திங்கள், 20 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200420



கீழ்க்கண்ட நிகழ்வுப் பதிவு, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் நண்பர்  திரு சுப்ரமணியன் அவர்கள் எழுதியது.  




சுப்ரமணியன் : 



(அடித்தல், திருத்தல் இல்லாத தெளிவான அழகான கையெழுத்து. வாழ்த்துகள் !)

=================================

திருமதி கீதா சாம்பசிவம், ஏப்ரல் பதினேழாம் தேதி அன்று பகிர்ந்த பின்னூட்டம் :  

யார் வீட்டிலோ பாத்திரம் தேய்க்கும் சப்தம்
எங்க வீட்டு மின் விசிறி சுழலும் சப்தம்.
பறவைகள் மெலிதாகப் பேசிக்கொள்கின்றன
செம்போத்தின் குரல்
யாரோ யாரையோ கூப்பிடுகின்றனர்.
நடுவில் நாங்க இருவரும் பேசிக்கொண்ட ஒரு வார்த்தை
மற்றபடி மௌனம்.


பார்த்ததும் வேணுமா? இங்கேருந்து பார்த்தால் ரெண்டு மைனா கூடு கட்ட முயற்சிகள் செய்வது தான் தெரியுது. வேறே பால்கனியில் எங்க வீட்டுத் துணிகள்! :) எங்கே போறேன்?பார்க்க?

ஏப்ரல் பதினெட்டு : 

இங்கே ஒருத்தர் 10 நிமிஷங்களாகத் தும்மிக் கொண்டிருந்ததால் கதவைச் சார்த்தி விட்டேன். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! தொலைக்காட்சியில் பாலிமர் செய்திகள். பார்த்து/கேட்டுக் கொண்டிருக்கிறேன்..

திருமதி கோமதி அரசு அவர்கள் பத்தொன்பதாம் தேதி இட்ட பின்னூட்டம் :  

என் வீட்டிலிருந்து பின்புறம் இருக்கும் வீடுகளில்  அந்த வீட்டார் கொடியில் காயப்போட்டு இருக்கும் துணிகளும் சரியாக கிளிப் மாட்டாமல் கீழே விழுந்த, ஜன்னலில் விழுந்த துணிகளும் தெரிகிறது.

என் தலையை கண்டவுடன் புறாக்கள், காகம் பறந்து வந்து, 'சாதம் வைத்து இருக்கிறாளா அம்மா' என்று பார்ப்பதும் தெரிகிறது. அய்யனார், இருக்கும் திசையைப் பார்த்தும், அழகர் இருக்கும் திசையைப் பார்த்தும் கும்பிட்டுவிட்டு உள்ளே விரைந்தேன் பறவைகளுக்கு சாப்பாடு எடுக்க.

=======================================================

நாளைய பதிவில், திருமதி ரேவதி நரசிம்ஹன் அவர்கள், ஏப்ரல் பதினேழாம் தேதி வெளியிடப்பட்ட படம் ஒன்றிற்கு, தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

=======================================================

28 கருத்துகள்:

  1. திரு. சுப்பிரமணியன் அவர்கள் சொன்ன நாள் குறிப்பு . நன்றாக இருக்கிறது.
    காலை பற்வைகளின் உதயராகம் கேடக இனிமை. தொலைக்காட்சி தொல்லைகாட்சிதான்.
    அவர் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பறவைகளின் உதயராகம் கேட்க இனிமை

    பதிலளிநீக்கு
  3. சுப்ரமணியனின் அவர்கள் பதிவும் ,எழுத்தும் வெகு அழகு.
    எழுதி எத்தனை நாட்களாகிறது என்று யோசிக்கிறேன்.
    22 வருடங்கள் ஆச்சு.
    மருத்துவமனை ப்ரிஸ்க்ரிப்ஷன் அனுப்ப மட்டும்,அல்லது ஸ்ரீராமஜயம்
    எழுத என் பேனா திறக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். முன்பெல்லாம் பேனா எங்கே என்று குறைந்தது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறையாவது தேடுவோம். இப்போ எல்லாம் பேனா தேடுவது, காஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், ரசீதில் கையெழுத்து கேட்கின்ற நாட்களில் மட்டும்தான். அதுவும், அவரிடம் பேனா இல்லை என்றால்தான்!

      நீக்கு
    2. பேனாக்காலம் என்று யாராவது எழுதி இருப்பார்கள்.
      இவர் சட்டைப் பாக்கெட்டில் பேனாக் கறை முன்பெல்லாம் இருக்கும்.
      அலுத்துக் கொள்வேன். 40 வருடங்களுக்கு முன்.

      பிறகு அலுவலக மேஜையிலியே வைத்துவிட்டு வருவார்.
      வீடு நிறைய ரெனால்ட்ஸ் பால் பாயிண்ட் பேனாக்கள் நிறைந்த காலம்.
      தம்பியிடம் கேட்டு பச்சை இங்க் பேனா வாங்கிய
      காலம் எல்லாம் நினைவுக்கு வருகிறது.
      எழுத்துக்கு தான் எத்தனை வலிமை.!!!!

      நீக்கு
    3. இன்றைய குறிப்புகளையும் நோட்டட்.

      அட! அழகா பேப்பர்ல எழுதியிருக்கிறாரே! நான் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் தட்டுவதால் பேப்பர் பேனா எடுத்து நாளாயிற்று. இருந்தாலும் ஒரு முறை எழுதி இப்படி ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன் பார்ப்போம் எப்படி இருக்குனு..

      உப்பரிகை, என்னஅப்பு ஹா ஹா ஹா ஹா நல்ல ரசனை, நகைச்சுவை மிக்க மனிதர் வெங்கட்ஜியின் நண்பர் என்று தெரிகிறது. அதை வாசித்ததும் அட மற்றொரு கௌ அண்ணா என்று எண்ண வைத்தது..

      கீதாக்கா கோமதிக்காவிந் குறிப்புகளையும் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டேன்.

      நாளை வல்லிம்மாவின் பதிவிற்கு வெயிட்டிங்க்..என்னதான் இருந்தாலும் மதியம் மேலத்தான் வர முடிகிறது..

      கீதா

      நீக்கு
  4. கேஜிஜி சார் இதைப்பற்றிக் கேட்டபோதே எனக்குத் தோன்றியது. நாம் அனைவரும் நம் வேலைகளைப் பார்க்கிறோமே தவிர சுற்றுச்சூழலில் குரல், ஒலிகள் இவற்றைக் கவனிக்க விட்டுவிடுகிறோம்.

    அதைக் கவனிக்க ஆரம்பித்தாலே எண்ண ஓட்டங்களைத் தடை செய்யலாம். நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
  5. நான் எல்லா குறிப்புகளையும் கதைக்குப் பயன்படுத்தலாமா என்று கேட்டதற்கு உங்கள் பதில்களை பார்த்துவிட்டேன் கௌ அண்ணா. மிக்க நன்றி. அதனால் எல்லாமே எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய குறிப்புக்களையும் இங்கே மீண்டும் வெளியிட்டதுக்கு நன்றி. நான் பொதுவாக ஓசைகளை நிறையக் கவனிப்பேன். மனம் ஒரு பக்கம் அதில் லயித்திருக்கும். இன்னொரு பக்கம் செய்யும் வேலையில். இது சரியா எனத் தெரியாது! ஆனால் இரண்டும் பிறழ்வுகள் இல்லாமல் தனித்தனியாக மனதில் பதியும்.இப்போக் கூட ஒரு தவிட்டுக்குருவி இன்னொன்றிடம் பேசும் சப்தமும், அணில் ஒன்று விடாமல் "ணிக்" "ணிக்" என்னும் சப்தமும் கேட்கிறது. கூடவே நம்மவர் பால்கனிக்குத் தன் இருக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ அக்கூ சப்தமும். பெண்குயில் ப்ளிச், ப்ளிச் என இடைவிடாமல் கூவுகிறது. ஆண்குயிலின் சப்தம் இன்று காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமா இருக்கே - பெண் / ஆண் குயில் சப்தங்களில் வித்தியாசம் இருக்குதா!

      நீக்கு
    2. ஆமாம், தோகை விரித்து ஆடுவது ஆண் மயில் என்பதை அறிவீர்கள்தானே! அதே போலக் "குக்கூ" எனக் கூவுவதும் ஆண் குயில் தான். பெண் குயில் அதற்குப் பதிலாகத் தொடர்ந்து சப்தம் எழுப்பும். அதில் இனிமை இருக்காது என்றாலும் பெண் குயில் ஆண் குயிலுக்குத் தரும் சமிக்ஞை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

      நீக்கு
  7. திரு சுப்ரமணியத்தின் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இதை எழுதுகையில் சண்டை போடும் மைனாக்களும், கூடவே கூச்சலிடும் விசிலடிச்சான் குருவியும்! ஹிஹிஹி, சின்னச் சிட்டுத் தான், விசில் போல இடைவிடாமல் கூவுவதால் நான் வைச்ச பெயர் விசிலடிச்சான் குருவி. பேப்பர்காரரை மாடிக்கு வரத் தடை போட்டிருப்பதால் காவலாளர் பேப்பரைக் கொண்டு கொடுத்துவிட்டுச் சென்றார். அவரிடம் காபிப் பொடி வாங்கி வரச் சொல்லிக் கேட்டிருக்கோம். நாங்க யாருமே வெளியே போக முடியாதே! :( அதோடு காபிப் பொடிக்கடைகள் வேறே ஒரு வாரமாக மூடிக் கிடக்கின்றனவாம். :( கான்டினென்டல் காபி குடித்துக்கொண்டே இதை எழுதுகிறேன். வரேன், இப்போக் கடமை அழைக்க ஆரம்பித்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீ சா வின் டயரி என்று தனியாக ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டியதுதான் போலிருக்கு!

      நீக்கு
  8. நான் பேனாவில் சில, பல விண்ணப்பங்கள், கடிதங்கள் என எழுதுகிறேன். ஆனால் மை போடும் பேனா அல்ல. பால்பாயின்ட் (தமிழில் என்ன?) பேனாதான். இதைத் தவிர்த்து என்னோட மருந்துகளை வாங்குகையில், மளிகைக்கடைக்குப் போட்டும் பட்டியல்கள் எனப் பேனாவின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே. John J Loud கேட்டால் சந்தோஷப்படுவார்.

      நீக்கு
  9. கணக்கு எழுதுவது பேனாவால்தான். இங்க் பேனாவைத் தொட்டு எத்தனையோ காலங்கள் ஆகி விட்டது. கணக்கு எழுதுவது பேனாவால்தான். இங்க் பேனாவைத் தொட்டு எத்தனையோ காலங்கள் ஆகி விட்டது. யூனிபால் பென்னால்  எழுதுவது மிகவும் பிடிக்கும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தடவைக்கு இரண்டு தடவை உறுதியாக சொல்லியிருக்கிறீர்கள்!

      நீக்கு
  10. தில்லி நண்பரின் கையெழுத்தில் அப்படியே இங்கே வெளியிட்டமைக்கு நன்றி. அவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

    மற்ற குறிப்புகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு