புதன், 20 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 20 : புதிர் மனிதர்கள் !



அலேக் அனுபவங்கள் தொடரை படிப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு: இது தொடர் அல்ல, அதனால்தான் நான் ஒவ்வொரு பதிவின் கடைசியிலும் 'தொடரும்' என்று எல்லாம் எதுவும் போடுவது கிடையாது. ஆனால் தொடர்ந்து அடிக்கடி வரும்.

யார் எந்தப் பகுதியையும் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம், அல்லலுறலாம்!

ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கட்டுரைகள். அப்படி தப்பித் தவறி முந்தைய கட்டுரை எதற்காவது தொடர்பு இருந்தால், அந்த இடத்திலேயே சுட்டி கொடுத்துவிடுவேன், முந்தைய கட்டுரைக்கு.





எனக்கு ஆரம்பப் பள்ளி நாட்களிலிருந்து மிகவும் பிடித்த விஷயம், புதிர் கணக்குகள், அறிவை தீட்டிப் பார்க்கின்ற வினோத கணக்குகள் போன்றவை.

அதனால்தான் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவில் (முன்பு) கேட்கப்பட்ட புதிர்க் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் பதிந்தேன்.

என்னுடைய அப்பா நிறைய கேள்விகள் கேட்பார். எங்களை எல்லாம் சிந்திக்கத் தூண்டுவார். புகழ் பெற்ற காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் - என்றால் காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்ற கேள்வி,


ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் இருந்தன. சில குருவிகள் அங்கு பறந்து வந்தன, ஒவ்வொரு பூவிலும் ஒரு குருவி உட்கார்ந்தது. அப்போ ஒரு குருவிக்கு உட்கார பூ கிடைக்கவில்லை, எனவே ஒவ்வொரு பூவிலும் இரு குருவிகள் உட்கார்ந்தன, அப்படி உட்கார்ந்தால், ஒரு பூவிற்கு குருவி ஆசனம் ஆகின்ற பாக்கியம் இல்லை. எவ்வளவு பூ, எவ்வளவு குருவிகள் - என்பது போன்ற கேள்விகள் பல அவர் கேட்டு, நாங்கள் பதில் சொன்னது உண்டு.

என்னுடைய நான்கு அண்ணன்களில் இருவர், புதிர் கேள்விகளுக்கு விடை காண்பதில் பயங்கரக் கில்லாடிகள். புதிர் கேள்விகளுக்கு விடை காண்பது மட்டும் இல்லை, அவர்கள் அந்த வகை கேள்விகளுக்கு, எக்ஸ் ஒய் எல்லாம் உபயோகித்து, விடையை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று உதாரணங்கள் மூலம் விளக்கிக் கூறுவார்கள்.


அசோக் லேலண்டில், கியர் ஷாப் என்ற இயந்திரப் பகுதி. வண்டியில் பொருத்தப் படுகின்ற பல்சக்கரங்களை உருவாக்குகின்ற எந்திரங்கள் உள்ள பகுதி. இந்தப் பகுதியில் இன்ஸ்பெக்ஷன் பகுதியில் பல இளைஞர்கள் அந்தப் பகுதி பல் சக்கர வேலை உட்பட மற்றும் பல் வேறு துறை ஆர்வம் மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பகுதியில் ஆர் முரளி என்ற ஒரு நண்பரை சந்தித்தேன். அவர் ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வீணை வித்வானாக பணிபுரிந்த திரு ராகவன் என்பவருடைய பையன். ஆர் முரளி, எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வாசிப்பது போலவே வயலின் வாசிக்கக் கூடியவர்.

அவர் அறிமுகப்படுத்தி, அவருடைய மற்ற நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

அந்த நண்பர்களில் ஒருவர், ஐ ஏ எஸ் தேர்வுக் கேள்விகள் சில கேட்டார். என்னால் சிலவற்றிற்கு விடை கூற முடிந்தது. பல பதில்கள் தெரியவில்லை!

அவர் ஒரு நாள் என்னிடம் கேட்ட கேள்வி :

A is the father of B. But B is not A's son. Who is B?

கொஞ்சம் யோசித்து, பி இஸ் டாட்டர் ஆப் ஏ. என்றேன்.

இந்த பதிலுக்காகவே காத்திருந்தவர் போல, அவர், ஒரு காகிதத்தில்,


Shivaji is father of Shambaji.

Shivaji is Shambaji's father's --------------------

என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். கோடிட்ட இடத்தில் ஒரே வார்த்தைதான் எழுதவேண்டும் என்று ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுவிட்டுப் போனார்.

என்னால் உடனே அதற்கு அப்பொழுது விடை எழுத முடியவில்லை. பல மணி நேரங்களுக்குப் பின் விடை கண்டு பிடித்தேன்.

********************************************

இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங் டிப்பார்ட்மெண்டில் எனக்கு பி ராஜேந்திரன் என்று ஒரு நண்பர். புதிர்க் கணக்கு என்று எதை சொன்னாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வார். கேள்வி கேட்டதும், சற்றும் தாமதியாமல், "விடையையும் நீயே சொல்லிடுப்பா" என்பார்! (சென்ற ஞாயிறு பதிவின் முதல் கருத்துரையைப் பார்த்ததும் எனக்கு நண்பர் பி ராஜேந்திரனின் ஞாபகம் வந்தது)

**********************************************

புதிர்கள், விடுகதைகள் என்று எதைப் பார்த்தாலும் அவற்றை விடுவிக்கும் பெரு முயற்சியில் ஈடு படுகின்ற என்னை இடறி விழ வைத்தது, இந்தப் புதிர்:



ஆனால் இதனுடைய விடையை. எனக்கு முன்பாக என்னுடைய திருமதி கண்டுபிடித்துவிட்டார்!
   

14 கருத்துகள்:

  1. இன்னிக்கு எல்லாரும் பிஸி போல....

    புதிர்களுக்கு விடை அளிக்கும் இரு அண்ணன்கள்....

    வாழ்க்கையே பலருக்கு புதிராகத் தான் இருக்கிறது! :(

    இந்த வார அலேக் அனுபவங்கள் புதிர்களால் நிறைந்து இருக்கிறது. விடைகளைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாக இருக்கிறது.

    புதிரின் விடை சொல்வதற்கு முன் பக்கத்து கடையில் வடை சாப்பிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே எஸ் கோபாலகிருஷ்ணன் படம் போல இருக்கு --- வடையா ? விடையா ?

      நீக்கு
  3. கௌ அண்ணா வணக்கம்...ஆமாம் நான் லேட்டுஇன்று...5.30க்கு 4 பதிவுகள் ஹா ஹா ஹா ஹா ஹா....கில்லர்ஜி நடு ராத்திரி போட்டு அது வெயிட்டிங்க்...5.30க்கு தில்லி, அலேக், எபி புதன்...ஹா ஹா ஹா...ஓடி ஓடி களைச்சு போயிட்டு எபில புதிருக்கு மண்டைல பல்ப எரிய வைச்சு ஹிஹிஹி இப்ப வரேன் இங்க வந்தா இங்கும் புதிர்...!!

    நானும் புதிர்ல ஆர்வம் காட்டுவேன் இப்ப சமீபகாலமாக கொஞ்சம் டல்லாகிவிட்டது. இருந்தாலும் சுடோக்கு போடுவதை இன்னும் விடலை...அதுவும் மீடியம் வரைதான் போடுறேன்...கடினமானது இனிதான் முயற்சி செய்யனும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கௌ அண்ணா சென்ற ஞாயிறு முதல் கருத்து மீ தானே...அங்கிட்டு கரெக்டா கால் நடையாக...கால்நடை...நாலுகால்னு எழுதலை அம்ம்புட்டுத்தான் ...அதான் கண்டு பிடிச்சுட்டோம்ல....ஹா ஹா ஹா ஹா

    சரி அத விடுங்க இப்ப சிவாஜி குழப்புறாரு...என்ன விடைனு அந்த நம்பர் புதிருக்கு வரேன்...விடை சொல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  5. எனது தந்தையும் இதை விட பல புதிர்கள் போடுவார்... ஆனால் அந்த புதிரையே அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள பல நாட்கள் பிடிக்கும்... அது தான் புதிர்...! நன்றி...

    பதிலளிநீக்கு
  6. Shivaji is Shambaji's father's name

    இதை இங்கு கொடுக்க நினைத்து மறந்து போய் அப்புறம் விட்டுப் போய் இதோ இப்பத்தன்...

    நம்பர் மட்டும் முடியலை இன்னும் யோசிக்கனும்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சு டோ கு என் கணவர் போடுவார்.
    எனக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு
  8. சுடோகு முயற்சி தான் செய்வேன். புதிர்கள் பிடிக்கும் என்றாலும் பல புதிர்கள் அவிழ்க்க முடியாமலும் உள்ளன! :))))

    பதிலளிநீக்கு