திங்கள், 18 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 18:: பேருந்து நாட்கள்.


\
அசோக் லேலண்டில் பயிற்சி பெற்ற ஆரம்ப நாட்களில், நான் ஒரு பேருந்துப் பயணியாகத்தான் இருந்தேன்.

பாக்டரி வேலை நேரம், காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரையில்.



காலையில் நாலே முக்கால் மணிக்கு எழுந்து, ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுக் கிளம்பி, ஐந்து நாற்பதுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் பேருந்து நிறுத்தத்தில், மதார் ஷா கடை வாயிலில், வந்து நின்று கொள்வேன்.


தங்கசாலை செல்லுகின்ற பேருந்துக்காக காத்திருப்பேன். தடம் எண் பதினான்கு, முப்பத்தேழு ஆகியவை தங்கசாலை செல்லுகின்ற வண்டிகள் என்று ஞாபகம். அந்தக் காலத்தில், புரசைவாக்கத்திலிருந்து, தங்கசாலை வரையிலும் பதினைந்து பைசா டிக்கெட் கட்டணம்.. காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்காது. நிச்சயம் உட்கார இடம் இருக்கும்.



ஆறு மணிக்குள், தங்கசாலை பேருந்து நிலையம். அங்கேயிருந்து 56A பேருந்தைப் பிடித்து, ஆறு நாற்பது சுமாருக்கு எண்ணூர் அசோக் லேலண்டு வாசலில் இறங்கிவிடுவேன். தங்கசாலையிலிருந்து, அசோக் லேலண்டு வாசல் வரை அம்பத்தஞ்சு பைசா டிக்கெட். இந்த வழித் தடத்தில், சில மாதங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கூட எடுத்து, பயணம் செய்தேன். பேருந்து எதிலும் காலை நேரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்வேன்.ஏன் பேருந்துகளில் உட்காருவதைப் பற்றி பிரஸ்தாபித்து எழுதுகிறேன் என்பதைக் கூறுகின்றேன்.




பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகின்ற பையன், 'ஐ ஃபர்ஸ்ட்' என்று எல்லோரிடமும் பீற்றிக் கொள்வது போல, பல நாட்கள், பாக்டரி கான்டீனுக்குள், முதல் ஆளாக நுழைந்த பெருமை என்னையே சேரும்.



காண்டீனுக்கு, கவுண்ட்டர்களுக்கு சுடச் சுட வருகின்ற அன்றைய தின சிற்றுண்டியை, கூப்பன் கொடுத்து வாங்கி, தட்டில் ஏந்தி, காண்டீன் பெஞ்சுல அமர்ந்து, மேஜை மீது வைத்து, மின் விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்தாலும், 'உப் ... உப்ப்ப் ' என்று வாயால் ஊதி, சூடாற்றி, சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.


சிற்றுண்டி மணமும், தேநீர் மணமும் கலந்து, காண்டீன் மணம் அலாதியாக இருக்கும். காலை சிற்றுண்டி நேரம், மதிய நேரத்தில், உணவு உண்ணும் பொழுதும் மட்டும்தான் எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கும். அப்ரெண்டிஸ் நாட்களில், பாக்டரி உள்ளே, எங்களுக்கு உட்கார இடம் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் பயிற்சி. எல்லா இடத்திலும் நிற்க மட்டும்தான் அனுமதி. உட்காருவதற்கு இடம் கிடையாது என்பதும் உண்மை. நேரடி உற்பத்தி இல்லாத பகுதிகளுக்கு பயிற்சிக்கு சென்றால், உட்காருவதற்கு ஒரு ஸ்டூல் கிடைக்கும். (அதற்கு அந்தப் பகுதி நண்பர் யாரும் உரிமை கோராத வரை!)


பயிற்சி பெறுகின்ற கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் அவர்களுக்கு ஒரு ரகசிய இடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். மதிய நேர உணவுக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் அரட்டை அடிக்க! மேலும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்களை யாரும் அதிகமாக நெருங்கமாட்டார்கள். நாளைக்கு அதிலிருந்து ஒருவர் தமக்கு பாஸ் ஆக வருவதற்கு, சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதால். அதுமட்டும் அல்ல, கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் பயிற்சி முடிந்ததுமே எக்சிகியூடிவ் ஆகிவிடுவார்கள். நாங்கள் கன்ஃபர்ம் ஆகும் பொழுது, யூனியன் கேடர் ஆட்களாக ஆவோம். பாதிக்கப்பட்ட இனமாக இருந்தவர்கள், எங்களைப் போன்ற எஞ்சினீரிங் அப்ரெண்டிஸ்கள்தான்!



நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? பிறகு பார்ப்போம்.
 

18 கருத்துகள்:

  1. வணக்கம் கௌ அண்ணா..

    //'ஐ ஃபர்ஸ்ட்' // ஹா ஹா ஹா ஹா இப்ப நம்ம பூஸார் இப்படித்தானே சொல்லிக் கொண்டு குதிப்பார்!! (அவர் ஸ்கூல் ரீச்சராச்சே!!!!)

    //பல நாட்கள், பாக்டரி கான்டீனுக்குள், முதல் ஆளாக நுழைந்த பெருமை என்னையே சேரும்.//

    ஹா ஹா ஹா மீ ஃபர்ஸ்டூஊஊஊஊஉ நு சொல்லிக்கிட்டே போனீங்களோ?!! பின்ன பந்திக்கு முந்திக்கணுமாக்கும்....!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். //

    இதை வாசிக்கும் போதே ஆஹா வசமா மாட்டிக்கப் போறாங்க நு நினைச்சேன் அடுத்த லைன்ல சொல்லிட்டீங்க...

    கிராஜுவேட் அப்ரெண்டீஸ்கள் தனியா?....கிராஜுவேட் அப்ரெண்டிஸ்னா பிஇ படிச்சவங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஐ டி ஐ = டிரேட் அப்ரெண்டிஸ் ; டிப்ளமா = எஞ்சினீரிங் அ, டிகிரி = கி அ.

      நீக்கு
  3. பேருந்து அனுபவங்கள் - ஸ்வாரஸ்யம்.

    ஆஹா மாட்டிக் கொண்டீர்களா... அந்த அனுபவம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க ! நான் மாட்டிக்கொன்டதில் இவருக்கு இவ்வளவு சந்தோஷம்!

      நீக்கு
  4. காண்டீன் அனுபவம் சூப்பர்.

    //நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? பிறகு பார்ப்போம்.//

    எப்படி மாட்டிக் கொண்டீர்கள் என்று அறிய ஆவல், என்று தொடர்கிறேன் பதிவை.

    பதிலளிநீக்கு
  5. பேருந்து பயணமும் காண்டீனும் சுவை. ஆமாம் இது கம்பெனி காண்டீனா? விலையை இதற்கு முன்பே குறிப்பிட்டிருந்தீர்களோ?

    பதிலளிநீக்கு
  6. நானும் அப்ரெண்டிஸ் ஆக கற்றுக் கொண்டது தான் அதிகம்...

    பதிலளிநீக்கு
  7. பயிற்சி நாட்கள் நினைத்துமகிழ உதவும் அடிப்படைஸ்ராங்காக இருந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும் லேலண்ட் பஸ் ஸ்டியரிங்கில் உங்கள்பெயர் சொல்லும் விதமாக உங்கள் கண்டு பிடிப்பு ஏதோ பொருத்தி இருப்பதாகமுன்பு படித்தநினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அது பற்றி வரும். நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு!

      நீக்கு
  8. கான்டீன் நினைவுகள் அருமை. அது சரி, ஒரு புதன்கிழமைக்கேள்வியை இங்கே கேட்கலாமா? நீங்க சாப்பிட்டவற்றுக்குள் அசோக் லேலான்ட் கான்டீன் சாப்பாடு நல்லா இருக்குமா? இல்லைனா வீட்டுச் சாப்பாடா? வீட்டிற்கு வந்து ராத்திரி சாப்பிடுவீங்களா? அப்போ கான்டீன் சாப்பாடு நினைவு வரும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  9. அரட்டையில் மாட்டிக்கொண்ட விதம் அறிய ஆவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க ! நான் மாட்டிக்கொன்டது பற்றி அறிய இவருக்கு இவ்வளவு ஆவல்!

      நீக்கு