புதன், 22 ஏப்ரல், 2020

மேலும் சில பின்னூட்டங்கள் 200422



இந்தப் பின்னூட்டங்கள் ஏப்ரல் இருபதாம் தேதி பதிவில் வந்தவை :  





கோமதி அரசு :  

திரு. சுப்பிரமணியன் அவர்கள் சொன்ன நாள் குறிப்பு . நன்றாக இருக்கிறது.
காலை பற்வைகளின் உதயராகம் கேடக இனிமை. தொலைக்காட்சி தொல்லைகாட்சிதான்.
அவர் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பறவைகளின் உதயராகம் கேட்க இனிமை.

வல்லி சிம்ஹன் : 

சுப்ரமணியனின் அவர்கள் பதிவும் ,எழுத்தும் வெகு அழகு.
எழுதி எத்தனை நாட்களாகிறது என்று யோசிக்கிறேன்.
22 வருடங்கள் ஆச்சு.
மருத்துவமனை ப்ரிஸ்க்ரிப்ஷன் அனுப்ப மட்டும்,அல்லது ஸ்ரீராமஜயம்
எழுத என் பேனா திறக்கிறது. நன்றி.


பேனாக்காலம் என்று யாராவது எழுதி இருப்பார்கள்.
இவர் சட்டைப் பாக்கெட்டில் பேனாக் கறை முன்பெல்லாம் இருக்கும்.
அலுத்துக் கொள்வேன். 40 வருடங்களுக்கு முன்.

பிறகு அலுவலக மேஜையிலியே வைத்துவிட்டு வருவார்.
வீடு நிறைய ரெனால்ட்ஸ் பால் பாயிண்ட் பேனாக்கள் நிறைந்த காலம்.
தம்பியிடம் கேட்டு பச்சை இங்க் பேனா வாங்கிய
காலம் எல்லாம் நினைவுக்கு வருகிறது.
எழுத்துக்கு தான் எத்தனை வலிமை.!!!!


கீதா ரெங்கன் : 

இன்றைய குறிப்புகளையும் நோட்டட்.

அட! அழகா பேப்பர்ல எழுதியிருக்கிறாரே! நான் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் தட்டுவதால் பேப்பர் பேனா எடுத்து நாளாயிற்று. இருந்தாலும் ஒரு முறை எழுதி இப்படி ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன் பார்ப்போம் எப்படி இருக்குனு..

உப்பரிகை, என்னஅப்பு ஹா ஹா ஹா ஹா நல்ல ரசனை, நகைச்சுவை மிக்க மனிதர் வெங்கட்ஜியின் நண்பர் என்று தெரிகிறது. அதை வாசித்ததும் அட மற்றொரு கௌ அண்ணா என்று எண்ண வைத்தது..

கீதாக்கா கோமதிக்காவிந் குறிப்புகளையும் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டேன்.

நாளை வல்லிம்மாவின் பதிவிற்கு வெயிட்டிங்க்..என்னதான் இருந்தாலும் மதியம் மேலத்தான் வர முடிகிறது..


நான் எல்லா குறிப்புகளையும் கதைக்குப் பயன்படுத்தலாமா என்று கேட்டதற்கு உங்கள் பதில்களை பார்த்துவிட்டேன் கௌ அண்ணா. மிக்க நன்றி. அதனால் எல்லாமே எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நெல்லைத்தமிழன் :  


கேஜிஜி சார் இதைப்பற்றிக் கேட்டபோதே எனக்குத் தோன்றியது. நாம் அனைவரும் நம் வேலைகளைப் பார்க்கிறோமே தவிர சுற்றுச்சூழலில் குரல், ஒலிகள் இவற்றைக் கவனிக்க விட்டுவிடுகிறோம்.

அதைக் கவனிக்க ஆரம்பித்தாலே எண்ண ஓட்டங்களைத் தடை செய்யலாம். நல்ல முயற்சி.


கீதா சாம்பசிவம் :

என்னுடைய குறிப்புக்களையும் இங்கே மீண்டும் வெளியிட்டதுக்கு நன்றி. நான் பொதுவாக ஓசைகளை நிறையக் கவனிப்பேன். மனம் ஒரு பக்கம் அதில் லயித்திருக்கும். இன்னொரு பக்கம் செய்யும் வேலையில். இது சரியா எனத் தெரியாது! ஆனால் இரண்டும் பிறழ்வுகள் இல்லாமல் தனித்தனியாக மனதில் பதியும்.இப்போக் கூட ஒரு தவிட்டுக்குருவி இன்னொன்றிடம் பேசும் சப்தமும், அணில் ஒன்று விடாமல் "ணிக்" "ணிக்" என்னும் சப்தமும் கேட்கிறது. கூடவே நம்மவர் பால்கனிக்குத் தன் இருக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ அக்கூ சப்தமும். பெண்குயில் ப்ளிச், ப்ளிச் என இடைவிடாமல் கூவுகிறது. ஆண்குயிலின் சப்தம் இன்று காணோம்.

