செவ்வாய், 14 ஏப்ரல், 2020

அந்த நாளும் வந்திடாதோ !


அந்த நாளும் வந்திடாதோ !   :: எழுதியவர் திருமதி கீதா ரெங்கன் 

இந்தக் கதையைப் படிக்கு முன்பாக 
நீங்கள், 

1) கொக்கி 191222

2) மாலினி 1


3) மாலினி 2


4) மாலினி 3


ஆகியவற்றைப் படித்திருந்தால், இது சுலபமாகப் புரியும். 

அந்த நாளும் வந்திடாதோ ! 

கதை : கீதா ரெங்கன் 

(கீதாவா இது? நம்பவே முடியலையே. இப்படி ஒரு நாள்ல கதை எழுதிய சரித்திரமே கிடையாதே. ஆறப் போட்டு வருஷக் கணக்காகுமே சில கதைகள்…முடிக்கப்படாமலேயே கிடக்குமே… பொன்னேட்டில் பொறிக்கப்படணும். ஹிஹிஹி கதைய அல்ல. இப்படி ஒரு நாள்ல எழுதிட்டான்ற விஷயத்தை ஹிஹிஹி.)

ரவிக்கு அன்று மூட் சரியில்லை. எத்தனை முறை அழைத்தும் மாலினி ஃபோனை எடுக்கவே இல்லை. மிஸ்ட் கால் பார்க்காமலா இருந்திருப்பாள்? வாட்சப்பில் கொடுத்த மெசெஜ் கூட பார்த்திருக்கிறாள் என்பது ப்ளூ டிக்கில் காட்டியது. அதன் பின் கொடுத்த மெசேஜ் பார்த்தாளா என்று தெரியவில்லை. பார்த்த அடையாளம் தெரியக் கூடாது என்று மாற்றியிருப்பாளோ? இரண்டு டிக்கும் சாம்பல் நிறத்தில் ரவியைப் பார்த்துக் கொக்கரித்தது போலத் தோன்றியது அவனுக்கு.

ரவி திரைத்துறையில் டைரக்டர் ஆகும் கனவுடன் ஒரு பிரபல டைரக்டரிடம் உதவியாளராக இருந்தவன். பிரபல டிவி சானலாகிய காட்சி டிவியில் தொடர் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமணப் பேச்சை பெற்றோர் எடுத்தார்கள். அவனுக்கு இந்தத் தொடர் ஒரு நிரந்தர வருமானம் தரும் என்றாலும் அவனது கனவு பெரிய திரையில்தான் இருந்தது. இருந்தாலும் தன் பெற்றோரின் வார்த்தைகளையும் நிராகரிக்க முடியவில்லை. அவர்கள் சொன்ன எந்த ப்ரொஃபைலும் ஈர்க்கவில்லை. தன் மனதில் இன்னும் மாலினிதான் இருக்கிறாள் என்பதை உணர்ந்தான். அவளைப் பற்றிச் சொல்லிட பெற்றோரும் ஓகே சொல்லிட, மீண்டும் மாலினியைத் தொடர்பு கொண்டால் அவள் ரெஸ்பான்ட் பண்ணாததுதான் மேலே சொன்னது. 

மாலினியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அவன் நண்பன் சேதுவின் ஃபோன். 

“ரவி பொண்ணு பெயர் மாளவிகா. அவங்க அப்பா அம்மாகிட்டயும் பேசிட்டேன். ஓகே! சக்ஸஸ்!” 

ரவிக்குச் சட்டென்று புரியவில்லை. “யாருடா மாளவிகா? என்ன சொல்றடா புரியலை…” 

“டேய் என்னடா மறந்துட்ட. நம்ம டைரக்டர் அனுஷ் போல ஒரு பெண் தேடச் சொல்லியிருந்தாரே. அந்தக் கல்யாணத்துல பாத்த அந்த பச்சக்கலர் ட்ரெஸ் போட்ட பொண்ணு. அனுஷ் போல இருக்கான்னு எனக்குக் காட்டி அவளைப் பற்றி விசாரித்து ஃபிக்ஸ் செய்ய சொல்லிருந்தியேடா, மறந்துட்ட போல…”

“ஓ ரைட். ஸாரி ஸாரி…இப்ப சீரியல் வாய்ப்பு கிடைச்சு அதை இயக்கற தாட்ஸ்ல இருக்கேனா மறந்துட்டேண்டா…யெஸ் யெஸ். “

“அவள கூட்டிட்டு வரேன். எனக்கு ஓகேன்னுதான் தோணுது. நீயும் பேசிப்பாரு.” 

அவள் வந்தாள். அன்று பச்சைக்கலர் பட்டுப்பாவாடை தாவணியில் இருந்தாள். இப்போதும் பச்சைக் கலரில் சுடிதாரில். பச்சை நிறமே பச்சை நிறமே….பச்சை நிறம் ரொம்பப் பிடிக்கும் போல. 

“மாளவிகா. ரைட். உனக்கு நடிப்புல ஈடுபாடு உண்டா? இல்லை சினிமால தலைகாட்டினா ஃபேமஸ் ஆகலாம்னு…. இல்லை ஃபினான்ஸியல் கமிட்மென்ட்ஸ்?”

“இல்லை சார் எனக்கு எந்தவிதக் கமிட்மென்ட்ஸும் இல்லையாக்கும். ஐ ஆம் எ கேரளா கலாமண்டபம் ப்ராடக்ட். கேரளா கலாமண்டலத்துல, ஆக்டிங்க், டான்ஸ் கோர்ஸ் செஞ்சுருக்கேன் சார். லேட் கலாபவன் மணி தெரியும்லயா சார்? அவரோட பேரோடே கலாபவன் சேர்ந்துதான் வரும். நான் விஷுவல் கம்யூனிக்கேஷனும் செஞ்சுருக்கேன்.” 

“ஓ! கேரளா கலாமண்டலத்துலயா! வாவ்! க்ரேட். அது ரொம்ப ஃபேமஸ் யுனிவெர்சிட்டி எஸ்பெஷலி எல்லா ஆர்ட்ஸ்க்கும்…அப்ப மலையாளியா? அதான் உன் பேச்சுல மலையாள வாசனை” கலாமண்டலம் என்றதும் ரவிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அப்புறம் அவளிடம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். 

“இல்ல சார் தமிழ். ப்ராட்டப் இன் கேரளா. சார் நான் தமிழ் நல்லா பேசுவேன், வாசிக்கவும் தெரியும். நான் நல்லா அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் சார். வாய்ப்பு கிடைச்சா போதும்.”

“இரு என்ன சொன்ன?…அட்ஜஸ்ட்? இதுக்கு சினிஃபீல்ட்ல என்னன்னு உனக்கு மீனிங்க் தெரியுமா?”

“ஏன் சார்? டைரக்டர் எதிர்ப்பார்க்கறபடி நல்லா பெர்ஃபார்ம் பண்ணலைனா டைரக்டர் சிலர் கோச்சுக்குவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். சிலர் அடிக்கக் கூடச் செய்வாங்களாமே”

சிறிது நேரம் அமைதியாக இருந்த ரவி மெதுவாக, “சினிஃபீல்ட்ல அதுக்கு வேறொரு அர்த்தமும் இருக்குமா. அது வாய்ப்புக் கிடைக்கறதுக்காக சில பெண்கள் பலிகடாக்கள் இல்லைனா அவங்களே இஷ்டப்பட்டு…. ஆண்களோடு போறது… ம்ம்ம்ம் இனி இந்த வார்த்தையை வேற யார்க்கிட்டயும் யூஸ் பண்ணிடாத. யு ஹேவ் டு பி வெரி கேர்ஃபுல். “ 

“ஓ! சார் நான் கேர்ஃபுல்லா இருப்பேன். நான் அப்படியான பொண்ணும் இல்ல.“

ரவிக்கு அவளது தைரியமான பேச்சு, குரல், முக பாவங்கள் எல்லாமே பிடித்தது. பேசும் போதே கண்களின் நர்த்தனம் எக்ஸ்ப்ரஷன்ஸ், பாடி லேங்குவேஜ் நல்ல நடிகையாக மிளிர்வாள் என்று கலாமண்டலத்தின் முத்திரை பதித்தது.

“ஓகே மாளவிகா. நைஸ் மீட்டிங்க் யு. நான் என் ஃப்ரென்ட் கிருஷ்ணாவை இன்ட்ரோ செய்யறேன். அவன் உன்னை ஃபோட்டோஷூட் செய்வான். அந்த ஃபோட்டோஸோடு டைரக்டர்கிட்ட காட்டி உன்னைப் பத்தியும் சொல்லிட்டு ஐ வில் கெட் பேக் டு யு.” என்று சொன்னவன் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டான்.

மாளவிகா ஏனோ மாலினியை ரொம்பவே நினைவூட்டினாள். மாலினியும் இப்படித்தான் ரொம்ப போல்ட். கலாமண்டலம் இல்லை என்றாலும் அவளது கண்களின் எக்ஸ்ப்ரெஷன்ஸ், பாடிலேங்குவேஜ் எல்லாம்……அப்படியானவள் ஏன் அப்படி ஒரு கவர்ச்சியாக… அந்த நிகழ்வை நினைக்க வேண்டாம் என்று புறம் தள்ளி வேலைகளில் மூழ்கினான். 

பச்சையை டைரக்டரிடம் அறிமுகப்படுத்தியதும் அவளை உடனேயே படத்தில் ஃபிக்ஸ் பண்ணிவிட்டார். தன் சீரியல் வாய்ப்பைப் பற்றியும் அவரிடம் சொன்னான். பச்சையும் ரவியும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. சீரியல் மிக மிக பாப்புலராகிட காட்சி டிவியில் இத்தொடரின் டீ ஆர் பி ரேட்டும் கூடியது. டிவிக்கும் விளம்பர வருவாய் கூடியதில் பிரகாஷுக்கு மகிழ்ச்சி.

சீரியலின் வரவேற்பும், ரவியின் திறமைகளும் பெரிய திரையில் சில ஃபினான்ஸியர்ஸ் மற்றும் ப்ரொட்யூசர்ஸ் கவனத்திற்கு வர ரவிக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. அடுத்த ஒன்றரை வருடத்தில் மூன்று மிகப் பெரிய ஹிட் படங்கள் கொடுத்தான். தமிழ்த்திரைக்கு மிகவும் புதியவை. வித்தியாசமான கதைக்களம். டைரக்ஷன். பெர்ஃபெக்டாக திட்டமிடல், செதுக்கப்பட்ட ஸ்க்ரீன் ப்ளே, சொல்லப்பட்ட நாட்களில் அல்லது அதற்கு முன்பேயும், சொன்ன நாமினல் பட்ஜெட்டிற்குள்ளும், டூயட் என்ற பெயரில் தேவையில்லாமல் வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே படத்தை எடுத்து முடித்தல் என்பன ரவியின் வெற்றி ரகசியங்கள் என்று புகழ்பெற்ற ஆங்கில தினசரியில் பேசப்பட்டிருந்தது. வெற்றிமாறன், ராம், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோருக்கு நிகராகப் பேசப்பட்டான். 

அந்த ஒன்றரை வருடத்தில் மாலினியும் முன்னணி ஹீரோயினாக ஆனாள்., அவளுக்கும் மூன்று வெற்றிப்படங்கள். அதில் ஒன்று பெண்ணை முன்னிறுத்தும் படமும் இருந்தது. 

அவளின் வளர்ச்சியையும் புகழையும் ரவி பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தனது அடுத்த படத்தில் அவளை புக் செய்யச் சந்திக்கச் செல்வது போல அப்படியே தன் பெர்சனல் மேட்டரையும் பேசலாமே அவளை நேரடியாகவே சென்று பார்த்துவிடலாமா? அவள் நேரம் கேட்க வேண்டுமோ? அவள் மனம் மாறியிருக்குமா? அவளை எப்படித் தொடர்பு கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் க்ருஷ்ணா ஃபோன் செய்தான் காட்சி டிவியில் மாலினியின் பேட்டி என்று. 

(தொடரும்) 


17 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம். கதை இப்படி போகுதா! ஒன்றரை வருட Gap விட்டாச்சா... சரி பார்க்கலாம் டி.வி. பேட்டில என்ன சொல்லப் போறாங்க மாலினின்னு!

    கதாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
    2. வெங்கட்ஜி இது மீ தான் கீதா...தான்...நார்மலா கீதா ஜி ந்னு போடுவீங்க இதுல கதாசிரியர்னு போட்டதால ஒரு டவுட்டு ஹிஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
  2. நிறைய கதைகள் படிக்கவேண்டியிருக்கு. படித்துவிட்டு கருத்தெழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமாம் இதுக்கு முன்ன காணலியேன்னு நினைச்சேன் நெல்லை...

      கீதா

      நீக்கு
  3. //ஆறப் போட்டு வருஷக் கணக்காகுமே சில கதைகள்…// - அதுனால ஏகப்பட்ட plot இருக்கும். அதுல ஒரு கதையை எடுத்து டிங்கரிங் செய்து அனுப்பியிருப்பாரோ கீதா ரங்கன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நெல்லை நோ நோ...அது வேற கதைகள் கிடக்கு.

      கௌ அண்ணா முன்னாடி கொடுத்த இரண்டு கருவிற்கு நான் எழுதத் தொடங்கி ஹிஹிஹி அப்படியே இருக்கு...பாதில. முடிக்கவெ இல்லை. அப்ப நல்லா மனசுல கதை டெவலப்ப் ஆச்சு அப்புறம் முடியவே இல்லை எழுத. ஸோ அப்படியெ இருக்கு...

      நம்ம கௌ அண்ணா தானே.. எழுதி முடிச்சுக் கொடுத்தா கீதா பிறக்கும் முன்னே நான் கொடுத்த கதைக் கருவிற்கு கீதா எழுதி அனுப்பிய கதைன்னு இங்கு போடமாட்டாரா என்ன?!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  4. கௌ அண்ணா மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கு.

    உங்கள் கருத்து என்ன அண்ணா? அவ்வளவா சரியா இல்லையோ?

    நான் இப்படி ஒரு நாளில் எழுதியதே இல்லை. பல முறை வாசித்து கிடப்பிப் போட்டு மெருகேற்றி ஏற்றி லாஜிக் எல்லாம் செக் செய்து என்று ரொம்ப டைம் எடுத்து எழுதி அனுப்புவதுதான் வழக்கம்...

    இதில் கூட முதலில் எழுதியதில் நிறைய கட் செய்துவிட்டுத்தான் அனுப்பினேன்...

    மீண்டும் மிக்க நன்றி அண்ணா.


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா எழுதியிருக்கீங்க. அப்போவே வாட்ஸ் அப் செய்தியில் சொல்லிவிட்டேனே! மறந்துட்டீங்களா!

      நீக்கு
    2. மிக்க நன்றி கௌ அண்ணா...ஓ!! பாத்தீங்களா சரியா கவனிக்காம விட்டிருப்பேன்...தலையில் குட்டிக் கொண்டேன்..ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  5. கதை மிக அருமையாக சொல்லிக் கொண்டு போகிறீர்கள் தங்கு தடை இல்லாமல் கீதா.

    அனுஷ் போன்ற பெண் மாளவிகா மாலினியை நினைவூட்டிக் கொண்டு இருந்தாளா ரவிக்கு?

    பேட்டியில் மாலினி என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி கோமதிக்கா...கருத்திற்கு

      உங்களின் இரண்டாவது வரிக்கு அடுத்த பகுதியில் வரும் ..

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  6. சிறப்பான கதையமைப்பு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  7. அப்போ மாலினியும் அனுஷ்கா மாதிரித் தான் இருப்பாரா? அது சரி, இந்த ஒன்றரை வருஷத்தில் தற்செயலாகக் கூடவா ரவியும், மாலினியும் சந்திக்கவில்லை? என்ன இது ஆச்சரியம்?

    பதிலளிநீக்கு
  8. டிவி பொட்டியில நம்ம பார்ட்டியோட பேட்டியா ? ... எங்க பாப்போம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  9. இனிமேல் பழைய கதைகளையும் படிக்க வேண்டும்.
    நல்ல ஃப்ளோ. ரொம்ப ஃபீல்ட்ஸ் பற்றித் தெரிந்து
    வைத்திருக்கிறீர்கள் கீதாமா.
    சிறப்பான கதை அமைப்பு.

    பதிலளிநீக்கு