புதன், 15 ஏப்ரல், 2020

அந்த நாளும் வந்திடாதோ - நிறைவுப் பகுதி.


நேற்றைய பதிவான அந்த நாளும் வந்திடாதோ கதையின் இறுதிப் பகுதி. 

எழுதியவர் : கீதா ரெங்கன் 





உடனே டி வி யை ஆன் செய்தான் ரவி. 

காட்சி டி வி சானலை டியூன் செய்தான். 

மாலினியின் பேட்டி ! 

“மேடம் உங்க அழகுக்கும் அசாத்திய நடிப்புத் திறமைக்கும் நீங்க சினிமாவுக்குள்ள கொஞ்சம் லேட் என்ட்ரிதான் இல்லையா? அதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியுமா? 

“நான் எப்படியாவது சினிமாவுல என்ட்ரி ஆயிடணும்னு முட்டி மோதலை. என்னோட திறமை மீது நம்பிக்கை. ஒரு சில முயற்சிகள் செஞ்சும் வாய்ப்புகள் வரலை. ஆனா எங்க அம்மா அப்பாவுக்கு நாங்க நாலு பெண்கள். நிலைமை அத்தனை வளமை இல்லை. அப்பத்தான் டைரக்டர் பாலகுமார் படத்துல ஒரு சின்ன ரோல் வந்துச்சு……ரெண்டு வருஷம் ஆயிடுச்சே...”

“அது கொஞ்சம் கவர்ச்சியான காட்சிகள் வரும் சீன்ஸ் இல்லையா…ஆனா அதுக்கு அப்புறம் நீங்க செலக்ட் பண்ணின இந்த மூணு படங்களும் பக்கா டீசன்ட்” 

“ஆமா. கொஞ்சம் கவர்ச்சியான சீன் மா. ஆனா அது உன் நடிப்புத் திறமைக்கு பெரிய பாராட்டு கிடைக்கும் கேரக்டர். ஓகே வானு சொல்லித்தான் டைரக்டர் பி கே கேட்டார். முதல்ல தயக்கமாதான் இருந்துச்சு. ஆனா ஃபேமஸ் டைரக்டர். படம் கண்டிப்பா ஹிட் ஆகும். கவர்ச்சினாலும் அந்தக் கேரக்டர் பேசப்படும் ஸோ இது நல்ல என்ட்ரிக்கான விசிட்டிங்க் கார்டுனு ஒப்புக்கிட்டேன். அப்ப அம்மா அப்பாவுக்குக் கூடத் தெரியாது.”

“அதனால் உங்களுக்கு என்னென்ன அனுபவங்கள்? ஆனாலும் அதுக்கு அப்புறம் கூடக் கொஞ்சம் தாமதமாச்சு இல்லையா உங்களுக்குக் கிடைச்ச முதல் ஹிட் வாய்ப்பு.” 

“ஆமா. அந்தக் கவர்ச்சி ஸீன் பார்த்துட்டு மொதல்ல நான் விரும்பினவர் எங்கிட்ட கொஞ்சம் வார்த்தைகள் எல்லை மீறிக் கேட்க எனக்கும் கோபம் வந்துச்சு. மனஸ்தாபத்துல நானும் பேசிட்டேன். “

“அட! உங்க காதல் பத்தி எல்லாம் ஒரு கிசு கிசு, பேச்சு கூட வரலியே..ஆச்சரியம்…இப்பவும் உங்க விருப்பம் தொடருதா? “

“அப்ப நான் சினிமாவுல என்ட்ரி ஆன நேரம் தானே. முதல் படம் ஸோ நான் யாருக்கும் அறிமுகம் ஆகலை. இப்ப அவரோடு தொடர்புல இல்லைன்னாலும் அவர் இன்னும் திருமணம் செஞ்சுக்கலைன்னு மட்டும் தெரியும். எனக்கு அப்ப ரொம்ப ச்சீ போன்னு ஆயிருச்சு. நீங்களும் இவ்வளவுதானான்னு. இப்ப அவருக்கும் மெச்சூரிட்டி வந்திருக்கலாம். ஏற்கனவே நான் இப்படியான காட்சிகள்ல இனி நடிக்கக் கூடாதுனு முடிவு செய்த அதே நேரம் எங்கம்மா வேற வீட்டுல கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி, அது அப்படியே இன்னும் என்னை ரொம்ப உறுதியா இருக்க வைச்சுருச்சு” 

“அம்மா அப்படி என்ன கேட்டாங்க மேடம்?”

“உங்கப்பா முன்னாடி உன்னால இப்படி வர முடியுமா? அந்த சீனை பாத்து நாங்க எவ்வளவு கூச்சப் பட்டோம் தெரியுமா? நாம எல்லாரும் சேர்ந்து உக்காந்து பார்க்க முடியுமா? உன்ன கட்டிக்கப் போறவனையும் நினைச்சுப் பாரு. இப்படி எல்லாம் நீ வீட்டுக்குச் சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. அந்தப் பணம் வேண்டாம். உன்னைப் பார்த்தா மரியாதை கொடுக்கணும்ன்ற மாதிரியான கேரக்டர்ஸ் கிடைச்சா செய். இல்லைனா சினிமாக்குத் தலைமுழுகிடுன்னு…”

“அதனாலதான் இந்தப் படங்கள் எல்லாம் பண்ண லேட் ஆச்சு இல்லையா?”

“ஆமாம் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. எல்லாமே இப்படியான கேரக்டர்கள், ஈவன் ஹீரோயின் கேரக்டர் கூட. அதாவது ஹீரோயின் வல்கரா ட்ரெஸ் போட்டு நடிக்கணும்ன்ற அவசியமே இல்லை. சில சீன் கூட மறைமுகமா அழகா சொல்லிக் கதைய நகர்த்தலாம் ஆனா எல்லா டைரக்டர்ஸும் அப்ப்டி இல்லையே…ஸோ நான் முடியாதுன்னு உறுதியா இருந்தேன்.”


“மேடம் இப்ப காஸ்ட் கவுச்சிங்க் பத்தி ஒரு நடிகை பரபரப்பா பேட்டி எல்லாம் கொடுத்துட்டுருக்காங்க…அதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? இண்டஸ்ட்ரீல அப்படி இருக்கா? உங்களையும் யாராச்சும் அப்படிக் கேட்டுருக்காங்களா?”

“மத்தவங்க பத்தி நான் எதுவும் சொல்லமாட்டேன். அது நாகரீகம் கிடையாது. அது அவங்க லைஃப். பட் என் அனுபவம் மட்டும் தான் இங்க சொல்ல முடியும். எனக்கும் அப்படியான கால்ஸ் வந்துச்சு. ஸோ இண்டஸ்ட்ரில இருக்குன்னு தெரியுது. ஆனால் எல்லாரும் அப்படிக் கிடையாது. நாம எப்படி இருக்கோம்ன்றதும் முக்கியம். எப்படியாவது சினிமால நுழையணுங்கறதுக்காக எதையும் செய்வேன்னா வி வில் பி யூஸ்ட். நான் அதுக்கு எகெய்ன்ஸ்ட். கட் அண்ட் ரைட். கறார் பேர்வழி. இடங்கொடுக்க மாட்டேன். ரெண்டாவது எங்கப்பாதான் என் மேனேஜர். ஸோ பிரச்சனையே இல்லை. நம்மை நாம் தான் தற்காத்துக்கணும்.”

“இப்ப இண்டஸ்ட்ரில வெற்றிப் படங்கள் கொடுத்து டாப் கியர்ல இருக்கற டைரக்டர் ரவியோட படங்கள் பார்த்தீங்களா மேடம்?”

“ஓ பார்த்தேன். ஹீரோயின்ஸ ரொம்ப டீசண்டா மரியாதைக்குரிய பெண்ணா காட்டியிருக்கார். சில சீன்ஸ அதுக்குத் தேவைன்னு கொஞ்சம் அப்படியும் இப்படியுமா கூட எடுத்திருக்கலாம் ஆனா அதையும் ரொம்ப அழகா விகல்பம் இல்லாம எடுத்திருக்கார். (மனதிற்குள், அதான் அன்னிக்கு என் மேல அத்தனை கோபம் வந்துச்சு போல. என்று நினைத்துக் கொண்டாள்) நல்ல டைரக்ஷன். நல்ல கதை. யதார்த்தம்…அவார்ட் கூடக் கிடைக்கும்னு பேச்சு அடிபடுது”

“அவர் கூட சமீபத்து பேட்டில, “நீங்களும் ஹீரோயினை ரொம்ப டீசண்டா காட்டறீங்க. நம்பர் ஒன் நடிகையா இருக்கற மாலினியும் கூட அப்படித்தான் நடிப்பேன்னும் சொல்லியிருக்காங்க. அப்ப நீங்க மாலினியோடு ஜாய்ன் செஞ்சு ப்ராஜக்ட் செய்ய எண்ணம் உண்டானு கேட்டதுக்கு, யெஸ். என்னோட அடுத்த ப்ராஜெக்ட்ல அவங்கதான் ஆனா இன்னும் அவங்களை நான் கான்டாக்ட் பண்ணலை. அவங்க ஓகெ சொல்லிட்டாங்கனா இணைவேன்னு சொல்லியிருந்தார். நீங்க என்ன சொல்றீங்க?”

“வொய் நாட்? வாய்ப்பு கொடுத்தார்னா, கண்டிப்பா ஹாப்பி மொமென்ட்ஸ்!”

“கடைசியா ஒரு கேள்வி. உங்க திருமணம் பற்றிக் கூட சமீபத்துல வேறொரு பேட்டில கேட்டாங்க. நீங்க இப்போதைக்கு இல்லைன்னு சொல்லிருந்தீங்க. இந்தப் பேட்டிலதான் முதல் முதலா உங்க காதல் பத்தி சொல்லிருக்கீங்க. நீங்க விரும்புறவர் ஒரு வேளை இந்தப் பேட்டிய பார்த்து, நாம அன்னிக்குத் தப்பா பேசிட்டோம்னு நினைச்சு உங்ககிட்ட ஸாரி சொல்லி வந்தா உங்க ரியாக்ஷன்?”

“ம் வந்தா..பார்ப்போம். திருமணம்னா உங்க எல்லாருக்கும் தெரியாம இருக்காதே” 

இதப் பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு மிகவும் குற்ற உணர்வு தோன்றியது. ‘எத்தனை நல்லவள். அன்னிக்கு நான் கொஞ்சம் என் நாக்கை அடக்கியிருக்கணும். என்னதான் கோபம் வந்தாலும் வக்கிர வார்த்தைகள். பணம் கண்ட…. ச்சே! நாக்கு வரை வந்திருச்சே என் தப்புதான். ஆண் அப்படின்ற ஒரு மேல் சாவனிஸம்.

‘பச்சை நிறமே பச்சை நிறமே மாளவிகா கூட அன்னிக்கு யூனிட்ல நாங்க ஃப்ரென்ட்ஸ் உக்காந்து பேசிட்டுருந்தப்ப யாரோ சில்க் ஸ்மிதாவைத் தப்பா பேசினதும்….

”எந்தப் பெண்ணைப்பத்தியும் இந்த மாதிரி கண்டபடி பேசாதீங்க…அவங்களுக்கு என்ன நிலைமை இருந்துச்சோ அப்ப? யாருக்குத் தெரியும். இப்படித்தான் ஜஸ்ட் ஒரு சீன்ல அந்த சீனுக்குத் தேவைன்னு டைரக்டர் சொல்லி ஒரு பெண் கொஞ்சம் கவர்ச்சியா ட்ரெஸ் போட்டு வந்தாலே உடனே அவ தப்பானவன்னு உலகம் சொல்லும்….. புரளி கிளப்பும்…டாமிட். பாருங்க மாலினிய அவங்க எவ்ளோ ஸ்ட்ரிக்டா இண்டஸ்ட்ரீல இருக்காங்க. அவங்கதான் எனக்கு வழிகாட்டி” ன்னு ஒரே ஆர்க்யூமென்ட்… இந்தப் பச்சை எனக்குத் தோழியான பிறகுதான் நான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன், பெண்களைப் பத்திய பார்வை, எண்ணம் எல்லாம் இன்னும் விரிவானதுக்கு பச்சையும், மாலினியோட ஒவ்வொரு பேட்டியும் தான் காரணம். பச்சைய லவ் பண்ற சேதுக்குக் கூட பச்சைய பத்தி இவ்வளவு தெரியுமான்னு தெரியலை.’ 

மாலினியும் பச்சையும் எனக்கு நல்ல ஃப்ரென்ட்ஸ். பச்சையிடமும் மாலினிய பத்திச் சொல்ல வேண்டும்’ என்று நினைத்தவாறே மாலினிக்கு வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாம் என்று அனுப்பினான்.

‘ஸாரி மாலினி. நான் அன்னிக்குப் பேசினது தப்புதான். அதை உணர்ந்துவிட்டேன். என் அடுத்த படத்துல உன்னோடு இணைந்து படம்  செய்ய விரும்பறேன். நீ எப்போது ஃப்ரீயா இருப்பன்னு சொல்லு. உன்னை சந்திக்கிறேன். அபார்ட் ஃப்ரம் த வொர்க் ஃப்ரன்ட் ….. யு ஆர் ஸ்டில் வித் மி இன் மை ஹார்ட். ஸோ உன்னைப் பார்த்து பேசணும்.”

என்று கொடுத்துவிட்டு தவிப்புடன் படுக்கச் சென்றான். இடையிடையே எடுத்துப் பார்த்தான். எந்தவித மறு மொழியும் இல்லை. அவள் பார்த்தாளா இல்லையா என்றும் தெரியவில்லை. எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. 

மறுநாள் காலை தாமதமாக எழுந்தவனுக்கு நம்பவே முடியவில்லை மகிழ்சியில் திக்குமுக்காடினான். வாட்சப் மெசேஜ். “யெஸ். லைஃப் லாங்க் ப்ராஜக்ட்” கூடவே, மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால். 

(முற்றும்) 

18 கருத்துகள்:

  1. கீதா ரெங்கன் அவர்கள் பாணியில் விரிவான விளக்கங்களுடன் கதை.

    நல்ல முடிவு. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கும் பாராட்டிற்க்ம்

      கீதா

      நீக்கு
  2. நல்ல கதை. இப்போது முதலில் இருந்து படிக்க வேண்டும். அப்போது தான் சுவாரசியமாக இருக்கும்.

    இந்த பதிவை தொடர்கதை என குறிப்பிட்டிருக்கலாம். அப்போது தான் வலைத் திரட்டியில் உரிய பிரிவில் தானாகவே இணைந்து விடும்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு
  3. நல்ல முடிவு. எந்த துறையாக இருந்தாலும் நாம் செய்யும் வேலையில் நேர்மையும் ஒழுக்கமும் இருந்தால் காலம் சென்றாலும் முன்னேற்றம் வந்தே தீரும் என்பதை மிக அழகாய் சொல்லி விட்டார்.
    மாலினியின் அம்மா கேட்ட கேள்வியும் மாலினியின் மாறாத முடிவும் வெற்றிக்கு காரணம்.
    ரவி, மாலினி பிணக்கு தீர்ந்து நல்ல முடிவு.

    வாட்சப் மெசேஜ். “யெஸ். லைஃப் லாங்க் ப்ராஜக்ட்” கூடவே, மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால்.

    அருமை.
    வாழ்த்துக்கள் கீதா, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்திற்கு, பாராட்டிற்கு

      கீதா

      நீக்கு
  4. கதையை எழுதிய மூன்று பேருமே சுபமாகத்தான் முடித்திருக்கிறோம் அவரவர் பாணியில்.  மூன்று வருடங்கள் என்பது சற்று நீளமாக தோன்றினாலும் அவர்களுடைய காதலின் ஆழத்தை காண்பிக்க உதவியிருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா. கருத்திற்கு.

      அக்கா சிலர் 5, 6 வருடங்கள் கூட ஏன் இன்னும் கூட அதிக வருடங்கள் கழித்ஹ்டு இணைந்திருக்காங்க.

      ஆமாம். பானுக்கா மூன்று பேருமே சுபமாகத்தான்..பானுக்கா அண்ட் கௌ அண்ணா, நான் ஒன்று நினைத்தேன். பானுக்காவின் ஆரம்பத்தை அப்படியே வைத்துக் கொண்டு. கௌ அண்ணா மற்றும் கீதாவின் வெர்ஷன்களில் சின்ன டிங்கரிங்க் செய்தால் மூன்றையும் இணைத்து ஒரே கதையாக்கிடலாம். பானுக்கா வுடையது அப்படியே. கீதாவின் கதையில் ரவி அவளைத் தொடர்பு கொள்வது எப்படி என்று அதுவும் வெற்றிப் படங்கள் கொடுத்த பிறகும் நினைக்கும் போது அங்கு கௌ அண்ணாவின் கதைல் சேதுவின் ப்ளான் எல்லாம் வந்து கடைசியில் முடிவில் இரண்டையும் சேர்த்து முடித்துவிடலாம் சின்ன சின்ன டிங்கரிங்க் தான்....என்று தோன்றியது...

      கீதா

      நீக்கு
  5. கதையை சுபமாக முடிச்சதுக்குப் பாராட்டுகள். என்றாலும் மனம் மாற 3 வருடங்கள் அதிகமோ? கடைசியில் மாலினி ஏன் உடனே பதில் சொல்லவில்லை? அதுவும் புரியலை! எப்படியோ ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்றாலும் பச்சைக்கும், சேதுவுக்கும் கல்யாணம் ஆச்சா என்பது தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா மிக்க நன்றி அக்கா.

      அக்கா சில ஜோடிகள் இன்னும் அதிக வருடம் எடுத்துக் கொண்டு கூட இணைந்திருக்காங்க...

      அக்கா பச்சைக்கும் சேதுவுக்கும் தான் கௌ அண்ணா கல்யாணம் செய்து வைத்துவிட்டாரே!!!!! ஹா ஹா ஹா

      அதானால் தான் இங்கு அதை ஜஸ்ட் மென்ஷ்ன் செய்திருக்கேன்.

      மூன்றையும் மூன்று பேரது கதைகளையும் இணைத்துவிடலாம் அளவிற்குப் பொருந்திப் போய் உள்ளது...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. மாலினியின் பெற்றோர் நல்லவர்களாக இருந்ததால் மாலினியும் கௌரவமாக நடித்துக்கொண்டு இருக்க முடிந்தது. இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கீதாக்கா. நிறையப் பேர் சினி இண்டஸ்ற்றியில் செய்யும் தவறு அதுதான்.

      நான் சில வீடியோக்கள் பார்த்தேன் அதை வைத்துத்தான் இப்படியான பெற்றோர், நடிகைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துதான் எழுதினேன்.

      சினி துறையில் நுழையும் பெண்கள் எப்படியேனும் நுழைந்துவிட வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்...

      கீதா

      நீக்கு
  7. முடிவைச் சட்டெனச் சொல்லி விட்டாற்போல் ஓர் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கீதாக்கா அப்படித் தோன்றியதா...நான் இந்த இடைப்பட்ட 2 வருடத்து நிகழ்வுகள் நு சிலதை சேர்த்திருந்தேன் ஆனால் பெரிதாகிவிட்டதால் அதைச் சுருக்கமாக ரவி நிறைய தெரிந்து கொண்டதாகச் சொல்லி கட் செய்துவிட்டேன்...அதைக் கட் செய்யாமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி கீதாக்கா..

      கீதா

      நீக்கு
  8. மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால் வந்தது கூட தெரியாம அப்படி என்ன உறக்கம் படவா ... குழிச்சுபுட்டு சட்டுபுட்டுன்னு கெளம்பு .... அங்கிட்டு மாலினி வெயிட்டிங் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா அதானே ...ஆனா பாருங்க இந்நேரம் கல்யாணமே முடிஞ்சுருக்கும்...

      ஜட்ஜ்மென்ட் சிவா உங்க கமெண்டை ரசித்துச் சிரித்தேன்..மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  9. கௌ அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கு.

    கூடவே முதல் மூன்று வரிகள் இங்கு இப்பகுதியில் சேர்த்தமைக்கும் மிக்க மிக்க நன்றி அண்ணா...உங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொக்கி தொடரில் ஆர்வமுடன் பங்கேற்ற உங்கள் எல்லோருக்கும்தான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.

      நீக்கு