(தோகை விரித்து ஆடுவது ஆண் மயில் என்பதை அறிவீர்கள்தானே! அதே போலக் "குக்கூ" எனக் கூவுவதும் ஆண் குயில் தான். பெண் குயில் அதற்குப் பதிலாகத் தொடர்ந்து சப்தம் எழுப்பும். அதில் இனிமை இருக்காது என்றாலும் பெண் குயில் ஆண் குயிலுக்குத் தரும் சமிக்ஞை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.)

திரு சுப்ரமணியத்தின் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இதை எழுதுகையில் சண்டை போடும் மைனாக்களும், கூடவே கூச்சலிடும் விசிலடிச்சான் குருவியும்! ஹிஹிஹி, சின்னச் சிட்டுத் தான், விசில் போல இடைவிடாமல் கூவுவதால் நான் வைச்ச பெயர் விசிலடிச்சான் குருவி. பேப்பர்காரரை மாடிக்கு வரத் தடை போட்டிருப்பதால் காவலாளர் பேப்பரைக் கொண்டு கொடுத்துவிட்டுச் சென்றார். அவரிடம் காபிப் பொடி வாங்கி வரச் சொல்லிக் கேட்டிருக்கோம். நாங்க யாருமே வெளியே போக முடியாதே! :( அதோடு காபிப் பொடிக்கடைகள் வேறே ஒரு வாரமாக மூடிக் கிடக்கின்றனவாம். :( கான்டினென்டல் காபி குடித்துக்கொண்டே இதை எழுதுகிறேன். வரேன், இப்போக் கடமை அழைக்க ஆரம்பித்துவிடும்.

நான் பேனாவில் சில, பல விண்ணப்பங்கள், கடிதங்கள் என எழுதுகிறேன். ஆனால் மை போடும் பேனா அல்ல. பால்பாயின்ட் (தமிழில் என்ன?) பேனாதான். இதைத் தவிர்த்து என்னோட மருந்துகளை வாங்குகையில், மளிகைக்கடைக்குப் போட்டும் பட்டியல்கள் எனப் பேனாவின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.


பானுமதி வெங்கடேஸ்வரன் :  

கணக்கு எழுதுவது பேனாவால்தான். இங்க் பேனாவைத் தொட்டு எத்தனையோ காலங்கள் ஆகி விட்டது. யூனிபால் பென்னால்  எழுதுவது மிகவும் பிடிக்கும். 

================================================

5 கருத்துகள்:

  1. பின்னூட்டங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.
    வெளி உலகத்தைப் பார்க்க முடியாது. காலை வாசல் தெளித்து கோலம் போடும் போதும் யாரையும் பார்க்க முடியாது. இன்று பின் வாசலை திறந்து (காலை 4 மணி) வானத்தைப்பார்த்தேன் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டு இருந்தன. குயில்கள் கூவி கொண்டு இருந்தன. இரண்டு பேர் அதிகாலையில் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். வாட்ச்மேன் நாலுமணிக்கு ஒரு விசில் சத்தம் கொடுப்பார் அப்புறம் சுவற்றில் தட்டுவார். அவர் பணியை அவர் செவ்வனே செய்து போய் கொண்டு இருந்தார்.

    வழக்கம் போல் இடது பக்கம் அய்யனார் கோவில் பக்கம் பார்த்து ஒரு கும்பிடு, வலது பக்கம் அழகர் மலை இருக்கும் திசைப் பார்த்து ஒரு கும்பிடு.

    வழக்கம் போல் தியானம், உடர்பயிற்சிகள் செய்து காலை படிக்கும் புத்தகங்களை படித்தேன் (ஸ்ரீ சாயி சரிதம், திருக்குறள், வாழ்க்கை மலர்களில் நாள் ஒரு சிந்தனை மற்றும் ஸ்ரீஅரவிந்தரின் அன்னையின் மந்திர மலர்கள், ஆக்கபூர்வமான சிந்தனகள்- ராமகிருஷ்ணமடம் வெளியீடு படிப்பது உண்டு) ரேடியோ பக்தி பாடல்கள் பாடி கொண்டு இருப்பதையும் கேட்டுக் கொண்டு இருப்பேன்.

    அப்புறம் வாடஸ் அப் காலை வணக்கம் சொன்னவர்களை பார்ப்பேன். இன்று வல்லி அக்கா சாட்டில் பேசினார்கள்.

    வழக்கம் போல் காலை பொழுது வேலைகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்று காஃபிப் பொடி கிடைத்தது. நம்மவரின் அத்தான் திருவானைக்காவில் இருக்கார். அவர் வாடிக்கையாக வாங்கும் காபிப் பொடிக்காரரிடம் சொல்லிவைத்து இன்று கொண்டு கொடுத்துவிட்டுப் போனார். இனி தான் அந்தக் காபி போட்டுக் குடிக்கணும். இங்கே என்னுடைய கருத்துகளையும் இணைத்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு