சனி, 11 ஏப்ரல், 2020

யாரடி வந்தார் ?


இது நேற்றைய பதிவின் கொக்கிக்கு எழுதப்பட்டது. 
இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியாகும். 

மாலினிக்கு அன்று வந்த எஸ் எம் எஸ் : 

" நாளைக் காலை எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்க இயலுமா? உங்களை உங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கிறேன்." 
யாரிடமிருந்து வந்த செய்தி என்ற தகவல் தெரியவில்லை. அறிமுகம் இல்லாத நபர். அவளுடைய மொபைல் போனில் இந்த நம்பர் இல்லை. True caller கொண்டு நம்பரை ஆராய்ந்தால், "Scene 1904" என்று வருகிறது. 

பதில் எஸ் எம் எஸ் செய்தாள்: 

" யார் நீங்கள்? என்ன விஷயமாக சந்திக்க வேண்டும்? இவைகளைக் கூறினால்தான் நான் கமிட் செய்வேன்." 

SMS: 

" மேடம், நான் ஓர் உதவி டைரக்டர். பெயர் மற்றும் விவரங்கள் உங்களை சந்திக்கும்போது கூறுகிறேன். ஒரு குறிப்பிட்ட project சம்பந்தமாக உங்களிடம் ஓர் ஆலோசனை தேவைப்படுகிறது. எந்த நாள், எந்த நேரம் சொல்கிறீர்களோ அதன்படி வந்து பார்க்கிறேன்." மாலினி அதற்கு அனுப்பிய செய்தி : " நாள், நேரம் உங்கள் எண்ணுக்கு இன்றைக்குள் அனுப்புகிறேன். நன்றி."

===============

மாலினிக்கு முதலில் தோன்றிய எண்ணம் : ' இவன் யார்? எதற்கு வருகிறான்? யாரேனும்  அண்டப்புளுகன் / ஆகாசப்புளுகன் நிருபர் அல்லது ரசிகன் என்ற பெயரில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கின்றேன் - பணம் கொடுங்க என்று கேட்கும் நச்சுப்பிச்சு போலிருக்கு.  உதவி டைரக்டர் என்றானே? பிரபுவுக்குத் தெரிந்த ஆளா இருப்பானோ?'

பிரபுவிற்கு கால் செய்து அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்வோமா? ச்சே - அதெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு அவன் காயட்டும். அப்புறம் நிஜமாகவே மனது வருத்தப்படுகிறான், மன்னிப்பு கேட்கிறான் என்று தெரிந்தால் அப்போது பார்த்துக்கொள்வோம். 

'வருபவன் யார் - அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதெல்லாம் தெரியாமல், இதெல்லாம் என்ன வேண்டாத சிந்தனைகள்' என்று மாலினி தன்னைத் தானே மனதுக்குள் கடிந்துகொண்டாள். 

சரி - மறுநாள் காலை பதினொரு மணிக்கு வரச்சொல்வோம் - அவன் யார், என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் என்று முடிவெடுத்தாள் மாலினி . செய்தி அனுப்பினாள்.

================

மறுநாள் காலை சரியாக பதினொரு மணிக்கு வாசல் பக்க அழைப்பு மணி ஓசை கேட்டது. 

மாலினியின் புதிய காரியதரிசிப் பெண் போய் வாசல் கதவைத் திறந்தாள். 

(தொடரும்) 15 கருத்துகள்:

 1. ஆஹா....பிரபுவாக இருக்குமோ....

  எனக்கென்னவோ பிரபுதான்னு அதான் ரவி...ரவி சித்ரான்னு தோணுது..வாசல்ல நிக்கற ஆளுக்கு க் கதவு திறக்கறதுக்கு ஒரு நாளாகுமா...ஹாஹாஹா

  நல்லாருக்கு அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. சிறப்பு. இவ்வாறான பதிவுகளை சிறுகதை அல்லது தொடர்கதை அல்லது இலக்கியம் என வகைப்படுத்துங்கள்.

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 26 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  பதிலளிநீக்கு
 3. //அப்புறம் நிஜமாகவே மனது வருத்தப்படுகிறான், மன்னிப்பு கேட்கிறான் என்று தெரிந்தால் அப்போது பார்த்துக்கொள்வோம். //

  மாலினி பிரபுவை மன்னிக்க தயார் என்று நினைக்கிறேன்.
  இந்த உதவி டைரக்டர் பிரபுவாக இருக்குமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் சந்தேகமா இருக்கு. ஆனால் மாலினிக்கு அறிமுகம் இல்லாத நபர் என்று அல்லவா கூறியிருக்கிறார் கதாசிரியர்!

   நீக்கு
 4. யார் வந்திருப்பார்கள்... தெரிந்து கொள்ள காத்திருப்பதை தவிர வேறு வழி!

  பதிலளிநீக்கு
 5. யாரானும் புதிய படத்தில் நடிக்க இவரை புக் செய்ய வந்திருப்பாரோ? பெரிய நடிகையாக ஆகப் போகிறார் மாலினி! அப்போப் பிரபு? மறந்துடுவாரா? இந்தக் கோணமும் நல்லாவே இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு என்னவோ சந்தேகமாத்தான் இருக்கு - நாளை என்ன கதை என்று தெரிந்துவிடும்.

   நீக்கு
 6. மாலினியும், ப்ரபுவும் பிரிவதில் எனக்கென்னவோ உடன்பாடு இல்லை. நானும் கிட்டத்தட்ட இதே போன்று தொடர்ந்து சுபமாக முடிக்க நினைத்திருந்தேன். நான் நினைத்தபடி தொடங்கியிருக்கறீர்கள், எப்படி முடிக்க போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. இது ஆரம்பத்தில் இருந்தே எனக்குப் புரிய வில்லை...

  டியூப் லைட் ஆகிவிட்டேனோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலையே வேண்டாம் ஐயா --- ஒவ்வொரு பதிவிலும் ஆரம்பத்தில் உள்ள சுட்டியை, சொடுக்கிச் சொடுக்கி - இனிமேல் சுட்டிகள் இல்லை என்கிற நிலை வரை போய், அங்கிருந்து படிக்கத் தொடங்கினால் போதும். ஒரு ஆரம்பம், கொக்கி , ஒரு தொடர்ச்சி, ஒரு முடிவு. அவ்வளவுதான். ஆரம்பத்தைப் படித்துவிட்டு - அதற்கு ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு ரூட்டில் கதை எழுதியிருக்கிறார்கள். இந்தக் கதைத் தொடரின் ஆரம்பம் டிசம்பர் 22, 2019 அன்று நம்ம ஏரியாவில் பதிவானது.

   நீக்கு
 8. உதவி டைரக்டரா !!! .... அப்படீனா ... ஒருவேளை டாக்டர் பிரகாஷின் உதவி டைரக்டரா இருந்து தொலைக்க போகிறார். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு