வெள்ளி, 17 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200417


ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி வந்து சேர்ந்த அடுத்த பதிவு. 




சுற்றிலும் பார்ப்பதும் கேட்பதும்.

பாத்திரம் தேய்த்த அலுப்பு நீங்குவதற்காக கட்டிலில் கால்நீட்டி அமர்ந்திருக்கிறேன். (எதிரில் டி வி ஆன்செய்யப் படாமல்).

டிஷ் வாஷர் கடையும் ஓசையும் சமையலறை சிங்க்கில் (தமிழில் என்ன) பாத்திரம் அலசப்படும் ஒலியும் கேட்கிறது.

எழுந்து பால்கனிக்குச் சென்று எட்டிப் பார்க்கிறேன்.

கேட் அருகில் வந்திருக்கும் வேன் ஓட்டுநர் நெற்றியருகே காய்ச்சல் இருக்கிறதா என்று மொபைலை வைத்துப்பார்த்து, உள்ளே அனுமதிக்கும் செக்யூரிட்டி. 

நாயை வெளியே அழைத்துச் செல்லும் எஜமானர் எஜமானியர். இரண்டொருவர் மாஸ்க் போட்டிருக்கவில்லை. 

ஆறேழு தெருநாய்கள், நடக்கும் சில பேரை ஆவலுடன் சுற்றி வந்து பலமாக வாலாட்டுகின்றன.

தண்ணீர் லாரி வந்து நிற்க டெஸ்ட் டியூபில் பிடித்து, தரம் சரி பார்த்து அனுப்பும் மற்றுமொரு செக்யூரிட்டி....

தூங்கு மூஞ்சி மரம் இன்னொரு பெயர் தெரியாத மரத்தில் அடர்ந்து மலர்ந்திருக்கும் பூக்கள்.

கூவியவாறு பறந்து செல்லும் பறவைகள்.


தூரத்தில் குலைக்கும் நாய்..






   (படம் & பதிவு அனுப்பியவர் : KGY Raman)  

நேற்றைய பதிவைப் போலவே, இதற்கும் கதை, கவிதை, கற்பனை புனையலாம். 

பார்த்ததும் கேட்டதும் பதிவில் வந்துள்ள எல்லா விவரங்களையும் verbatim எடுத்தாள வேண்டும் என்று கிடையாது. 

இங்கு நீங்கள் படித்தது, பார்த்தது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு கற்பனை. அவ்வளவுதான். 

========================================
                                 

13 கருத்துகள்:

  1. கண்டதும் கேட்டதும் - அடுத்தது யாருடையது என்ற ஆவலான காத்திருப்பில். கதை யார் எழுதப் போகிறார்கள் என பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே ! யாரையும் இந்தப்பக்கம் காணோமே! என்ன செய்யலாம்!

      நீக்கு
  2. சிங்க்=தொட்டிமுற்றம். இது எப்போதில் இருந்து? புதிதாக இருக்கே? என்ன செய்யணும்?

    பதிலளிநீக்கு
  3. அப்பாடி! மஹானுபாவர் ஒரு வழியாக வந்தாரா?.. இந்தப் பக்கம் ஒரு எட்டு வந்து பார்க்கச் சொல்லி எத்தனை முறை கேட்டுக் கொண்டிருந்திருப்பேன்?.. வருகை தொடரட்டும், KGY !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி இப்போவும் அவர் வரவில்லை. நான்தான் அவர் வாட்ஸ் அப் ல அனுப்பியதை இங்கே போட்டிருக்கேன்!

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு. அவர் எழுதி இருப்பதே
    இன்னும் அழகு.
    மற்றவர்கள் கருத்துகளையும் படிக்க ஆசை.

    பதிலளிநீக்கு
  5. அட! படம் எடுத்துப் போட்டிருக்கலாம் இல்லையா அண்ணா. எடுக்க நினைத்து எடுக்காமல் விட்டுவிட்டேன்.

    புரிந்தது ஒவ்வொன்றிற்கும் தனி தனியாகத்தான் கதை இல்லையா...

    நான் ஒவ்வொருவரின் குறிப்பையும் ஒரு வேர்டில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

    மனதில் வருகிறது ...பார்ப்போம் எழுத முடியுதான்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதவேண்டும் என்பதுதான் முக்கியம். கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இந்தக் குறிப்புகள் எல்லாமே சில sparks. சில தீப்பொறிகள் சிலருக்கு ஒரு உந்து சக்தியாக அமையலாம்.

      நீக்கு
  6. போட்டோ அருமை ... கொரோனோ புண்ணியத்தில் தெருக்கள் சுத்தமாக இருகின்றன !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு