது சரினு சொல்லிட்டீங்க! டாங்க்யூ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பதிவிலும் ஒரு திருப்பம் என்று கதை விட்டு, சுற்றிச் சுற்றி, ஆரம்ப இடத்துக்கே கதையைக் கொண்டுவந்துவிட்டார் போலிருக்கு கு கு!

      நீக்கு
  6. கடைசியில் எல்லாவற்றையும் வைண்ட் அப் பண்ணி முடித்து வைப்பது தான் கஷ்டமான காரியம்.

    அந்தக் காரியத்தை முடித்து வைத்த மஹானுபாவன் யாரோ?.. அவர் வாழ்க!

    பதிலளிநீக்கு
  7. பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார்களாம்! ஹாஹா...

    அடுத்தது என்ன நடந்தது... இதோ வருகிறேன் அடுத்த பகுதிக்கு!

    பதிலளிநீக்கு