செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இந்தப் படம் பார்த்தால் ....


அப்பாதுரை சார் சற்றுமுன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய படம். 
படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள். 


யாருனா கவிதை எழுதுங்க ! 


35 கருத்துகள்:

 1. அப்பாதுரை என்பது கண்ணில் பட்டதும் வந்து எட்டிபார்த்தேன் அவர் எழுது கதைகள்தான் அருமை என்றால் அவர் அனுப்பிய படம் அதைவிட அருமை

  குரங்கும் சாதுவின் முன்னால் சாதுவாகிவிட்டது..

  பதிலளிநீக்கு
 2. இந்த படத்தை பார்த்தவுடன் மனதில் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு அதை எப்படி வார்த்தைகளால் சொல்வது என்பது தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 3. நாயும் நரியும்
  சிங்கமும் குரங்கும்
  எருமையும் கழுதையும்
  மனிதனுக்கு
  உதாரணங்களாகிப் போயின..

  மனிதத்துக்கு உதாரணமாய்
  ஒரு மனிதன்
  இல்லாது போனான்
  அப்படியானல்
  இந்த சாது மனிதனில்லையா என்றால்
  நிச்சயம் இந்த சாது மனிதர் இல்லை
  காரணம் இவர் மனித வடிவில்
  இருக்கும் தெய்வம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா !! ட்ரூத் உங்களுக்குள்ளே ஒரு Wordsworth ,ஜான் கீட்ஸ் ,Yeats ,ஷெல்லி தாகூர் ,ஷேக்ஸ்பியர் எல்லாரும் ஒளிஞ்சிருக்காங்க .
   மிக அருமையான கவிதை .  . 

   நீக்கு
  2. வாவ் மதுர கலக்கறீங்க கவிதை எல்லாம் எழுதி...செம செம

   கீதா

   நீக்கு

  3. எப்போவோ எங்கேயோ படித்த சில வரிகள் ஞாபகம் வந்துச்சு அதோடு என் கருத்தையும் மிக்ஸ் பண்ணி சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் ..கருத்தை டைச்சு உடைச்சு எழுதினால் அதுதான் கவிதையா? இதுநாள் அவரி இதை யாரும் எங்கிட்ட சொல்லவே இல்லியே

   நீக்கு
  4. ஸ்ஸ்ஸ் ட்ரூத் :) இப்படி படிச்சதை நினைவுவச்சி எழுதவும் திறமை வேணும் .நீங்க இப்படி நிறைய முயற்ச்சியுங்க :)ஒரு கலீல் ஜிப்ரானாக அப்துல்ரகுமானாக  மு .மேத்தாவாக ஒரு ருமி போல வர வாழ்த்துக்கள் !!!!

   நீக்கு
  5. மதுரைத்தமிழர் அழகாகச் சொல்லிவிட்டார். அந்தக் குரங்கின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்! நிம்மதி! அது ஒன்றே போதும் இருவருக்கும் இடையில் உள்ள உறவைச் சொல்லிவிடும்.அருமையான படம், அழகான அர்த்தமுள்ள கவிதை.

   நீக்கு
 4. சிறிய திருவடி பற்றியது பெரிய திருவடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூப்பர்..ஒவ்வொருத்தரும் என்ன அழகா கொடுத்திருக்காங்க நான் தான் ஏதோ கிறுக்கி உளறியிருக்கேன்னு தெரியுது ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 5. ”நீங்கள் சாதுவாக இருக்கலாம்... ஆனால் உங்கள் கைகளிலுள்ள முரட்டுத் தடி ஏனோ என்னை பயமுறுத்துகிறது. ஒன்றும் செய்து விடமாட்டீர்களே?” என்று காலைப் பிடித்துக் கேட்கிறதோ இந்தக் குட்டிச் செல்லம்.

  பதிலளிநீக்கு
 6. அந்தக் குரங்கு அடியேனாகவும், அந்தப் பொற்பாதம், ஸ்ரீமஹாவிஷ்ணுவிண் பாத-கமலமாகவும் எனக்குத் தெரிகிறது..!

  Engal-அப்பாதுரை சார்.. எப்படி இருக்கீங்க ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதவன் ஶ்ரீநிவாச கோபாலன் - அது உடையவர் திருவடியாகவும், இராமனின் அடியவனின் (இராம அனுஜன்) அடி எனக்குத் திருவடிதான் என ஆஞ்சநேயர் சொல்வதுபோலத் தோன்னவில்லையா?

   நீக்கு
  2. // Engal-அப்பாதுரை சார்.. எப்படி இருக்கீங்க ?// ஸ்ரீ வரதராஜன், நான், ஸ்ரீராம் உட்பட முப்பத்தைந்து பேர் மெம்பெர்ஸ் ஆக உள்ள EB Editors and Readers WhatsApp group ல் திரு அப்பாதுரை அவர்களும் இருக்கிறார். நலமாக உள்ளார்.

   நீக்கு
 7. சாதுவே உன் கையில் இத்தனை வலுவான தடி எதற்கு..கருணை முகங் கொண்ட தெய்வங்களின் கைகளில் கூரிய ஆயுதங்கள் போல் சாதுவான உன் கையில் ஆயுதம் கூட எனக்கு முரணாகவே தெரிகிறது..ஒருவேளை வசதியானவனின் எளிமைபோல் ஆயுதம் கொண்டவனின் கருணைப் பார்வைதான் மதிப்புள்ளதோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்த தடி உறுத்தியது.

   நீக்கு
  2. அம்மா அவர் நடப்பதற்கு ஒரு ஊன்று கோலாக அந்தத் தடியைப் பயன்படுத்தலாம் இல்லையா? சிறிய ஒல்லியா கிடைக்கலைனா இப்படியும் வைச்சுக்கலாம் இல்லையா? எனக்கு அப்படித்தான் தோன்றியது.

   கீதா

   நீக்கு
  3. எனக்கும் அந்த யோசனை வந்தது. கீதாமா.
   அந்தக் குட்டியின் பக்கத்தில் தடியைப் பார்த்ததும் ஒரு நெருடல்:)
   நம் ஆச்சார்யர்களில் ஒருவர் கன்றுக்குட்டியுன் கொஞ்சிய காட்சி நினைவுக்கு வந்தது.
   உலகத்தின் மீது அவர்களுக்கு அளவு கடந்த அன்பு.
   கட்டாயம் இது ஊன்று கோலாய்த்தான் இருக்கும்.

   நீக்கு
 8. அடியாருக்கும் அடியேன் என்று பாதம் பணிகிறது.

  பதிலளிநீக்கு
 9. கவிதைலாம் எனக்கு வராது :) ஆனா அந்த குட்டி ஆஞ்சி கியூட்டா இருக்கு அந்த சாதுவின் காலை பிடிக்கும் காட்சி .குட்டி உயிர்களுக்கு எதிரா பல துன்பம் துயரம் பார்க்கிறோம் கேட்கிறோம் அதனால் துக்கம் துன்பம் தவிர்த்து  ஜாலியா ஒன்று caption எழுதறேன்.
  குட்டி சொல்லுவது இதுவா இருக்குமோ 
  //சாது அங்கிள் காலை தூக்குங்க உங்க ஸ்லிப்பர்ஸ் கீழே நான் விளையாடிட்டிருந்த கோலிக்குண்டு இருக்கு //

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வல்லிம்மா :) ஹாஹா thanks :)

   நீக்கு
  2. சூப்பர் ஏஞ்சல்!!! என்ன க்யூட் குட்டி இல்லியா...எனக்கு கஷ்டமா இருந்துச்சு பார்த்ததும்...பாவம் எப்படிக் கட்டிட்டு இருக்கு...அப்படியே தூக்கிக் கொஞ்சி இடுப்புல வைச்சுக்கணும் போல இருக்கு..பாப்பாவை

   கீதா

   நீக்கு

 10. ஜீவன் பரமனைச் சரண் அடைவது போல,
  சாதுவிடம் அடைக்கலம் கொண்ட மகா சாது குட்டி வானரம்.

  இன்று உடையவர் திரு நாள்.
  அரிய புகைப்படம்.
  திண்சரணை சரணெனக் கொண்ட அனுமனின் ரூபம்.
  மனமெல்லாம் கனிய ஆதுரத்துடன் அணைத்துக்கொள்ளுங்கள்.,
  அந்த சிறிய ஜீவனை.

  பதிலளிநீக்கு
 11. படம் முதலில் மனதை என்னவோ செய்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை. பாவம் குட்டி ஆஞ்சு.

  யப்பா வழி தவறி, இந்த மனுஷ ஊருக்குள்ள வந்துட்டேன். என்னைக் காப்பாத்துப்பா. எனக்கும் தொத்து இருக்கும்னு எல்லாரும் துரத்துறாங்க...ஊரடங்காம் சோசியஸ் டிஸ்டென்ஸாம் அதெல்லாம் எனக்கு என்ன தெரியும்? காப்பாத்துங்க ப்ளீஸ்!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. காப்பாத்துங்க காப்பாத்துங்க! ஊசின்னா எனக்குப் பயம்... வேக்சின் ஊசி போட்டு டெஸ்ட் பண்ணப் போறாங்களாம்...ப்ளீஸ் காப்பாத்துங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தாய் கண்ணே எழுந்திரு உன்னை யாம் ரட்சித்தோம்!!

   கீதா

   நீக்கு
  2. இதுதான் ஏஞ்சல், அண்ட் கீதா உணர்ச்சி. அன்புள்ள நெஞ்சங்கள்.
   வாழ்க வளர்க.

   நீக்கு
 13. உணர்ச்சிபூர்வமான கருத்துரைகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. படைக்கலம் இல்லா அந்த கருணையுள்ள மனிதரிடம் அடைக்கலம் கேட்கிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு