வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மாலினி 3


இது, நேற்றைய பதிவாகிய மாலினி 2 ன் தொடர்ச்சி.


(மாலினி அவனை உதறித் தள்ளிய சில நாட்களில் .... )

அவனுடைய அம்மா அவனிடம்," ஏம்ப்பா,இத்தனை நாளா செட்டில் ஆகணும்னு சொல்லிட்டிருந்த, இப்போதான், நிரந்தரமா வேலை கிடைச்சிடுச்சு, எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?"

"பண்ணிக்கலாம்மா, பொண்ணு கிடைக்க வேண்டாமா?"

"தேடினாதானே கிடைக்கும். மேட்ரிமோனியல் சைட்டில் ரிஜிஸ்டர் பண்ணலாமா?"

"உம்.." என்று சம்மதம் கொடுத்தான். அம்மாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக பார்த்துக் கொண்டனர்.

"உனக்கு யார் மேலாவது இஷ்டம்னா சொல்லு, எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்ல.." அப்பா கூற, அம்மா ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.

"இல்லப்பா, அப்படி எல்லாம் யாரும் இல்ல.." மனசுக்குளோ மாலினிக்கு தலை முழுகி விட்டதாய் நினைத்தான்.

***
அப்போதுதான் அந்தக் கிழவர், 'பெண் பாவம் பொல்லாது' என்கிறார். என்ன பாவம்? அது பாவம் என்றால் அதற்கு அவள் முழு மனதோடு ஒத்துழைத்தாள். நான் ஒன்றும் பொய்யாக உன்னைக் கை விட மாட்டேன் என்று சத்தியமெல்லாம் செய்யவில்லை. கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்கு இத்தனை ரோஷமா? இவ்வளவு சென்சிட்டிவாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவது கஷ்டம். அதனால்தான் அப்பா,அம்மா பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு விடலாம் என்னும் முடிவுக்கு வந்தான். இந்தக்கிழவரானால் குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

அன்று வீடு திரும்பியதும், அப்பா அவனிடம்,"நான் சில ப்ரோஃபய்ல்ஸ் செலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன். பார்த்துவிட்டு சொல்" என்றார்.

பார்த்தான். ஊஹூம் - யாருமே மாலினி அளவுக்கு அவனைக் கவரவில்லை!

"என்ன ஏதாவது உனக்கு பிடிச்சிருக்கா?"

"இதுல எதுவும் பிடிக்கல."

அப்பா அவனைக் கூர்ந்து பார்த்தார். "இதுல பிடிக்கலைன்னா? வேற யாரையாவது பிடிச்சிருக்கா?"

"அப்பா .....  அது வந்து, மாலினினு ஒரு பொண்ணு.." அவன் மாலினியைப் பற்றி கூறியதை முழுமையாக கேட்டுக் கொண்டார்.

"அந்தப் பொண்ணுதானே இப்போ லேட்டஸ்டா பாலகுமார் டைரக்ஷனில் நடிச்சிருக்கா?"

"ஆமாம்.."

"நீலச்சட்டை கூட அவளோடு நடிப்பை பாராட்டியிருக்கானே.."

"அப்படியா? நான் இன்னும் நீலச்சட்டையோட ரெவ்யூ பார்க்கல.."

"எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல. உங்கம்மா ஒத்துக்கணும்."

சற்று நேரம் யோசித்தவர், "ஒண்ணு பண்ணலாம், நாளைக்கு கார்த்தால, இந்த டாபிக்கை உங்க அம்மாக்கு எதித்தாற்போல் ஓபன் பண்ணலாம்" என்றார். 

================

மறுநாள் காலை சிற்றுண்டி சாப்பிடும் பொழுது, " யாராவது பொண்ணு வீட்டுக்காரங்க போன் பண்ணினாங்களா சித்ரா?" என்று அம்மாவிடம் கேட்க, "இல்லையே, யாரு பண்றாங்க? நாம் போன் பண்ணினாலும் நோ ரெஸ்பான்ஸ்"

உடனே அவன் பக்கம் திரும்பி," ஏண்டா? நீயோ மீடியாவில் இருக்க,அங்க எத்தனை பொண்ணுங்களை பார்ப்பாய்? ஒருத்தரைக் கூடவா உனக்கு பிடிக்கல?"
         
" எனக்கு பிடிச்சிருந்தா மட்டும்... ,உடனே கல்யாணம் பண்ணிக்க ஓகே னு சொல்லிடுவீங்களா?"
             
"உன் பையன் என்னவோ கேட்கறான் பாரு, பதில் சொல்லு.." அம்மாவிடம் பந்தை எறிய,

"என்ன, ரெண்டு பெரும் ஏதாவது பேசி வெச்சுண்டு, கேட்கறீங்களா? என்ன விஷயம்?"(கண்டுபிடித்து விட்டாளே கிராதகி!)

"சே! சே! அப்படியெல்லாம் இல்ல,இந்த விஷயத்துல உன் அபிப்பிராயம் என்னனு தெரிஞ்சுக்கலாமேனுதான்"

"இதுல என் அபிப்ராயத்துக்கு என்ன இருக்கு? ஒரு பொண்ணோட பழகி, அவ மனசுல ஆசையை விதைச்சுட்டு, அப்புறம் மாறுவது தப்பில்லையா? பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்.."
                   
அம்மா இத்தனை சுலபமாக இதை ஒப்புக்கொண்டு விடுவாள் என்று அப்பா, பிள்ளை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அம்மா கோடு போட்டு விட்டாள், இனி ரோடு போடுவது கடினம் இல்லை.

ஆனால் வெங்கட் பிரபுவிற்கு ஒரே ஒரு பிரச்சனைதான் இப்போது. அம்மா சம்மதித்து விட்டாள். கோபித்துக் கொண்டிருக்கும் மாலினியை எப்படி சமாதானப்படுத்துவது? சினிமாவாக இருந்தால் ஒரு பாட்டில் சமாதானப்படுத்தி விடலாம், உங்களில் யாருக்காவது வழி தெரிந்தால் அவனுக்கு உதவுங்களேன், புண்ணியமாய்ப் போகும்.


(முற்றும்) 

அடக்கடவுளே! இவங்க இன்னும் ஒரு கொக்கியை மாட்டிவிட்டுட்டாங்களே !  பார்ப்போம் யாராவது வெங்கட் பிரபுவுக்கு மாலினியை சமாதானப்படுத்த வழி சொல்கிறார்களா என்று! 

              

11 கருத்துகள்:

  1. வெ பி அவளிடம் நேரே சென்று சாரி என்று சொல்லி மனதார மன்னிப்பு கேட்டு நம்பிக்கை பெற வேண்டும்...இல்லையேல் கஷ்டம் தான்...பொறுமை காக்க வேண்டும் அவள் மனம் சமாதானம் ஆகும் வரை.....பெற்றோரையும் பேச சொல்லலாம்..

    காதலில் இதெல்லாம் சகஜமப்பா..ஹாஹா..

    சரி முதலில் அவள் அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமோ...

    அக்கா முடிவு பிடிச்சிருக்கு....டக்குனு மாங்கல்யம் தந்துநானே ன்னு சொல்லாம...முடிச்சது. யதார்த்தம்...
    கீதா

    பதிலளிநீக்கு
  2. "//இதுல என் அபிப்ராயத்துக்கு என்ன இருக்கு? ஒரு பொண்ணோட பழகி, அவ மனசுல ஆசையை விதைச்சுட்டு, அப்புறம் மாறுவது தப்பில்லையா? பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்.."//

    தாயின் சொல்படி மாலினியை கல்யாணம் செய்து கொள்ள ஒரே வழி மாலினியிடம் மன்னிப்பு கேட்டு அன்பான வார்த்தைகளால் சமாதானம் செய்து மணந்து கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... இவஙக்ளும் ஒரு கொக்கியோட முடித்து விட்டார்களே!

    சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக் காரன் காலில் விழுவது தானே நல்லது! :)

    பதிலளிநீக்கு
  4. மாலினியை உடனே கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான் வெங்கட் பிரபு. மாலினி சந்தோஷத்தில் குதிப்பாள் என எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் அலட்சியமாக அப்படியா எனக் கேட்டுவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டாள். திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான் வெங்கட் பிரபு. அப்போது அவனுக்குத் தான் சமீபத்தில் பார்த்த பச்சைச்சட்டைப் பெண் நினைவுக்கு வர அவளைப் பிடிக்க வேண்டியது தான். அவள் மாலினியை விட எதில் குறைந்துவிட்டாள். சினிமாவுக்கு இன்னும் வரவில்லை என்பதால் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வருவாள் என நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்கக் கிளம்பினான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! நீங்க ஒருத்தராவது பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணை ஞாபகம் வச்சுருக்கீங்களே!

      நீக்கு
    2. அது சரி, அந்தப் பெண் ஒத்துக்கொண்டாளா, கல்யாணம் ஆச்சானே தெரியலையே? அதை யார் எழுதுவாங்க? :)))))))

      நீக்கு
    3. //அப்போது அவனுக்குத் தான் சமீபத்தில் பார்த்த பச்சைச்சட்டைப் பெண் நினைவுக்கு வர அவளைப் பிடிக்க வேண்டியது தான்.// இல்லையில்லை இப்படி எழுதினால், வெங்கட் ப்ரபுவின் பாத்திரம் பழுது பட்டுவிடும். அவனை அப்படி மோசமாகவா நான் சித்தரித்திருக்கிறேன்? அவனுக்கு மாலினி மேல் நிஜமான காதல் இருக்கிறது. அவளை விட்டு விலகலாம் என்று ஏன் முடிவு செய்தான் என்பது ஃப்லாஷ் பேக். அது சரியாக சொல்லப்படவைல்லையோ?

      நீக்கு
  5. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை சிறுகதை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    எங்கள் தளத்தில் தங்களது பதிவு: மாலினி 3

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து வாசித்து கருத்துரையிட்ட வெங்கட், கீதா ரெங்கன், கீதா அக்கா, கோமதி அரசு இவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மாலினியை எப்படி சமாதானப்படுத்துவது? ... ம்ம்ம் ... அதுதான் எனக்கும் ஒரே யோசனையா இருக்கு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு