வியாழன், 23 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200423 : பானுமதி வெங்கடேஸ்வரன்திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள், ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதியே இந்த நிகழ்வை அனுப்பியிருந்தார்கள். 
நான் அதை ஒரு தனி text file ஆக மாற்றி, என்னுடைய கணினியில் சேமித்து வைத்திருந்தேன். ஆனால், இங்கே வெளியிட மறந்துவிட்டேன். 

அவர் என்னை மன்னிப்பாராகுக! 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சத்தமே இல்லை. பட்சிகள் மற்றும் அணில்களின் 'ச்ரிப் ச்ரிப்' தவிர வேறு சப்தம் இல்லை.நல்ல நேரத்தில் நல்ல பயிற்சி!

திடீரென்று உயிர் பெற்று ஃப்ரிட்ஜ் உறுமுகிறது. கடிகாரத்தின் டிக் டிக்!
சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் நோட்டமிடுகிறேன். 
சமையல் மேடை சுத்தமாக இருக்கிறது. குடிப்பதற்காக தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பித்தளைக் குடம் பளிச்சென்றுதான் இருக்கிறது. நாளை தேய்த்துக் கொள்ளலாம். அருகில் தாமிர வாட்டர்பாட்டில். வினுவிற்கு(மகனுக்கு) ஆஃபிசில் கொடுத்தது. அதை பயன்படுத்தாதே என்று அவனிடம் சொன்னேன். தாமிர பாத்திரத்தில் பிடித்து வைத்த நீரை அருந்தினால் sperm count குறையுமாம். அந்த வாட்டர் பாட்டிலில் ஆரம்பத்தில் பெயிண்ட் வாசனை வந்து கொண்டிருந்தது. 

தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியின் ஓசையை வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை.

வாட்ஸப்பில் ஏதோ வீடியோ. தட்டினால் தில்லானா மோகனாம்பாளின் காட்சி. நாகேஷின் குரலில் தொனிக்கும் எகத்தாளம், சிவாஜியின் அடிக்குரலி்ல் உள்ள 
கோபம் + கெளரவம்! வாவ்!


=======================================  

20 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம் அருமையாகச் சொல்லி இருக்கார் பானுமதி. ஆனால் தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதே என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. சரியான ஆதாரங்களோடு அதுக்கு வரேன். இப்போக் கடமை அழைக்கும் முன்னர் இங்கே முடிச்சுட்டுப் போகணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கெல்லாம் டவுட்டே வேணாம்...

   செம்பு பாத்திரத்தில் நீரை வைத்துப் பருகினால் இதயம் நலம் பெறும்..

   ஆனால் உயிரணுக்கள் குறையும்...
   காமம் மட்டுப்படும்...

   விவரம் புரியாமல் வாட்சப் விஞ்சானிகள்
   (விஞ்ஞானிகள்) போட்டு விடுவதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டாம்...

   செம்புக் குவளையில் தான் தண்ணீரை வைத்துக் குடிக்க வேண்டும் என்று கதறுவார்கள்...

   இங்கே அரபு நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும் கடல் நீரை செம்பு பாத்திரத்தில் வைத்திருந்தால் குடிக்க இய்லாதபடி கடுத்து விடுவது எத்தனை பேருக்குத் தெரியும்?...

   துளசிக்கும் இத்தகைய குணம் உண்டு...

   இதைப் பற்றி நிறைய எழுதலாம்...

   பெருமாள் சந்நிதியில் ஏன் உள்ளங்கை அளவுக்கு உத்தரணியில் தீர்த்தம் கொடுக்கிறார்கள்?...

   ஒரு பெருங்குவளையில் முகந்து கொடுக்கலாமே... குடித்து விட்டும் போ.. என்று...

   இரத்தத்தில் உள்ள காமம் அணு அணுவாகக் குறையட்டும் என்று தான்...

   ஒரேயடியாகத் தினமும் மூனு லிட்டர் குடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் ...

   சொல்லவேண்டியதே இல்லை...

   பற்பல ஆண்டுகளுக்கு முன்னால்
   இல்லறத்தில் துணையை இழந்த ஆணோ பெண்ணோ தவ வாழ்க்கையை மேற்கொண்ட போது இந்த கமண்டலத் தீர்த்தமும் துளசியும் பேருதவி செய்தன..

   இதில் திடுக்கிட்டுப் போன ஆண் வர்க்கம்
   துளசியும் தீர்த்தமும் துவராடையும் உனக்கே என்று பெண்மையின் தலையில் கட்டி விட்டு -

   மறுபடியும் மாப்பிள்ளை என்று தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டது...

