திங்கள், 11 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.



டிசம்பர் இரண்டாம் தேதி, ஆண்டு 1971. அவர்கள் கேட்டிருந்தபடி, எல்லா சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு, என்னுடைய எக்ஸ்-ரே யை, ஒரு புதிய மஞ்சள் நிற காகித கவரில் போட்டு, ரிப்போர்ட் இருந்த கவரை வீட்டிலேயே விட்டு, கிளம்பினேன்.




மருத்துவப் பரிசோதனைக்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர். கௌதமன், பாஸ்கர், அனந்தராமன், விஸ்வநாதம் (ஆமாம் - தம் தான்) ஷ்யாம் சுந்தர் ரெட்டி - என்று ஞாபகம். ஐந்தாவது நபர் சரியாக ஞாபகம் இல்லை.




எல்லோரையும் மருத்துவ மையம் வாசலில் நிறுத்தி, எக்ஸ் ரே மற்றும் வாக்சினேஷன் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பெயர்கள் எழுதிக் கொண்டு, உள்ளே ஒரு அறையில் சென்று அமரச் சொன்னார்கள். அனைவரும் உள்ளாடை மட்டும் அணிந்து, ஒரு வெள்ளை நிற பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டோம்.

ஒரு மணி நேரம் இப்படி சங்கோஜமான நிலைமை. அவ்வப்போது கையில் / காலில் அடிபட்டு, டிஞ்சர் போட்டுக் கொள்ள வந்த இரண்டொரு தொழிலாளர்கள், அதிசயமாக எங்களைப் பார்த்து, அருகில் இருந்த கம்பவுண்டரிடம், 'யாரு இவங்க எல்லாம்? ஏதேனும் திருடிட்டு செக்யூரிடி அலாரம்ல மாட்டிகிட்டான்களா?' என்று ரகசியமாகக் கேட்டார்கள். கம்பவுண்டர், அவர்களிடம், 'இல்லைபா, சூப்பர்வைசர் ட்ரைனிங் கு புதுசா சேர வந்திருக்கின்ற ஆளுங்க.அவங்களுக்கு மெடிக்கல் எக்சாமினேஷன்'' என்றார்.

ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன். எடை பார்த்தவர், "வரும்பொழுது நிறைய வாழைப் பழம் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதா? வெயிட் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்குமே " என்று கேட்டார். 'முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா' என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு ஆளுக்கு ஒரு சோதனைக் குழாயைக் கையில் கொடுத்து அந்தப்புரத்திற்கு அனுப்பினார்கள். 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று மனதினுள் பாடியபடி சென்றேன்.


பிறகு நடந்தது என்ன என்றால் ...




அட! பதிவுல சென்சார் புகுந்து சில பகுதிகளை கட் செய்துவிட்டார்கள்!


டாக்டரை சந்திக்க ஒவ்வொருவரும் தனித் தனியே அழைக்கப்பட்டார்கள் (ஆமாம், ஆமாம் உள்ளாடை மட்டும்தான் - இப்பவும்) ஒவ்வொருவருக்கும் பத்து முதல், பதினைந்து நிமிடங்கள் ஆயின. என்னுடைய முறை வந்ததும், அறையினுள் சென்றேன்.


டாக்டர் வயதானவர். உயரமாக, புன்னகை தவழும் முகத்தோடு, வழுக்கைத் தலையுடன், வெள்ளைக் கோட்டு, வெள்ளை பாண்ட் அணிந்து, பருமனான மனிதராக இருந்தார். (பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்! ) என்னை நூறு சதவிகிதம் தேகப் பரிசோதனை செய்த பின், என்னுடைய எக்ஸ்-ரேயை அங்கிருந்த ஒளி பொருந்திய ஸ்டாண்டில் மாட்டினார். எக்ஸ்-ரே யை சில வினாடிகள் உற்றுப் பார்த்தார்.


பக்கத்து அறையில் இருந்த அவருடைய உதவியாளரை, சத்தமாக அழைத்தார். (உதவியாளர் பெயர் ஞாபகம் இல்லை). என்னுடைய சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின.


டாக்டர், 'ஹியர் இஸ் எ கேஸ் ஆப் அக்யூட் பிராங்கிடிஸ் விச் மே டெவலப் இண்டு எ சீரியஸ் அண்ட் மாலினன்ட் ஒன் அண்டர் அனட்டென்டட் சர்க்கம்ஸ்டான்சஸ் ....' என்று சொல்லி, உதவியாளர் உதவியோடு, என்னை ஆம்புலன்சில் ஏற்றி, சென்னைப் பொது மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டு விடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது, எனக்கு.




உதவியாளர் வந்தார் .....


மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்.

21 கருத்துகள்:

  1. (ஆமாம் - தம் தான்)//

    ஆ ஆ ஆ இது ஏதோ அர்த்தமா இருக்கே!! ஹா ஹா ஹா ஹா ஹா

    காலை வணக்கம் கௌ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அப்படி உட்கார வைத்தது சங்கடமான நிலையாகத்தான் இருந்திருக்கும்...ஏன் அப்படி ஒரு தனி ரூமில் சட்டென்று முடித்து ஒவ்வொருவரையா அனுப்பியிருக்கலாம்...

    //'யாரு இவங்க எல்லாம்? ஏதேனும் திருடிட்டு செக்யூரிடி அலாரம்ல மாட்டிகிட்டான்களா?//

    இதென்ன போலீஸ் ஸ்டேஷனா இப்படி வைக்க என்று மனதில் தோன்றியது...அடுத்து நீங்களே சொல்லிட்டீங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! அப்போ சங்கடமா இருந்தது. இப்போ நெனச்சா சிரிப்பா வருது!

      நீக்கு
  3. 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று மனதினுள் பாடியபடி சென்றேன்.//

    பதிவுல சென்சார்// ஹா ஹா ஹா ஹா ஹா

    வாழைப்பழம் சாப்பிட்டா உடனே வெயிட் ஏறிடுமா?!!

    இதென்னா இப்படி எவ்வளவு நேரம் அபப்டியே இருந்திருக்கீங்க டூஊஊஊஊஒ மச்..னே தோனிச்சு...

    சென்ஸார் போட்டதை விட கடைசில இந்தக் கட் தான் என்னாவாயிருக்கும்னு சஸ்பென்ஸ்!! நாளை வரை குடையும் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஹாஹா.... செம அனுபவம்.

    எங்கள் கல்லூரி காலத்தில் எல்லா மாணவர்களையும் இப்படி மெடிக்கல் செக் அப் செய்யும்போது இதே கோலம் தான் எங்களுக்கும்! :)

    சரியான இடத்தில் தொடரும்! :) அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்!

    பதிலளிநீக்கு
  5. மருத்துவப் பரிசோதனையின் ஆரம்பமே அபாய சங்காக இருக்கிறதே...

    கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் எல்லோருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தபோது, எல்லாவற்றையும் கழற்றச் சொன்னது நினைவுக்கு வருது. அப்போ ரொம்பக் கூச்சம்.

    அப்புறம், சில வருடங்களுக்கு முன்பு, தாய்லாந்தின் ஒரு ரிசார்டில், எல்லா நாட்டுக் காரர்களோடும் கான்ஃபரன்ஸுக்குப் போயிருந்தபோது, சுற்றுப் பயணத்தின் இடையில், ஒரு கோஃல்ஃப் ரிசார்டுக்குப் போய் (அது 5*) நிறைய ஆண்கள் குளிக்கச் சென்றோம். நிறைய நாட்டுக்காரர்கள் (கொரியன், ஜப்பான்...), டபக் என்று டிரெஸ் இல்லாமல் கேஷுவலாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வித்தியாசமான கல்சரைச் சந்திக்கும்போது மனது திடுக் என்றாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  6. //ஹியர் இஸ் எ கேஸ் ஆப் அக்யூட் பிராங்கிடிஸ் விச் மே டெவலப் இண்டு எ சீரியஸ் அண்ட் மாலினன்ட் ஒன் அண்டர் அனட்டென்டட் சர்க்கம்ஸ்டான்சஸ்//

    அடக்கடவுளே!
    அப்புறம் என்னாச்சு ? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என் கற்பனைதான்! எந்த டாக்டரும் எக்ஸ்ரேயைப் பார்த்து ஒன்றும் சொல்ல முடியாது. அதுவும் கம்பெனி டாக்டர்களிடம் எந்த உபகரணமும் , வசதியும் இருக்காது!

      நீக்கு
  7. அன்றைய சங்கடமான நிகழ்வுகள் இன்று நகைப்புக்குறியதாக மாறிவிடும்.

    தொடர்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
  8. விஸ்வநாதம் என்னும் பெயரா? அப்படி எனில் ஆந்திராக்காரரோ? அல்லது எனக்குத் தெரிந்த விஸ்வநாதனா? :))))) அவரும் கிட்டத்தட்ட அப்போத் தான் சேர்ந்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் அப்போ வெயிட் ரொம்பக் குறைச்சல். அதை நினைச்சு இப்போ சந்தோஷப்பட்டுக்கறதோடு சரி! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவின் மாயா லோகத்திலே ...... கண்ணை மூடி சந்தோஷப்படுங்கள்!

      நீக்கு