வியாழன், 9 ஏப்ரல், 2020

மாலினி - 2இது, மாலினி (மாலினி 1) நேற்றைய பதிவின் தொடர்ச்சி.


இந்த தருணத்தில்தான் மாமா மூலம் 'காட்சி டி.வி.'யின் தலைமை இயக்குனர் அறிமுகமானார். மாமா வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு மாமாவின் நண்பரான பிரகாஷ் வந்து பொழுது, மாமா அவரிடம் அறிமுகப் படுத்தி அவனிடம்,"நீதான் மீடியாவில் இருக்க, பிரகாஷுக்கு கம்பெனி குடு" என்றார்.

அவர்கள் இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. விடை பெறும் பொழுது விசிடிங் கார்டை கொடுத்து,"வீ வில் மீட்" என்று கூறியதை பிரபு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனுடைய ஸ்நேகிதனும், காமிராமேனும் ஆன கிருஷ்ணாதான் அவனை உந்தித் தள்ளினான் . " அவர் மீட் பண்ணலாம்னு சொன்னா, அவர் கூப்பிடுவார்னு எப்படி எதிர்பார்க்கற? உன்கிட்ட இருக்கற ஸ்க்ரிப்ட்டை எடுத்துக்கிட்டு அவரைப் போய் பாரு"

"டி.வி. சீரியல் இயக்கவா?"

"வாட்ஸ் ராங்? வழக்கமான சீரியலா இல்லாம, புதுசா ஏதாவது யோசி."

அவன் சொன்னபடி பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து ஸ்க்ரிப்ட் தயாரித்தான். ஐந்து நிமிடங்களுக்கு ஓடும் குறும்படங்கள். அவனும் கிருஷ்ணாவும் சேர்ந்து எடுத்தார்கள். அந்த யூ.எஸ்.பி.டிரைவையும் எடுத்துக் கொண்டு பிரகாஷின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்.

"ஓ! நீ ரெங்கராஜன் நீஸ் இல்லையா? இதை என்னுடைய செகரெட்டரியிடம் குடுத்துட்டு போ.. பார்த்துட்டு சொல்றேன்"

கொஞ்சம் பட்டுக் கொள்ளாமல்தான் பேசினார். சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம்தானே. இப்படி எத்தனைப் பேரைப் பார்த்திருக்கிறான்! நம்பிக்கை இல்லாமல் திரும்பினான்.

ஒரு வாரத்தில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. "உன்னோட ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன். எங்களிடம் ஸ்லாட் இருக்கு. வழக்கமான சீரியலாக இல்லாமல் புதுசா, ஏதாவது செய்யலாம்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். ஆனால், ரெண்டு மாசம்தான் குடுப்பேன். அதற்குள் டி.ஆர்.பி. ரேட்டிங் பிக் அப் ஆகலைன்னா நிறுத்திடுவேன்"

இந்த செய்தியை மாலினியிடம் பகிர்ந்து கொள்ள, அவளை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது அவள் தொர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட குரல் கூறியது.

அடுத்த நாள் அவளே தொடர்பு கொண்டாள். "எங்க போயிட்ட?போனை எடுக்கல..?"

"ஊட்டில இருக்கேன்"

"ஊட்டிலயா? அங்க என்ன பண்ணற?"

" எஸ்டேட்டில் டீ பறிக்கறேன்"
    

"கம் ஆன், ஒழுங்கா சொல்லு"

"நிஜமாத்தான் சொல்றேன். பாலகுமார் டைரக்சனில் டீ எஸ்டேட்டில் வேலை செய்யும் பெண்ணாக ஒரு ரோல்.."

"யாரு பாலகுமார் டைரக்ஷனிலா? சொல்லவேயில்ல.. அவ்ளோ பெரிய மனுஷியாயிட்ட..?"

"திடீர்னு நேத்து, அவங்க ஆபிஸிலேர்ந்து கூப்பிட்டாங்க. அதான் சொல்ல முடியல. நீ எங்க போயிருந்த?".

"எனக்கு காட்சி டி.வி.ல ஒரு சீரியல் பண்ற சான்ஸ் கிடைச்சிருக்கு".

"சீரியலா? என்னை சீரியல் வேண்டாம்னு சொல்லிட்டு நீ சீரியல் டைரக்ட் பண்ணப் போறயா? "

"ஆமாம், எவ்ளோ நாள் கிளாப் அடிச்சுகிட்டு நிக்கறது? வாழ்க்கையில செட்டில் ஆக வேண்டாமா?"

"ம்ம்ம்! ஆல் தி பெஸ்ட்! என்னை கூப்பிடறாங்க.. அப்புறம் பேசறேன்.."

"ஓகே." என்று தொடர்பை துண்டித்த ரவி சித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது. காட்சி டி.வி.யில் இணைந்தால் எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது. நிலையான வருமானம், தொழில் திருப்தி. அடுத்ததாக திருமணம்தான் என்று அவன் நினைத்த பொழுதுதான் மாலினி நடித்த படம் வெளியாகி அவனுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. காரணம் அந்த படத்தில் மாலினி கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தாள். 


"அந்த பாத்திரம் அப்படி" என்று அவள்  அலட்சியமாக பதில் கூறியது அவனுக்கு ஆத்திரமூட்டியது.

"நான் எங்க வீட்டுல நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு இருக்கேன், இப்போ எப்படி பேசறது?"

" எனக்கு ஆச்சர்யமா இருக்கு பிரபு, வேற யாராவது இப்படி கேட்டா பரவாயில்லை, நீ எப்படி கேட்கலாம்?"

"எனக்கு எந்த பிரச்னையும் இல்ல மாலினி, எங்க அம்மா இப்ப கூட நம்பியாரும், அசோகனும் கெட்டவன்னு நினைக்கறவங்க"

"அந்த எண்ணத்தை நீதான் மாத்தணும்.."

"எனக்கு நல்லா புரியறது, நீ இப்போ பெரிய டைரக்ட்டர் படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்ட, நான் ஒரு சாதாரண அசிஸ்டெண்ட் டைரக்டர்தானே.. பணம் கண்ட.." என்று ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான்.

"ஏன் நிறுத்திட்ட? கம்ப்ளீட் பண்ணு, பணம் கண்ட...?" வெரி குட்! நீயும் சாதாரண ஆள்தான்" முகம் சிவந்து, கண் கலங்கி அவள் நிற்க, "மாலினி ஐ ஆம் சாரி, இ டிண்ட் மீன் இட்.." என்று அவள் கையைப் பற்ற அவன் முற்பட, அவள் சட்டென்று விலகினாள்.

"ப்ளீஸ், வேண்டாம், போய்டு"

அவன் குற்ற உணர்ச்சியோடு வெளியே வந்தான். அதற்குப் பிறகு அவனுடைய மெசேஜுகளுக்கு அவள் பதிலளிக்கவில்லை. அவன் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுதும் டிஸ்கனக்ட் செய்தாள்.

(தொடரும்) 


12 கருத்துகள்:

 1. கதையின் முடிவு எப்படி இருக்கப் போகிறது எனத் தெரிந்த கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ரவியிடம் இந்த மனோபாவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டாள் மாலு...!

  பதிலளிநீக்கு
 3. இருவருக்குள்ளும் சிறு கீறல்....முடிவு எப்படி இருக்கும் என்று யோசனை....

  அக்கா கிருஷ்ணா ஆன் தானே..இல்லை பெண்ணா...ஒரு இடத்தில் ள் வருது இன்னொரு இடத்தில் ன் வருது....அப்புறம் நெவ்யுஉ வரணும் இல்லையோ.நீ ஸ் னு வருதே....

  கீதா

  பதிலளிநீக்கு
 4. கதையின் தொடர்ச்சி இதுதானா...நேற்று ரவி அந்தப் பெரியவரைக் கொண்டு விடப் போறப்ப மாலினியைக் கழட்டி விடுவது என்று...யோசித்துக் கொண்டும் போகிறான்....அங்கு தொடரும். இங்கு ஸ்டார்டிங்....ஏதேனும் இடையில் மிஸ் ஆகி விட்டதோ....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. எனி வே ரவியின் ஆட்டிட்யூஉட் சரியில்லை...ஏற்கநேவ் கழட்டி விடப் பார்க்க நினைக்கரவன் வாயிலிருந்து வந்தது தானே...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நானும் நினைத்தேன். போன தொடரில் மாலினி சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டுகிறாள்.
  கழட்டி விட வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தவன் தானே!
  இப்போது அவள் கவர்ச்சியாக நடித்தாள் என்று தன் பெற்றோரை காரணம் காட்டுகிறான் .

  பதிலளிநீக்கு
 7. //இருவரில் யாரவது ஒருவர் செட்டிலானால் கூட திருமணம் செய்து கொண்டு விடலாம். ஆனால் அது சுலபத்தில் நடக்கும் விஷயமாகத் தெரியவில்லை.//

  இரண்டு மனம் இருக்கிறது ரவியிடம். மாலினி புகழ் அடைந்தாலும் போட்டி ,பொறமையால் மனம் சஞ்சலம் அடைவான் போலவே !

  பதிலளிநீக்கு
 8. //ஓ! நீ ரெங்கராஜன் நீஸ் இல்லையா?// nephew என்று வரவேண்டுமோ? நீஸ் எனில் பெண்ணை அல்லவோ குறிக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை கீதா ரங்கனும் கேட்டிருக்கிறார். சிலர் மருமான்,மருமாள் இருவரையுமே நீஸ் என்பார்கள்.

   நீக்கு
 9. விறுவிறுப்பாகச் செல்கிறது. முடிவு எப்படி என ஒரு மாதிரி ஊகம் செய்திருக்கேன். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. கதை அருமையாக போய்ட்டு இருக்கு ...இனியும் வெயிட் பண்ண முடியாது ... ம்ம் ... குயிக் ... நெக்ஸ்ட் ... ஸ்டார்ட் ...ஆக்சன் ... மாலினி 3 !! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு