குறிப்பு.: இந்தப்பதிவு முதலில் வெளியாகிய தினம் : 12.06.2012. இது மீள் பதிவு.
அசோக் லேலண்டில் அடியேன் பணிபுரிந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் , சற்றேறக் குறைய, பதினாறு ஆண்டுகள் என்னுடைய பாஸ் ஆக இருந்தவர் திரு பி அப்பலராஜு அவர்கள்.
அவர், (11-06-2012 திங்கட்கிழமையன்று ) சென்னை வேளச்சேரியில், காலமானார் என்னும் துயரச் செய்தியை, என்னுடைய நண்பர் தேவதாஸ் அலைபேசியில் அழைத்து, சொன்னார். திரு அப்பலராஜு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவருடைய மேலதிகாரிகள் இட்ட பணிகள் எதையும் மிகுந்த ஈடுபாட்டுடன், செய்து முடிப்பார். நான், அவருடைய குழுவில் பல கடினமான பிராஜக்டுகள் செய்ததுண்டு. அது பற்றிய விவரங்கள் பிறிதொரு சமயம் எழுதுகின்றேன்.
அவர் அசோக் லேலண்டில், DGM - Quality Control பதவியில் இருந்து, இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பல மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில், பெரிய பதவிகள் வகித்தார். ஆசான் மேனேஜ்மெண்ட் கல்லூரி டீன் ஆக இருந்தார் என்று இணையம் விவரம் தருகின்றது.
அவருடைய ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கௌதமன்.
12/06/2012.
(மீள் பதிவு)
மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம்
நீக்குஅவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆசானின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇப்படியான உண்மையிலேயே பெரிய மனம் படைத்த பெரிய மனிதர்களை நம்மால் எப்போதும் மறக்க முடியாது!
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குகௌ அண்ணா தவறாக நினைக்க வேண்டாம்..வெரி வெரி சாரி...நான் மீள் பதிவு என்ற எண்ணத்தில் பின்னர் வந்து வாசித்து கருத்து சொல்லலாம் என்று போய்விட்டேன் இபப்த்தான் டிடி சொன்னதிலிருந்து அறிந்தேன் வெரி சாரி அண்ணா..இது டெம்ப்ளேட் கமென்டும் அல்ல நான் வந்ததும் அடிக்கும் கமென்ட்...
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள் கௌ அண்ணா..
கீதா
இப்போதுதான் பதிவு முழுவதையும் வாசித்தேன் அண்ணா. அங்கு திங்கவில் பதில் கொடுக்கனுமா இருந்துச்சு, எங்க தளத்துலயும் பதில் ஸோ மெதுவா வந்தேன்..
நீக்குஸாரி எகெய்ன் அண்ணா. நான் எப்போதுமே மெதுவா வந்தாலும் கூட பதிவு முழுவதும் வாசித்து கோட் செய்து கமென்ட் போடுபவள். இன்று காலையில் வேலை மும்முரத்தில் ஓடிப் போய்ட்டு அதுவும் 2012 ல் என்று நினைத்து மீள் பதிவு என்பது மனதில் பதிய....தலைப்பைப் பார்த்து விட்டு போய்ட்டேன்...
மீண்டும் மீண்டும் சாரி அண்ணா..
மிக நல்ல மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அதனால் தான் அவரது வாழ்வில் உயர்வுகளும்.!!
கீதா
ஆமாம்.
நீக்குகவலை வேண்டாம்.
நீக்கு//பதினாறு ஆண்டுகள் என்னுடைய பாஸ் ஆக இருந்தவர் திரு பி அப்பலராஜு அவர்கள்.//
பதிலளிநீக்குநல்ல மனிதரும், தங்களின் குருவான திரு. அப்பலராஜூ அவர்களின் மறைவு வேதனை தந்து இருக்கும். பணி முடிந்த பின்னும் நிறைய பணிகள் ஆற்றி இருக்கிறார் என்று படித்த போது அவரின் திறமை தெரிகிறது.