ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200419


April 12, 2020 திருமதி கீதா ரெங்கன் அவர்கள் அனுப்பிய நிகழ்வுகள் 
இங்கே. 





மொட்டைமாடி.  மரத்தின் இலைகளுக்கிடையில் சூரியக் கதிர்கள்.   மேற்கு வானில் நிலா, கொஞ்சம் கொஞ்சமாக ஒளியிழந்த நிலையில். மேகம் பஞ்சு பொதியாய். 5 நாரைகள் ஒன்றாகப் பறந்தன. மைனாகூட்டம் அங்கும் இங்கும் கூட்டமாய் பறந்தன. 'கீச் கீச்' என்ற சத்தம்.  

பின்னால் வீட்டை ஒட்டிய மசூதி தெரிகிறது. அதற்கு அப்பால் இருந்த வீட்டு மாடி பால்கனியில் ஒருவர் பல் தேய்த்துக் கொண்டே யாருக்கோ கை அசைத்தார்.  

இடது புற வீட்டில் உள்ள ஜனு எனும் நாலு கால் செல்லம் என்னைப் பார்த்துக் குரைத்தது.    மசூதிக் கூரையின் மீது திடீரென்று இரு பூனைக்குட்டிகள் வெளிவந்து அணிலை துரத்தி விளையாடின. 

மியாவ் மியாவ் என்று சத்தமிட்டு.  வீட்டின் முன்புறம் தெருவில் இரு வீடுகளில் வாசல் பெருக்கித் தெளிக்கும் சத்தம். ஒதுக்கப்பட்டக் குப்பையைத் தெருக் கூட்டுபவர் ஏதோ கன்னடத்தில் சத்தம் போட்டுக்கொண்டே அள்ளிச் செல்கிறார்.  அந்தக் குப்பையில் அணிந்தெறியப்பட்ட பல முக கவசங்கள். ஒரு வாலிபன்  கீரை பால் என்று ஒரு கூடையில் வாங்கிச் செல்ல, எதிர் வீட்டினர் ஏதோ கேட்க இவர் பின்னால் கை காட்டி இடதுபுறம் என்று சைகை காட்டியபடி சென்றார். 

இருவர் தங்கள் செல்லங்களை இயற்கை உபாதைக்கு அழைத்து வர, இரு செல்லங்களும் ஒன்றை ஒன்று முறைத்து உறும, அழைத்து வந்தவர்கள் எதிர் எதிரே மாற்றுத் திசையில் சென்றனர்.   

ஒரு ஏழை மூதாட்டி  மெல்ல மெல்ல நடக்க முடியாமல் நடந்து, இலவச சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க அவர் பின்னே ஒரு ஏழைத்தாய் தன் மன நிலை சரியில்லாத மகனுடன்.... முன்னே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். 

நான் 8 போடும் நடைப்பயிற்சி முடிந்திட கீழே இறங்கினேன்....அந்த மனநிலை சரியில்லாத பையன் என் வீட்டு வாசல் முன்...சிரித்துக் கொண்டு.....

=========================================


6 கருத்துகள்:

  1. கீதாவின் காலை பொழுது அருமை.

    //ஒரு ஏழை மூதாட்டி மெல்ல மெல்ல நடக்க முடியாமல் நடந்து, இலவச சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க அவர் பின்னே ஒரு ஏழைத்தாய் தன் மன நிலை சரியில்லாத மகனுடன்.... முன்னே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். //

    இது தான் வருத்தமாய் இருக்கிறது. விரைவில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் இறை அருளால்.



    பதிலளிநீக்கு
  2. என் வீட்டிலிருந்து அடுத்தவீட்டார் கொடியில் காயப்போட்டு இருக்கும் துணிகளும் சரியாக கிளிப் மாட்டாமல் கீழே விழுந்த, ஜன்னலில் விழுந்த துணிகளும் தெரிகிறது.
    என் தலையை கண்டவுடன் புறாக்கள், காகம் பறந்து வந்து சாதம் வைத்து இருக்கிறாளா அம்மா என்று பார்ப்பதும் தெரிகிறது. அய்யனார், இருக்கும் திசையைப் பார்த்தும், அழகர் இருக்கும் திசையைப் பார்த்தும் கும்பிட்டுவிட்டு உள்ளே விரைந்தேன் பறவைகளுக்கு சாப்பாடு எடுக்க.

    பதிலளிநீக்கு
  3. என் வீட்டிலிருந்து பின்புறம் இருக்கும் வீடுகளில் என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. அண்ணா மிக்க நன்றி.

    மீண்டும் வருகிறேன். இது மொபைல் வழி....கணவரின் கணினி ஒன்றுதான் தற்போது...அது ப்ரீ ஆனதும் வருகிறேன் நெட்ட்டும் வரணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. தி/கீதாவின் பார்வையில் பட்டவற்றை வைத்து யார் என்ன எழுதப் போகிறார்கள்? ஆவல்!

    பதிலளிநீக்கு