   இதற்கு இன்னொரு காரணமும் உண்டு..

   சொத்துக் கட்டி ஆள ஒரு வாரிசு!...

   பெண்மை மட்டும் தீபமாகத் திகழ்ந்து தியாகி ஆனது...

   நீக்கு
  2. சிறுகதையே எழுதிவிட்டீர்கள் ! பிரமாதம்.

   நீக்கு
 2. /ஆனால், இங்கே வெளியிட மறந்துவிட்டேன். 
  அவர் என்னை மன்னிப்பாராகுக!//சே! சே! பெரிய வார்த்தைகளை கூறுகிறீர்களே? இது என்னுடைய ராசி. எங்கள் குடும்பத்திலேயே என்னை மறந்து விடுவார்கள். "அய்யய்யோ! உன்னை மறந்தே போயிட்டோம்டி" என்பார்கள்.E.B. is my extended family,so it's ok. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதேனும் உள்குத்து இருக்குமோ ! பயமா இருக்கே!

   நீக்கு
  2. அப்படியெல்லாம் இல்லை. என் ராசியைத்தான் சொன்னேன். ஒரு முறை ஸ்ரீரெங்கத்திற்கு உங்கள் அம்மாவின் திவசத்திற்காகச் சென்றிருந்தோம். ஸ்ரீரங்கம் செல்லும் பொழுதெல்லாம் மாலையில் கோவிலுக்குச் சென்று விட்டு தெற்கு சித்திரை வீதியில் ஒரு வீ பீ ஷாப்பிங் செய்வது பழக்கம். மற்றவர்கள் அதில் ஈடுபட்டிருக்க, நான் அங்கிருந்த ஏ.டி.எம். சென்றிருந்தேன். வெளியே வரும் பொழுது எங்கள் வீட்டு மனிதர்கள் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் ரோடை கிராஸ்  பண்ணி வருவதற்குள் ஆட்டோ கிளம்பிச் சென்று விட்டது.  சரி, தெரிந்த ஊர்தானே? என்று நடக்க ஆரம்பித்தேன். சற்றுத் தொலைவில் என்னுடைய பெரிய அக்காவும், கடைசி அக்காவும் நடந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. சற்று வேகமாக நடந்து அவர்களோடு சேர்ந்து கொண்டேன். வீட்டிற்குப் போய்," இது தெரிந்த ஊர், என்னை விட்டு விட்டு வந்தது பரவாயில்லை, புது ஊராக இருந்து நாங்கள் இப்படி செய்திருந்தால் எனக்கு கஷ்டமாகியிருக்காதா?" என்று கேட்டதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. நான் ஏ.டி.எம். செல்கிறேன் என்று யாரிடமும் சொல்லாதது என் தவறாக இருக்கலாம். 
   ஒரு அக்காவின் மகன் திருமணம் சோளிங்கரில் நடந்தது. அக்கா அண்ணாநகரில் வசித்ததால் எல்லோரும் அண்ணாநகர் வந்துவிட வேண்டும், அங்கிருந்து எல்லோரும் பஸ்ஸில் சோளிங்கர் செல்லலாம் என்று ஏற்பாடு. நான் வரும்பொழுது எல்லோரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தார்கள். என்னைப்  பார்த்ததும் "ஐயோ! உன்னை சுத்தமா மறந்தே போய் விட்டோம்"  என்றார்கள். நான் பாத்து நிமிடம் லேட்டாக வந்திருந்தால் கிளம்பியிருப்பார்கள். என் மகன் மட்டும் "பத்து மணிக்கு கிளம்புகிறோம் என்றால் இவ்வளவு கரெட்டாக பத்து மணிக்கா வருவாய்?" என்று பல்லைக் கடித்தான். 
   மஸ்கட்டில் தமிழ்ச்சங்கத்தில் 'சங்க நாதம்' என்று ஒரு கையெழுத்திப் பத்திரிகை வெளியிட்டார்கள். அதில் எடிட்டோரியில் போர்டில் நானும் இருந்தேன். மற்ற ஆசிரியர்கள் பெயர்களையெல்லம் குறிப்பிட்டவர்கள் என் பெயர் மறந்து கடைசியில் கையால் எழுதிக் கொடுத்தார்கள். எனவே என் ஜாதகத்தில் ஏதோ கோளாறு.    நீக்கு
  3. ஓ !! இதெல்லாம் சகஜம்தான். நாம் பாடம் கற்கவேண்டிய நிகழ்வுகள் என்றால் கற்றுக்கொள்வோம். அப்படி எதுவும் இல்லை என்றால், மறந்துவிடுதல் நலம்.

   நீக்கு
 3. தாமிரப்பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது எனத்தானே கேள்விப்பட்டிருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமிர பாத்திரத்தில் பிடித்து வைத்த தண்ணீரை  காலையில்  குடித்தால் இதய வால்வில் இருக்கும் அடைப்புகள் கூட நீங்கி விடும் என்பார்கள். அதே சமயத்தில் தாமிர பாத்திரத்தில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை குடித்தால், ஸ்பெர்ம் கவுண்ட் குறையும் என்றும் படித்திருக்கிறேன். கீதா அக்கா வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாரே, வரட்டும். நானும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். 

   நீக்கு
 4. பார்த்ததிற்கு அவ்வளவு எழுதி விட்டு கேட்டதற்கு (அதுவும் பார்த்துக் கேட்டதிற்கு) ஒன்றே ஒன்று தானா?..

  தாமிர பாத்திர விஷ்யம் களிம்பு பிடித்திருந்தால் உஷார். பலர் புளி போட்டுத் தேய்த்து பளபளக்க வைத்துக் கொள்வதில் கோட்டை விடுவர்.

  சிறு வயதில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் கொட்டமடித்தெல்லாம் நினைவில் நீந்துகிறது.
  படிக்கவே தேவையில்லாமல் பள்ளியில் பாடம் கேட்டதிலேயே மனத்தில் படிந்த படிப்புகள்.
  அது தான் தாமிரத்தின் மகிமை. உடலையே உற்சாகத்துடன் நாள் பூராவும் வைத்துக் கொண்ட
  அற்புதமான நதி அது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவீ சார். தாமிரபரணி என்றும் இனிமை.
   பானுமா,
   எனக்குதான் அப்படியாகும்னு நினைத்துக் கொள்வேன்.
   யார் மறந்தாலும் அம்மா,அப்பா, கணவர் மறக்க மாட்டார்கள்.

   அருமையான எழுத்தோட்டம். ஃப்ரிட்ஜ் உயிர் பெறும் சத்தம் எனக்கும் மிகப் பிடிக்கும்.
   இந்த சாதனங்கள் எனக்குத் தாலாட்டு மட்டும் காதுகள் ஒலி வாங்கிக்கொள்கின்றன
   என்ற conviction.
   தாமிரக் குடம் வீட்டில் இருந்தது.
   எங்கே போச்சோ. நன்றி பானுமா.

   நீக்கு
 5. "தாமிர பாத்திரத்தில் பிடித்து வைத்த நீரை அருந்தினால் sperm count குறையுமாம்"... உண்மைதான் .... நம் உடம்பிற்கு இரும்பு சத்து, தாமிர சத்து, துத்தநாக சத்து முதலிய உலோக சத்துக்கள் தேவைப்படுகிறது என்பது உண்மைதான் ... அனால் இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். "தாமிர சத்து" என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லை என்பது தான் இங்கு வேதனை ... தாமிரத்திலுள்ள "சத்து" தான் உடம்பிற்கு தேவையே ஒழிய தாமிரம் என்னும் விஷ தன்மை வாய்ந்த உலோகம் அல்ல என்பதனை இங்கு புரிந்து கொள்ளவும். இரும்பு உலோகம் என்பது வேறு "இரும்பு சத்து" என்பது வேறு, தாமிரம் (செம்பு) உலோகம் என்பது வேறு "தாமிர சத்து" என்பது வேறு, துத்தநாக உலோகம் என்பது வேறு "துத்தநாக சத்து" என்பது வேறு ... இரண்டிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு ... அதாவது எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் தாமிரம் என்னும் உலோகத்தில் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துப்பொருள் சிறிதளவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் அதிக அளவிலும் இருக்கும். இந்த இரு தன்மைகளும் சேர்ந்ததுதான் தாமிரம் என்னும் உலோகம் ... உலோக பாத்திரங்களில் நீர் வைத்து குடித்தால் இதிலுள்ள நச்சுத்தன்மை நீரில் இறங்கி நீர் நச்சு நீராக மாறிவிடும்... இது உடலுக்கு பாதிப்புதான்... தாமிரத்திலுள்ள உடலுக்கு நன்மைதரும் சத்துபொருளை பிரித்தெடுக்க மருந்து உற்பத்தியாளர்கள் என்ன செய்வார்கள் என்றால் சில வகையான உப்புகளில் "தாமிர பொடி" களை போட்டு ஊற வைத்து அதன் தீங்குதரும் "வங்காளபச்சை" என்னும் களிம்புகளை நீக்கி அதன்பின் சிலவகையான காரங்கள் சேர்த்து அதை சில நாட்கள் பலமணி நேரம் அரைத்து (நாள் கணக்கில் அரைத்தால்தான் இதிலுள்ள நச்சுப்பொருள் நீங்கும்). அதன் பின் நெருப்பில் புடம் போட்டு பஸ்பமாக்குவார்கள்... இந்த பஸ்பமே "செம்பு சத்து". அதாவது செம்பிலிருந்து பிரிதெடுக்கப்பட்ட "சத்து" .. "காப்பர் ஆக்சைடு" என்று சொல்லப்படும் இதில் செம்பின் நச்சு நீக்கப்பட்டு அதன் சத்து மட்டும் நிரம்பி இருக்கும் ... இதுவே உடலுக்கு தேவைப்படும் "செம்பு சத்து" என்பதனை உணர்க ... நச்சு நீக்கப்பட்ட இந்த செம்பு சத்தே உடலுக்கு நன்மை விளைவிக்கும். இதையே மருந்து நிறுவனங்கள் சத்து மாத்திரை தயாரிக்கவும், டானிக் தயாரிக்கவும் பயன்படுத்துவர். ஆனால் மக்களோ செம்பு சத்து என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் சரியாக இல்லாமையால் செப்பு சத்து என்பது செம்பு உலோகம் என தவறாக நினைத்துக்கொண்டு அதில் நீர் வைத்து அருந்துகின்றனர். இதனால் செம்பிலுள்ள "வங்காளபச்சை" என்று சொல்லப்படும் பச்சை நிற களிம்பு ஊறலும், செம்பிலுள்ள கண்ணுக்கு தெரியாத வேறு பல நச்சு பொருளும் நீரில் எளிதில் கலந்து உடலுக்குள் சென்று செல்களை சிதைக்கும் என்பதனை உணர்க. சிலர் இரும்பு சத்து கிடைக்க வேண்டும் என்று இரும்பு பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்துவதும் உண்டு. இதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்பதனை அவர்கள் உணர்வது இல்லை. செம்பு பாத்திரத்திலுள்ள நீர் உடலுக்கு தீங்குதானே ஒழிய நன்மை எதுவும் கிடைக்காது என்பதனை இங்கு புரிந்து கொள்ளளவும். இதைப்பற்றிய அறிவியல் பூர்வமான தெளிவான விளக்க கட்டுரை விரைவில் எமது வலைத்தளத்தில் வெளிவரும். நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. அங்கே திரு KGG அவர்களின் டவுட்டைப் பார்த்ததும் அப்படியே மனதில் இருந்ததை என்னளவில் சொல்லி விட்டேன்...

   இங்கே திரு சிவா அவர்களது கருத்துரை .. நல்லது...

   இருப்பினும்
   செம்புக் குவளையில் இரவு ஒரு பொழுதுக்கு சுத்தமான நீரை வைத்துக் குடித்தால் போதும்... மொடாக்குடி எல்லாம் வேண்டாம்...

   மேலும் தாமிரபரணியின் தண்ணீருக்கு செப்புப் பாத்திரம் தேவையில்லை...

   செப்புக் குவளைக்கு உகந்தது காவிரியின் தண்ணீரே அன்றி வேறெதும் இல்லை...

   அப்போதெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் நதிக்கரை கிராமங்களில் பார்க்கலாம்...

   கைம்பெண் ஆனவர்கள் ஆற்ரில் குளித்து விட்டு சிறிய கெண்டியில் தண்ணி எடுத்து வருவார்கள்...

   அது தான்..
   அவ்வளவு தான்...

   நீக்கு
  3. ஜட்ஜ்மென்ட் சிவா உங்கள் வலைத்தளத்தை நோட் செய்து கொண்டுவிட்டோம்.

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
  4. நல்ல விளக்கம் ஜட்ஜ்மென்ட் சிவா...பச்சைக்களிம்பு ஆம் அதனாலாயேதான் செம்புப் பாத்திரம் வேண்டாம் என்று எங்கள் வீட்டு அறிவியல் துறையாளர்களும் சொன்னது...

   கீதா

   நீக்கு
 6. பானுக்காவின் பார்வைக் குறிப்புகள் கண்டேன் வித்தியாசமாய் அழகாய்!!! கூடவே ஒரு தகவலுடன்...தாமிரபாத்திரம் பற்றிய தகவல் புதிது. அதை துரை அண்ணா, சிவா அவரத் அறிவியல் கருத்து என்று எலலம் பார்த்துக் கொண்டாயிற்று.

  பானுக்காவின் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு