அசோக் லேலண்டில், பயிற்சி ஆண்டுகள் (அதுவரை) மூன்று ஆண்டுகள். எங்கள் (எங்கள் ப்ளாக் அல்ல) குழுவிற்கு இரண்டரையாண்டுகள் ஆக்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. அதற்குப் பின் ஒரே வருட பயிற்சிக் காலம் ஆகியது என்று ஞாபகம்.
எங்கள் பயிற்சி காலத்தை, மூன்றாகப் பிரித்திருந்தார்கள்.
முதல் ஆறுமாதம் இண்டக்ஷன் ட்ரைனிங் (Induction training) பிறகு ஒன்றரை வருடங்கள் இன்டென்சிவ் ட்ரைனிங். (Intensive Training) இறுதியாக சிறப்புப் பயிற்சி. (Specialisation) முதல் ஆறுமாதப் பயிற்சியில், பாக்டரியில் இருக்கின்ற எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ இருந்து, அங்கு நடப்பது என்ன, அமைப்பு என்ன நிர்வாக ஏணியமைப்பு என்ன எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்து கொண்டதை, ஒரு பருமனான வேலைக் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் (Work Diary) பதியவேண்டும். பதிந்ததை அந்தந்த டிபார்ட்மெண்டு அதிகாரிகளிடம் காட்டி, கையெழுத்து பெறவேண்டும். பிறகு அதை பயிற்சி மையம் அதிகாரியின் பார்வைக்கு வைக்கவேண்டும். ஒரு பகுதிக்கு பயிற்சிக்கு அனுப்பினால், அந்தப் பகுதியின் பயிற்சிக் குறிப்பை, அடுத்த ஒருவாரத்துக்குள் எல்லா கையெழுத்துகளும் பெற்று, சுபம் பாடி முடித்திருக்கவேண்டும். இல்லையேல் அரியர்ஸ் கதை ஆகிவிடும்.
ஒருமுறை என்னையும் (மாட்டிய) மற்ற ஐந்தாறு பேர்களையும் பயிற்சி மைய தலைமையதிகாரி, கேட்பாஸ் போட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட்டார். 'போங்க, போய் மீதி இருக்கும் பகுதிகளுக்கான பயிற்சிக் குறிப்புகளை எழுதி முடித்து, நாளைக் காலை என்னிடம் கொண்டுவந்து காட்டுங்கள். அந்தந்த அதிகாரிகளின் கையெழுத்துகளை, நான் இந்த ஒருமுறை, ஆளனுப்பி வாங்கிக் கொடுக்கின்றேன். உங்கள் பெயர்களை 'பாட்ரிக்'கிடம் கொடுத்துச் செல்லுங்கள். இன்னும் ஒரு தடவை இந்தமாதிரி நிகழ்ந்தால், நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்' என்றார். பிறகு அந்த நிலை ஏற்படாமல் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டேன்.
இந்த வேலைக் குறிப்பு நோட்டு, பயிற்சிக் காலம் முழுவதும் ஒரு பெரும் சுமையாக இருந்தது. இன்டென்சிவ் ட்ரைனிங் என்றால் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இரண்டு முதல் நான்கு அல்லது ஆறு வார காலம் பயிற்சி. இறுதியாக ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு வருட காலம் சிறப்புப் பயிற்சி என்று அனுப்பப்பட்டோம் என்றால், அநேகமாக அதுதான் நம்முடைய பெர்மனெண்ட் வேலைக்கான பகுதி என்று முடிவாகிவிடும். பயிற்சிக் கால அளவு, நாட்கள் கொஞ்சம் வித்தியாசப் படலாம். ஆனால் இண்டக்ஷன் / இன்டென்சிவ் / ஸ்பெஷலைசேஷன் என்னும் ஏணிப்படிகளைக் கடந்துதான் மேலே வரவேண்டும்.
நான் அசோக் லேலண்டில் (அப்ரெண்டிஸாக ) சேர்ந்த தேதி, 9-12-1971. வியாழக்கிழமை.
அதே தேதியிட்டு வந்திருந்த குமுதம் இதழில், நான் எழுதியிருந்த ஒரு கடிதம் பிரசுரம் ஆகியிருந்தது. ஏற்கெனவே சுயதம்பட்டம் தட்டுபவன், இதுவும் சேர்ந்துகொண்டவுடன், ஒரே குஷி. இண்டக்ஷன் ட்ரைனிங் செல்லுகின்ற பகுதிகளில், இருப்பவர்கள் யார் கையிலாவது, மதிய உணவு நேரத்தில், குமுதம் பத்திரிகையைக் கண்டேன் என்றால், உடனே அவரிடம் பேச்சு கொடுத்து, அந்தக் குமுதத்தில், எண்பத்தேழாம் பக்கத்தில், என்னுடைய கடிதம் வெளியாகியிருப்பதைக் கூறுவேன். அவர்கள் ஆர்வத்துடன் கடிதத்தையும் படித்து, என்னுடன் பேசி, நண்பராகிவிடுவார்.
அசோக் லேலண்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாகசீன் சர்க்குலேஷன் க்ளப் உண்டு. அந்த வாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் யார் கையில் அந்தக் குமுதம் காணப்பட்டதோ அவர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் தங்கள் நண்பர்களிடம் எனனை அறிமுகப் படுத்தி வைத்தார்கள். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட சுயதம்பட்டம், பல நண்பர்களை எனக்கு அசோக் லேலண்டில் பெற்றுத் தந்தது.
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குவாட் எ சர்ப்ரைசு!
நீக்கு////மதிய உணவு நேரத்தில், குமுதம் பத்திரிகையைக் கண்டேன் என்றால், உடனே அவரிடம் பேச்சு கொடுத்து, அந்தக் குமுதத்தில், எண்பத்தேழாம் பக்கத்தில், என்னுடைய கடிதம் வெளியாகியிருப்பதைக் கூறுவேன். ////
பதிலளிநீக்குஹா ஹா ஹா சூப்பர்:)... எங்களை நாங்களே சொன்னால்தான் உண்டு, பின்ன அடுத்தவர்களோ வந்து புகழப்போகினம்:)...
அனுபவங்கள் சுவாரஸ்யம்..
நன்றி!
நீக்குகடிதத்தைப் பெரிசாக்கினாலும் மொபைலில் படிக்க முடியவில்லை, நாளை கொம்பியூட்டர் மூலம்தான் பார்க்க முடியும்.
பதிலளிநீக்குபாருங்க! படியுங்க!
நீக்குஆஆஆஆ மயக்கம் வருது!!! தீர்க்கதரிசி!!!
பதிலளிநீக்குபயிர்சி களம் ஸ்கூல்/கல்லூரி போல இருக்கே!! ஹா ஹா ஹா
கீதா
ஆமாம். கிட்டத்தட்ட அப்படித்தான்!
நீக்குகுமுதத்தில் உங்கள் கடிதம் ...அட!! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசைக்கிள் கேப்ல இதை எல்லாம் போற போக்குல சொல்லிடனும்....எல்லாம் ஒரு விளம்பரம்தேன்...ஹா ஹா ஹா
கீதா
அதே, அதே!
நீக்குஅட அப்பொவே இந்த சினிமா காப்பி விஷயம் எல்லாம் ஆரம்பிச்சாச்சா!!!
பதிலளிநீக்குகீதா
சினிமாக் காப்பி என்கிற விஷயம் சினிமாக்கள் பழைய புராணப்படங்கள் காலம் போய் சமூகப் படங்கள் எடுக்க ஆரம்பித்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.
நீக்குசுயதம்பட்டம் சில இடங்களில் அவசியம்தான்.
பதிலளிநீக்குஆஹா ! புரிதலுக்கு நன்றி!
நீக்குஅலேக் அனுபவங்கள் - சில பகுதிகளை முன்னரும் படித்திருக்கும் நினைவு. மீண்டும் படிக்க ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குசுய தம்பட்டம் - ஹாஹா... சில சமயங்களில் தேவை தான். நேற்று ஒருவர் என் மின்புத்தகம் பற்றி கேட்க, இப்படி தம்பட்டம் அடித்துக் கொண்டேன் - ஏதோ பெரிய எழுத்தாளர் போல! :)
பெரிய எழுத்தாளர் நீங்க என்று எங்களுக்குத் தெரியாதா!
நீக்குநண்பர்கள் சேர்ந்தால் அதுவே மிகப்பெரிய பலம்...
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே!
நீக்கு//சுயதம்பட்டம், பல நண்பர்களை எனக்கு அசோக் லேலண்டில் பெற்றுத் தந்தது. //
பதிலளிநீக்குஉங்கள் சேதியைச் சொல்லி நண்பர்களை கவர்ந்து விட்டீர்கள்.
ஆமாம்!
நீக்குஅந்தக்காலத்தில் வந்த படங்கள் இப்போது வரும் சில படங்கள் எல்லாம் காப்பி படங்கள்தான். ஆங்கில படம் என்று இல்லை, எல்லா மொழி படங்களில் இருந்தும் காப்பி அடிப்பார்கள்.
பதிலளிநீக்குகெட்டிக்காரன் புளுகை வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டீர்கள் உங்கள் சேதியில்.
நன்றி!
நீக்குநல்லா இருக்கு உங்களோட அனுபவங்கள். இப்படி எல்லாம் செய்து நண்பர்கள் ஆக்கிக் கொண்டதும் நல்லதே! வேற்று முகம் இல்லாத குழந்தை போலச் சிலர் எல்லோரிடமும் சட்டுனு பழகிடுவாங்க. நானெல்லாம் ரொம்ப யோசிப்பேன். :))))
பதிலளிநீக்குபொதுவாக எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வீக் பாயிண்ட் எது என்றால், ஒரு பிரபலம் அல்லது பிரபலத்தின் நெருங்கிய உறவினர் / சிநேகிதர் என்றால், கொஞ்சம் ஈடுபாடு காட்டுவார்கள். நண்பர்களைப் பெற அதுவும் ஒரு வழி.
நீக்குஅது என்னமோ தெரியாது! அந்தக் கால கட்டத்தில் குமுதம் பத்திரிகையில் எழுதுவதும், பெயர் வருவதும் ஓர் ஆசையாக இருந்தது எல்லோருக்கும். கிட்டத்தட்ட அந்தச் சமயம் தான் சுஜாதா மெல்ல மெல்ல குமுதம் மூலம் பிரபலம் ஆகிக் கொண்டிருந்தார். நானும் குமுதம் அரசு கேள்வி-பதிலுக்குக் கேள்வி அனுப்பி வெளியாகி இருக்கிறது. அவங்க அனுப்பிய குமுதம் இதழ் தூள் தூளாகும் வரை பத்திரமாக வைச்சிருந்தேன். :)))))
பதிலளிநீக்குஅட! நீங்களும் என்னை மாதிரிதான்!
நீக்கு