லேலண்டில் நான் முதன் முதலில் வடிவமைத்த பொருள் என்ன தெரியுமா?
லேலண்டு பஸ்ஸில் நீங்கள் நுழைந்து பார்த்தால், ஓட்டுனர் கைகளில் பிடித்திருக்கும் ஸ்டீரிங் வீலைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்டீரிங் வீலின் நடுவில், ஒரு பிளாஸ்டிக் கவர் இருக்கும். அந்த வட்ட வடிவ நீல நிற பிளாஸ்டிக் கவரின் மத்தியில் L என்கிற ஆங்கில எழுத்து ஒரு லோகோ அமைப்போடு இருக்கும்.
இதுதான் நான் முதன் முதலில் வடிவமைத்த சமாச்சாரம்.
அந்த கவருக்கு Steering Wheel Centre Motif என்று பெயர் வைத்து, அதற்கு F1130660 என்று ஒரு அடையாள எண் கொடுத்து அதாவது பெற்றெடுத்து, பெயர் கொடுத்து ஆளாக்கியவன் நானே!
அதற்கு முன்பு வடிவமைப்பு & அபிவிருத்தி பகுதியில் பல படங்கள் நான் வரைந்திருந்த போதும், அவைகள் என் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவில்தான் இருந்தது. அதிகாரிகள் சொல்படி, இன்ச் அளவுகளிலிருந்து மெட்ரிக் அளவு முறைக்கு மாற்றியது, யோசனை திட்ட மாற்றங்கள் என்று பல ரகமான மாற்றங்களுக்கு படம் வரைந்தது உண்டு.
என்னிடம் என்னுடைய மானேஜர் ஒரு ஸ்டீரிங் வீல் கொடுத்து, அதற்கு ஒரு கவர் டிசைன் செய்யச் சொன்னதும் அகமகிழ்ந்து போனேன்.
பிரிட்டிஷ் லேலண்டு டிசைன், ஜெர்மன் டிசைன் என்றெல்லாம் ஏதேதோ மானுவல் எல்லாம் பார்த்து, ஸ்டீரிங் வில் கேவிடி க்ரூவ் அளவுகள் எல்லாம் துல்லியமாக எடுத்து, நிறைய Sine/ cosine, Tan Theta கணக்குகள் எல்லாம் போட்டு, என்னுடனேயே வேலையில் சேர்ந்த நண்பர் தனசேகரன் என்பவரின் (இப்பொழுது இவர் உயிரோடு இல்லை) ஆலோசனையோடு அருமையான டிசைன் ஒன்றை உருவாக்கினேன்.
கருமையான பின்னணியில், வெண்மையான லேலண்டு எம்ப்ளம் மத்தியில் உள்ளது போன்று அமைப்பு. பிளாஸ்டிக்கில் இதை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன்.
Silver foiling, embedded moulding என்று கனவுகள் கண்டு கொண்டிருந்தேன்.
என்னுடைய மேனேஜர் ஒரு சப்ளையரை வரவழைத்தார். Susan Indcom கம்பெனியின் பார்ட்னர் என்று ஞாபகம்.
அவர் படத்தைப் பார்த்தார், பிறகு என்னைப் பார்த்தார்.
"புதுசா?"
"ஆமாம்"
"எப்போ சேர்ந்தீங்க? "
(ஓஹோ இவர் புதுசா என்று கேட்டது என்னுடைய டிசைனை இல்லையா!)
பதில் சொன்னேன்.
"இது முதல் டிசைனா?"
"ஆமாம்"
அவர் என்னுடைய மேனேஜரின் ரூமுக்குச் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு வெளியே வந்து, நான் அளவுகள் எடுத்து வைத்திருந்த ஸ்டீரிங் வீலையும் அளவு குறிப்புகளையும் என்னிடமிருந்து அபகரித்துச் சென்றுவிட்டார்.
இரண்டு வாரங்கள் கழித்து, என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டார். சென்றேன். அவர் மேஜை மீது அந்த சப்ளையர் கொடுத்த 'முழு நீல' கவர் இருந்தது. "சப்ளையரால் இப்படித்தான் சப்ளை செய்ய முடியுமாம். நீ இதன் அளவுகளைத் துல்லியமாக எடுத்து, நீ வடிவமைத்த படத்தை இதைப் போல மாற்றிவிடு"
மாற்றினேன்.
வடிவமைத்தது ஒன்று, வந்தது முற்றிலும் வேறு ஒன்று.
இப்போ கூட, சத்தமிட்டு என்னைக் கடந்து செல்லும் லாரிகளிலோ அல்லது நான் பயணிக்கின்ற பழைய பேருந்துகளிலோ ஸ்டீரிங் வீலைப் பார்க்கும்போது எனக்கு இந்த நினைவுகள் எல்லாம் ஒருமுறை வந்து போகும்.
நீங்க அடுத்த முறை ஸ்டீரிங் வீலைப் பார்க்கும் பொழுது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் புரை ஏறுகிறதா / தும்மல் வருகிறதா என்று பார்க்கிறேன்!
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா
பதிலளிநீக்கு//அந்த கவருக்கு Steering Wheel Centre Motif என்று பெயர் வைத்து, அதற்கு F1130660 என்று ஒரு அடையாள எண் கொடுத்து அதாவது பெற்றெடுத்து, பெயர் கொடுத்து ஆளாக்கியவன் நானே!//
வாவ்! அண்ணா சூப்பர்! அப்ப சொல்ல முடியாத வாழ்த்துகள் இப்ப சொல்லிக் கொள்கிறோம்
கீதா
அப்ப சொல்ல முடியாத, நன்றி இப்போ சொல்லிக்கிறேன்!
நீக்குநிறைய Sine/ cosine, Tan Theta கணக்குகள் எல்லாம் போட்டு,//
பதிலளிநீக்குஅண்ணா அதான் உங்களால புதிர் எல்லாம் சூப்பரா விடை சொல்ல முடியுது!!!
நீங்க வடிவமைத்த டிசைன் கலர் எல்லாம் சூப்பர் அண்ணா...
//வடிவமைத்தது ஒன்று, வந்தது முற்றிலும் வேறு ஒன்று.//
வருத்தம் அளித்த விஷயம் கௌ அண்ணா..இது உங்களின் திறமையை கீழே தள்ளுவது போன்ற விஷயம் இல்லையா? வடிவமைத்ததுக்குப் பாராட்டு கூட இல்லை அதுவும் நீங்கள் புதியவர் வேலையில்..
இப்படித்தான் பல இடங்களிலும் பலரது திறமைகள் சுய சிந்தனைகள் மதிக்கப்படுவதில்லை.
கீதா
மாற்றி அமைக்கப்படும் பொருளின் விலை என்பது ஒரு முக்கிய அம்சம். விலை ஏற்றம் என்றால், கம்பெனியின் தலைமை அதிகாரி வரை சென்று அனுமதி வாங்கவேண்டும். விலை குறையும் என்றால் பகுதி மேலாளர் அனுமதி அளித்தால் போதும்.
நீக்குகண்டிப்பா உங்களுக்குப் புரை ஏறும் கௌ அண்ணா! கூட யாரேனும் இருந்தால் கண்டிப்பா இதைப் பற்றி உங்களைப் பற்றிச் சொல்லவும் செய்வேன் காட்டி...
பதிலளிநீக்குகீதா
நன்றி!
நீக்குஇனிமேல்தான் வெளியில் கிளம்புவேன் நிச்சயமாக புரையேறும் ஜி
பதிலளிநீக்குநன்றி !
நீக்குநம்புவீங்களோ மாட்டீங்களோ அசோக் லேலண்ட் என்னும் பெயரைப் பார்த்தாலே எனக்கு உங்க நினைவும், இன்னொரு விஸ்வநாதன் நினைவும் தான் வரும். ஆகவே உங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி புரை ஏறி இருக்கணும். :)))))
பதிலளிநீக்குஆஹா ! புரிந்தது! அவர் எப்படி இருக்கிறார்? முகநூலில் நண்பர் வட்டத்தில் இருக்கிறார். ஆனால் முகநூல் பக்கமே வருவதில்லை!
நீக்குஅவரை நான் முகநூலில் பார்த்ததே இல்லை. எப்போதேனும் வாட்சப்பில் ஏதேனும் மெசேஜ் அனுப்புவார். பண்டிகைகள், பிறந்த நாள், கல்யாண நாள் வாழ்த்துகள் வரும்!:))))
நீக்குகஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டு வந்ததை மாற்றும்படி நேர்ந்தது சிரமம் தான்! என்றாலும் இன்னமும் அது உங்கள்பெயரைச் சொல்லிக் கொண்டு உலா வருவதில் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியும் கூட!
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு8.25 மணிக்கு பொறை ஏறியது. யாரு நெனச்சீங்க?
பதிலளிநீக்குஅனுஷ்காவாக இருக்கலாம்.
நீக்குநீங்க அனுஷ்காவ நெனச்சா அவங்களுக்குத்தானே புரை ஏறும்!
நீக்குநான் இல்லை நிச்சயமா! அப்போ வீடு சுத்தம் செய்து கொண்டிருந்ததால் வழக்கமான குருக்ஷேத்திரம் இரண்டு பேருக்கும்! இங்கே வராதீங்கனு நான் சொல்ல! இதை மட்டும் எடுத்துக்கறேன்னு அவர் வர!க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டு இருந்தோம். :))))))
நீக்குகண்டிப்பாக உங்கள் ஞாபகம் வரும்...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇத்தனை நாட்கள் கவனித்ததில்லை, இனிமேல் லேலண்ட் பஸ்ஸில் ஏறினால் நிச்சயம் பார்ப்பேன், உங்களையும் நினைத்துக் கொள்வேன்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குவடிவமைத்தது ஒன்று, வந்தது முற்றிலும் வேறு ஒன்று.//
பதிலளிநீக்குநீங்கள் வடிவமைத்தது அப்படியே ஏற்றுக் கொள்ளபடவில்லை என்றால் வருத்தம் இருந்து இருக்கும்.
அவர்கள் சொன்னபடி
மாற்றங்கள் செய்து கொடுத்தது நீங்கள் தானே!
அந்த பெருமை உங்களுக்குத்தான்.
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
நீங்க அடுத்த முறை ஸ்டீரிங் வீலைப் பார்க்கும் பொழுது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.
கண்டிப்பாய் நினைத்துக் கொள்வேன்.
முன்பு ஒரு பதிவில் இந்த ஸ்டீரிங் வீலை நீங்கல் வடிவமைத்தது பற்றி பாலசுப்பிரமணியம் சார் குறிப்பிட்டு இருந்தார்கள் இல்லையா?
நன்றி. கடைசி இரண்டு வரிகள் புரியவில்லை.
நீக்குஇந்த லோகோவைப் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை பார்க்கும்போது உங்கள் நினைவு வருகிறதான்னு பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅடிக்கடி பார்த்த லோகோ... அடுத்த முறை பார்க்கும்போது நிச்சயம் உங்கள் நினைவு வரும்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு