செவ்வாய், 21 ஏப்ரல், 2020

படம் தூண்டிய எண்ணங்கள் : ரேவதி நரசிம்ஹன்



ஏப்ரல் பதினேழாம் தேதி, பார்த்ததும் கேட்டதும் பகுதியில் வந்த புகைப்படம்.  

ஒருமாலைப் பொழுதின் அயர்வு தெரிகிறது. ஒரு நீண்ட சாலையில் ஒதுக்கப்பட்ட மண்ணிடையே இன்னோரு  வழி. 





இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கிளைகள் போல விரிகிறது. ஒரு பெரிய மரத்தின்  பாதைகளாக அவை பிரிகின்றன.
பால்கனியின் கைப்பிடிகள் நம் எல்லை. 
இப்போதைய நிலையின் முழுமை. 

மரங்களின் மஞ்சள், சிவப்பு பூக்கள் நம் இளைய கிளைகள்.
நடுவே கண்கூச வைக்கும் வெள்ளை வீடுகள், புதிய தலைமுறையின் செழிப்பு.

அங்கே இருக்கும் மஞ்சள் தடுப்புகள், பாதுகாப்பும் ,அதே சமயம் 
ஒரு சிறையும் கூட. யாரும் வரவேண்டாம், நாமும் போக வேண்டாம் என்று விதி முறைகளைச்  சொல்கின்றன.

உயர்ந்து செல்லும் படிகளும் அழகு.
ஆரோக்கியத்தின் அறிகுறி. இதுவே ராம்ப்  ஆக இருந்தால் என் போன்றவர்களுக்கு   இன்னும் வசதி .


அழகான படம். அளித்தவருக்கு நன்றி.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

=============================================  

10 கருத்துகள்:

  1. //மரங்களின் மஞ்சள், சிவப்பு பூக்கள் நம் இளைய கிளைகள்.
    நடுவே கண்கூச வைக்கும் வெள்ளை வீடுகள், புதிய தலைமுறையின் செழிப்பு.//

    நல்லா இருக்கிறது.
    படம் பார்த்து கதை சொல் போல படம் பார்த்து எண்ணங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் படம் கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்டதோ? இதைப் பார்த்ததும் விமானத்தில் இருந்து சென்னை விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கும் முன்னர் பார்க்கும் காட்சிகள் நினைவில் வருகின்றன. முன்னெல்லாம் நல்ல பசுமையாகக் காட்சி அளிக்கும் சென்னை நகரம் சமீபத்தில் அதாவது பெப்ரவரியில் தரை இறங்குகையில் பசுமை குறைந்து காணப்பட்டது. அடி வயிற்றில் திக்! என்றது எனக்கு! எங்கே போச்சு அந்தப் பசுமை எல்லாம்? வருத்தமான காட்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் மாடியிலிருந்து எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. அன்பு கௌதமன் ஜி நன்றி.
    அன்பு கோமதி,எண்ணங்கள் வயதுக் கேற்ப மாறுகின்றன.
    இதுவேபத்து வருடங்கள் முன்பு என்றால்
    என்ன எழுதி இருப்பேனோ:) நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதுக்கேற்ப சிந்தனைகளும் மாறுவது இயற்கைதானே!

      நீக்கு
  4. இந்த இடம் பங்களூர் என்று நினைத்தேன் கீதாமா..
    சென்னையோ.
    சென்னை நிறையத்தான் மாறிவிட்டது. மேலிருந்து பார்க்கையில் மரங்கள் குறைந்து சாலைகளும் கட்டிடங்களும் நிறையத் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானத்திலிருந்து கீழே பார்ப்பதற்கு எனக்கு ஏனோ பயமாக இருக்கும்!

      நீக்கு
  5. மரங்களுக்கு இடையே வீடுகள் முளைத்திருப்பது அருமை !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு