வெள்ளி, 8 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூ.


நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.




இண்டர்வியூ செய்தவர்கள் மூன்று பேர். அவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துள்ளேன். ஆனாலும், அவர்களை, வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றேன். அவர்களைத் தெரிந்தவர்கள், பலர் இருக்கின்றார்கள் என்பதால். அவர்களின் புனைபெயர்கள், நந்தா, சென், சாரி என்று வைத்துக் கொள்கிறேன். நந்தா - பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர். சென் - இஞ்சினீரிங் பிரிவின் அதிகாரி, சாரி - இயந்திரப் பிரிவின் அதிகாரி. (இந்தத் தகவல்கள், இன்டர்வியூவின் பொழுது எனக்குத் தெரியாது, அப்ரெண்டிஸ் ஆக சேர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன்.)

======================

நந்தா: "வாப்பா, உட்கார். உன் பெயர் என்ன?"

நான்: "நன்றி சார். (உட்கார்ந்துகொண்டு) என் பெயர் கே ஜி கௌதமன்."

நந்தா: "உன் பெயரில் உள்ள கே எதைக் குறிக்கின்றது? கான்பூரிலிருந்து வருகின்றாயா? "

நான்: "இல்லை சார்! என் பெயரில் உள்ள கே, என்னுடைய சொந்த ஊராகிய கல்யாணமகாதேவியைக் குறிக்கின்றது. "

நந்தா: "ஜி?"

நான்: "என் அப்பா பெயராகிய, கோபாலனைக் குறிக்கின்றது."

நந்தா: "அப்புறம்?"

நான்: "மீதியுள்ள கௌதமன் என் சொந்தப் பெயர்! "

சாரி: "உங்கள் சர்டிபிகேட்டுகளை இப்படிக் கொடுங்கள். "

கொடுத்தேன்.

என்னுடைய ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளை நந்தா பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில்,

சென் : "டிப்ளமோ பாஸ் செய்ததிலிருந்து இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தாய்?"

நான்: "சும்மாதான் இருந்தேன் சார்!"

சென்: "ஆர் கே டிப்பார்ட்மெண்ட் வேலையா?"

நான்: "அப்படி என்றால்?"

சென்: "ரைஸ் கில்லிங் டிப்பார்ட்மெண்ட் வேலையா ...!!!"

வாய் விட்டுச் சிரித்தேன். என் சிரிப்பில் மற்றவர்களும் கலந்துகொண்டார்கள். (காம்பெடிஷன் சக்சஸ் ரிவ்யூ புத்தகத்தில், அன்றைய தேதி வரை ஐ ஏ எஸ் இண்டர்வியூக்கள் பற்றி, பல கட்டுரைகள் படித்திருந்தேன். நேர் காணலில் அவர்கள் சொல்லாமல் நாம் உட்காரக் கூடாது என்பதில் ஆரம்பித்து, தொட்டால் சுணங்கியாக இருக்கக் கூடாது, இண்டர்வியூ செய்பவருடன் விவாதம் / வீண்வாதம் செய்யக் கூடாது, தெரியாதவற்றை, தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று பல உபயோககரமான தகவல்கள் அந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து வைத்திருந்தேன்.)


சாரி, சென் இருவரும்: "அட! எழுபத்தொரு சதவிகித மார்க்குகளா! சரி, நீ இந்த மார்க்குகளுக்குத் தகுதி உடையவன்தானா என்று சோதித்துப் பார்த்துவிடுகின்றோம்!"

நான்: சிரித்தபடி, "ஷ்யூர் சார்!"

சாரி: "நாங்கள் உன்னை, எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்கலாம்?"

நான்: "மெக்கானிக்கல் இஞ்சினீரிங் ..."

சாரி, சென் இருவரும்: "அது மிக மிக பெரிய ஏரியா - வேறு ஏதாவது அதிலிருந்து சிறிய பகுதி - உன்னுடைய ஸ்பெஷல் ஏரியா ஏதாவது கூறு?"

நான்: "என்னை நீங்கள், என்னுடைய தேர்வு (எலெக்டிவ் ) சப்ஜெக்ட் ஆகிய மெஷின்ஷாப் டெக்னாலஜியில் கேள்விகள் கேட்கலாம்!"

சாரி: "ஓ அப்படியா? What is the formula for Tool life?"

Me: "V * T whole power n = C (constant)."

Chari: "What is V, what is T?"

Me: " V is the cutting speed, T is the tool life, n and C are constants found by experiments depending upon the tool material, work piece and feed rate."

Chari: "Very good. Can you draw the sketch of centre-less grinder?"

Me: "Internal or external sir?"

Chari: "Again, very good!. Draw external centre-less grinder."

Me: "I can draw only a schematic diagram - a rough sketch"

Chari: "That is enough for us." என்று சொல்லி, ஒரு பென்சிலையும், நோட்டுப் புத்தகத்தையும் என் கைகளில் கொடுத்தார்.

நான் கீழ்க் கண்டது போல ஒரு படம் வரைந்தேன்.


சாரி: "எல்லாம் சரி, ஆனால், வொர்க் சப்போர்ட் சரியில்லை. வொர்க் பீஸ் முனையில் வி ஷேப் இருக்கவேண்டும்."

நான்: "ஆம். நீங்கள் சொல்வதுதான் சரி."

சாரி: "அதனால் என்ன - பரவாயில்லை!"

என்னுடைய எழுத்துத் தேர்வு மார்க்குகள், அவர்களிடமிருந்த ஒரு கோப்பில் இருந்தன. அதை மூவரும் பார்த்துவிட்டு, திருப்தியாக தலையை ஆட்டிக் கொண்டனர்.

நந்தா: "என்ன விளையாட்டு தெரியும்?"

நான்: " நான் .... என்று ஆரம்பிப்பதற்குள், அவரே மீண்டும், "பம்பரம் விடுவியா? பட்டம் விடுவாயா" கில்லி?" என்றார். எல்லோரும் சிரித்தார்கள்.


நான் ஒருவாறு சிரித்துச் சமாளித்து, "நான் சதுரங்கம் ஆடுவேன்" என்றேன். சாரி மீண்டும் 'வெரி குட்' என்றார்!

சென்: " செஸ் போர்டுல மொத்தம் எவ்வளவு கட்டங்கள்?"

நான்: "அறுபத்துநான்கு"

சாரி: "வாட் ஈஸ் கிராண்ட் ஸ்லாம்?"

அதுவரையில் அந்த சொற்றொடரை நான் கேள்விப் பட்டதே இல்லை. அது செஸ் சம்பந்தப்பட்டதா அல்லது வேறு விளையாட்டுகள் சம்பந்தப் பட்டதா என்று கூடத் தெரியாது. (பிறகு என்னுடைய அப்பா, சீட்டாட்டத்தில் பிரிட்ஜ் ஆட்டத்திலும் கிராண்ட் ஸ்லாம் உண்டு, டென்னிஸ் விளையாட்டிலும் உண்டு என்று கூறினார்.)

மீண்டும் சமாளித்து, "எனக்கு செஸ் விளையாட்டில் பெரிய வார்த்தைகள் எதுவும் தெரியாது, விளையாடத் தெரியும், விளையாடுவது உண்டு - அவ்வளவுதான்" என்றேன்.

சென் அதற்குள், "பொது அறிவு இருக்கின்றதா என்பதையும் சோதிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்களப்பா ..." என்று சொல்லியபடி, " வேர் ஈஸ் அவர் ப்ரைம் மினிஸ்டர் நவ்?" என்று கேட்டார்.

அதற்குள் நந்தா குறுக்கிட்டு, "இருங்க முதலில் நம் பிரதமமந்திரி யார் என்று அவரைக் கேளுங்கள். அது தெரிகின்றதா என்று பார்ப்போம்" என்றார்.

நான்: "நம்முடைய பிரதமர், திருமதி இந்திராகாந்தி அவர்கள்."

நந்தா: "ஏன்? நேரு இல்லையா? அவருக்கு என்ன ஆச்சு?"

நான்: "திரு ஜவகர்லால் நேரு ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு மே மாதம் இருபத்தேழாம் தேதி புதன்கிழமை - காலமானார். அவருக்குப் பிறகு, திரு லால்பஹதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமரானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டிலிருந்து, இன்றுவரை திருமதி இந்திராகாந்தி அவர்கள் நம் பிரதமராக இருக்கின்றார்."

சென்: "அது சரி, அவர் இப்போ எங்கே இருக்கின்றார்?"

நான்: "அவர் புது டெல்லியில்தான் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்."

சென்: "நீ அப்படி நினைக்கவில்லை என்றால், எங்கே இருப்பார்?"

நான்: "அப்பொழுதும் புதுடில்லியில்தான் இருப்பார்!"

சென்: "நல்லா குழப்புறேப்பா நீ ... சரி இன்றைய ஹிந்து பேப்பரில் என்ன தலைப்புச் செய்தி?"

நான்: "Thousands of people die in Orissa due to floods"

சென் (யோசனை செய்து பார்த்துவிட்டு,) 'கரெக்ட்' என்றார்.

எல்லோரும்: "எங்களை ஏதாவது கேட்க விரும்புகின்றாயா?"

நான்: "ஒன்றும் இல்லை சார்."

நந்தா : "அப்போ நீ செல்லலாம் - உன் சர்டிபிகேட்டுகளை எடுத்துச் செல்."


நான் : "நன்றி சார்."
                     

19 கருத்துகள்:

  1. வணக்கம் கௌ அண்ணா.

    எல்லா மகளிர்க்கும் மகளிர்தின வாழ்த்துகள்!

    உங்களைப் போலவே உங்களை இன்டெர்வியூ செய்தவரும் போலத் தெரியுதே...அதான் அந்த ரைஸ் கில்லிங்க்!! ஹா ஹா ஹா..

    தண்டச் சோறு நு பல வீடுகள்ல திட்டுவாங்களே அப்படியான அர்த்தமோ??!! பரவால்ல த சோ க்கு இது கொஞ்சம் டீஸண்டா இருக்காப்ல...ஹா ஹா ஹா...

    இந்த ரைஸ் கில்லிங்க் உங்க கற்பனைதானே அண்ணா?!! நிஜமாவே அவர் அப்படிச் சொன்னாரா!?

    உங்களுக்கு நல்ல நினைவுத்திறன் அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ரைஸ் கில்லிங்க் நானும் சிரிச்சுட்டேன்...நல்ல நகைச்சுவையாளரோ அவர்?

    காம்பெட்டிஷன் சக்ஸஸில் நிறைய நல்ல அறிவுரைகள் இருக்கும் நேர்காணலில் நாம் எப்படி நடந்து கொள்ளனும் என்பதெல்லாம்...

    நல்லாவே குழப்பிட்டீங்க இ கா கேள்வியில் ஹா ஹா ஹா ...

    எதில் கேட்கலாம்னு எல்லாம் கேட்டுருக்காங்களே பரவால்ல...

    நல்ல அனுபவம் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஞாபக சக்தி இருக்கு உங்களுக்கு. அநேகமாப் போன ஜன்மத்து நினைவுகள் எல்லாமும் இருக்கணுமே! ஆனாலும் உங்கள் நேர்முகத் தேர்வு சுவாரசியமாக அமைந்து விட்டது. எனக்கு வங்கிகளில், மற்றும் ஈபியில் எல்லாம் க்ரூப் டிஸ்கஷன் மாதிரி நான்கு, நான்கு பேராகக் கூப்பிட்டு ஒரே கேள்வியை நால்வரிடமும் தனித்தனியாகக் கேட்டு பதில் வாங்கினார்கள். அருமையான பகிர்வு. முன்னாடி படிச்சேனா? போய்ப் பார்க்கணும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... இப்படில்லாம் கேட்காதீங்க. அப்புறம் போன ஜன்மத்துல உங்களுக்குக் கடனாக் கொடுத்த ஆயிரம் வராகன் அவருக்கு வருடம் தேதி முதற்கொண்டு ஞாபகத்துக்கு வந்துவிட்டால் திருப்பக் கொடுக்கவேண்டியிருக்கும்

      நீக்கு
    2. ஹி ஹி ஆயிரம் வராகன் எல்லாம் இல்லை. பத்தாயிரம் பொற்காசுகள் என்று நினைவு.

      நீக்கு
    3. நெல்லை, நீங்க கொடுக்கணும்னது நினைவில் இருக்கு. இதோ, அதோனு சொல்லிண்டே இருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!! கேஜிஜி கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தார். கொடுக்கலை!

      நீக்கு
  4. நல்ல நினைவு வைத்திருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் அது முதல் இண்டெர்வியூ அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இன்டர்வியூ இல்லை. அதற்கு முன்பே நான்கைந்து இண்டர்வியூக்கள் பார்த்திருக்கேன்.

      நீக்கு
  5. இன்டர்வியூ கேள்வி பதில்களை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா இது உண்மையில் இன்ரவியூதானா?:).. நம்ப முடியவில்லையே:).. அருமையாகப் பதில் சொல்லியிருக்கிறீங்க.. பயப்படாமல்..

    பதிலளிநீக்கு
  7. இன்டர்வியூ கேல்வி பதில்களை இன்னும் நினைவு வைத்து இருந்து சொல்வது பெரிய விஷ்யம்.
    உங்கள் நினைவாற்றல் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    நேர்மையான பதில் .

    பதிலளிநீக்கு
  8. கடைசியில் சான்றிதழ்களை எடுத்து போகச்சொன்னார்களா ?

    பதிலளிநீக்கு
  9. நினைவிலிருந்து ஒரு அனுபவம்....

    ரைஸ் கில்லிங்க் - ஹாஹா.....

    ஸ்வாரஸ்யமான நேர்காணல்!

    பதிலளிநீக்கு