சனி, 18 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200418


பன்னிரெண்டாம் தேதியன்று அடுத்து வந்த இரண்டு என்ட்ரி :  




ரேவதி நரசிம்ஹன் :   பெண் பாத்திரங்களை அடுக்கும் ஒலி. மாப்பிள்ளை அடுத்த அறையிலிருந்து பேசுவதை தேய வைக்கிறது. பேரன் இருந்த இடத்தில் ஓடி என் காதை இடிக்கப் பார்க்கிறான். :).   நான் இங்கே யோசிக்கப் பார்க்கிறேன்.

===============================

KGS :    வழக்கமான நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன்

மேற்குப்புற ஜன்னல் திறந்தும் கிழக்கு ஜன்னல் மூடியும் இருக்கிறது.

TV யில் sunlife.. மோகன் ராஜராஜ சோழன் நானே என்று பாடிக் கொண்டிருக்கிறார் 
மெல்லிய வால்யூம்...
பையர் அடுத்த அறையில் wfh.
R B இருவரும் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கினர்
அ & ஆ இருவரும் இன்னும் எழுந்திருக்கவில்லை
இரவு வெகு நேரம் வகுப்புகள் 
அ படித்தார்..ஆ எடுத்தார்
இருவருமே net இல்.

Call gets disturbed enru solli
Wifi remote aal TV off!


(இந்தப் படத்தில் எவ்வளவு கால்கள் இருக்கின்றன? )


16 கருத்துகள்:

  1. வலை ஓலை வலைத் திரட்டி ஊடாக முதல் வருகை.

    பதிலளிநீக்கு
  2. இந்த மாதிரி புத்திசாலி தனமான கேள்விகளுக்கு விடை அளிக்கும் அளவுக்கு நான் புத்திசாலி கிடையாதுங்கோ!

    குறிச்சொற்களை ஆக்குவதில் சற்று கவனம் செலுத்த கோருகிறேன்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவுக்கு என்ன குறிச்சொல் கொடுக்கலாம் என்று யோசித்து, விட்டுவிட்டேன்.

      நீக்கு
  3. இது நல்லா இருக்கு. இங்கே ஒருத்தர் 10 நிமிஷங்களாகத் தும்மிக் கொண்டிருந்ததால் கதவைச் சார்த்தி விட்டேன். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! தொலைக்காட்சியில் பாலிமர் செய்திகள். பார்த்து/கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. குறிச்சொல் குழப்பமிருப்பின் பொது எனக் கொடுத்து விடலாம்...

    பதிலளிநீக்கு
  5. இன்றைய நிகழ்வா?
    7 கால்கள் தெரிகிறது படத்தில்

    பதிலளிநீக்கு
  6. கௌ அண்ணா நோட்டட்.

    ஒவ்வொருத்தரது குறிப்புகளும் பார்க்கும் போது ரொம்ப நல்லாருக்கு

    அண்ணா எல்லாம் சேர்த்து கதை எழுதலாமா இல்லை ஒவ்வொருவரது நோட்ஸ்க்கும் தனி தனியாகக் கதையா?

    எனக்கு எழுதி முடிக்க கொஞ்சம் லேட்டாகும் பரவால்லைதானே.

    இங்கு படத்தில் 7 கால்கள் தெரிகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தனித் தனியாகவோ, எல்லாவற்றிலுமிருந்து கொஞ்சக் கொஞ்சம் எடுத்துக்கொண்டோ, எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவை யாவுமே எழுதவேண்டும் என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு spark. அந்த spark ஐ உள்வாங்கி, ஏதோ ஒன்றை சுவையாகப் படைத்து மற்றவர்களுக்கு அளித்து மகிழப்போகிறோம். அவ்வளவுதான்!

      நீக்கு
  7. கௌ அண்ணா நீங்க எழுத ஆரம்பிச்சுருப்பீங்களே அதுவும் துரை ஜி யின் குறிப்புகள் பார்த்ததும் எனக்கு அட கௌ அண்ணா இதையும் காமெடியா எழுதிவிடுவார்னு தோன்றியது.!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை எதுவும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், அப்படியே இருப்பேன் என்று சொல்லிவிடமுடியாது. பார்ப்போம்!

      நீக்கு
  8. ஒரு டவுட்டு. கால்களில், ஜன்னலில் உள்ள ஆரக் கால்களை ஏன் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்லுறேன் ... மொத்தம் ஏழு கால்கள் இருக்கின்றன ... சிறிய டேபிளுக்கு நான்கு கால்கள் ... அப்புறம் அது என்ன ஆர்மோனியப்பொட்டியா? சரி ஒ.கே ... ஆர்மோனியப்பொட்டி வைத்திருக்கும் ஸ்டேன்ட்க்கு இரண்டு கால்கள்.... அப்புறம் ... அது யோரட காலு ... ம் ..ம்ம் ... சரி ... மொத்தம் ஏழு கால்களும், அதில் ஓரேயொரு கால்களில் மட்டும் ஐந்து விரல்களும் இருக்குங்கோ....!!! சாரி ... மறந்துட்டேன், அப்புறம் ஜன்னலின் ஆரக் கால்கள் 1...2...3...4 <> 1...2...3.... பொறுங்கோ இப்போதான் எண்ணிக்கிட்டே இருக்கேன் .... (ஐயகோ ... நம்மள காலங்காத்தாலே இப்படி கம்பி எண்ண வச்சுப்புட்டாங்களே) >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு